பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/731

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரு வளர்ச்சி 711

1966இல் இராகவன் என்பார் கருவின் ஊட்டச் சத்துத் தன்மைகளை விரிவாக ஆராய்ந்து பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தினார். வர் கருத்துப் படி முதிர்ந்த கரு குறைந்த அளவு ஊட்டச்சத்துக் கொண்ட ஊடகத்தில் நன்கு வளர்கிறது. ஆனால் இளம்கரு மிகு ஊட்டச்சத்து உள்ள ஊடகத்தில்தான் வளர்கிறது. இந்தத் தனித்தன்மை கொண்ட ஊட்டச்

  1. த்தாக ஊடகத்தில் கேசின் ஹைட்ரோலேட் (casein

mydrolate) இளநீர், ஈஸ்ட் பிழிவு (yeast extract) வைட்டமின் அமினோ அமிலங்கள் போன்ற வூக்கிகள் சேர்க்கப்பட வேண்டும் என்பது தெரிய வந்தது. இதுவரை கருமுட்டையையோ 2-4 செல்கள் கொண்ட இளம் கருவையோ தனியாகப் பிரிக்கும் அல்லது வளர்க்கும் வழிமுறைகள் கண்டு பிடிக்கப்படவில்லை. உயி வளர் நீரில் ஊட்டச்சத்தும் ஊடகமும். பிருள்ள செல்கள் அல்லது தாவரங்களின பகுதிகள் போன்றவற்றை ஊடகத்தில் வளர்க்கும்போது அவற்றிற்கு எவ்வகை அளிக்க வேண்டுமென்பதை ஆய்வு ஊட்டச்சத்து செய்ய வேண்டியுள்ளது. விதையை நனைத்து ஈரமாக வைத்திருந்தாலே முளைத்துவிடு கிறது. நீர்ம ஊடகம் இளங்கருவிற்குச் சாதகமான தென்பது பொருத்தமானதேயாகும். குறிப்பாக இயற்கையில் நீர்ம முளைசூழ்தசையால் சூழப்பட்ட கருக்களை, நீர்ம ஊடகத்தில் வளர்ப்பதே சிறந்தது. கரு வளர்ந்து ஒரு நிலையை அடைந்தவுடன் திண்ம ஊடகத்திற்கு மாற்றிவிடுவர், கார்போஹைட்ரேட் டாகச் சுக்ரோஸையே பெரும்பாலும் கார்பன் வழங்கி யாக ஊடகத்தில் பயன்படுத்துவர். கருவின் வளர்ச்சியை அதிகரிக்க கேசின் ஹைட்ரோலேட், குளுப்டாமின் போன்ற அமினோ அமிலங்களி லான்றை ஊட சுத்துடன் சேர்க்கலாம். 9 பல வைட்டமின்களும் கருவளர்ப்பில் பயன்படு கின்றன. கருவின் வளர்ச்சியை அதிகரிக்க பை யோட்டின், தயாமின், பேன்டோத்தெனிக் அமிலம், நிகோட்டினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், மயோ ஐனோசிட்டால் முதலியவையும் உதவு கின் றன. இயற்கையில் கருவளர்வதற்குத் தேவையான ஊட்டப் பொருள்களை முளைசூழ்தசை அளிக்கிறது. எனவே அதையே ஊடகத்தில் பயன்படுத்தக் கருதிப் பலரும் இளநீரைப் பயன்படுத்தி வெற்றி கண்டனர். வளர் கருவளர்வதற்கான ஊட்டச்சத்து. வளரும் கருவின் வளர்ச்சிக்கு ஏற்பவேறுபட்ட அளவில் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. வளர்ச்சியை ஊக்குவிக்க வூக்கிப் பொருள்கள் (growth promoters), தாவரச்சாறு கள் முதலியன பல்வேறு வகையில் பயனளிக்கின்றன. எடுத்துக்காட்டாக, கேலஸ் தோன்றுவதற்கு ஐ.ஏ.ஏ உதவினாலும் இது கருவளர்ச்சியை ஊக்குவிப்ப தில்லை. ஜிப்பெரிலின் வேரின் வளர்ச்சியை ஊக்குவிப் பது அறியப்பட்டது. சைட்டோகெனின் வகையைச் சேர்ந்த வளர்வூக்கிகள் கேலஸ் பல்வேறு மாற்றங் கரு வளர்ச்சி 711 களை அடைவதற்கும், கருவுரு (embryoid) தோன்று வதற்கும், நாற்றுகள் உண்டாவதற்கும் உதவுகின்றன. அண்மைக்காலத்தில் திசு வளர்ப்பில் வளர்வூக்கிப் பொருள்களின் பங்கு பெருகியுள்ளது. ஊடகத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளும் அதன் வேதித் தன்மைக்கேற்பச் செயல்படுகின்றது. களில் கரு வளர்ப்பின் பயன்கள். பொதுவாக, தாவரங் கருவுற்றபின் கருவளர்ந்து பாகுபாடடைந்து விதைகளாக வளருவது தடைப்படுவதுண்டு. இத் தகைய தாவரங்களில் இளங்கருவை மட்டும் தனிப் படுத்தி அதை ஆய்வுக் குழாயில் நாற்றாக வளரும் வரை வளர்க்கும் பல முயற்சிகள் வெற்றிகரமாசச் செய்யப்பட்டுள்ளன. விதையுறக்கத்தையும், வாழுங் காலத்தையும் விதைகளின் நிலையால் உறக்க குறைத்தல். (dormancy ) விதை முளைத்தலில் தாமதம் ஏற்படு கிறது. உறங்கு நிலைக் காலத்தைக் குறைத்தோ முழுதுமாக அகற்றியோ கருக்களை முளைக்க வைக்கலாம். ராண்டால்ஃப் (Randolph) என்பார். ஐரிஸ் தாவரத்தின் பூக்கும் காலத்தைக் கருவளர்ப் பின் மூலம் மூன்று ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டு களாகக் குறைத்துள்ளார். ரோஜாவின், ஆண்டிற்கு ஒரு முறை பூக்கும் பண்பைக் கருவளர்ப்பின் மூலம் ஆண்டிற்கு இருமுறை பூக்கும் வகையில் மாற்றி அமைக்க முடியும். நிக்கல் என்பார் ஆப்பிள் விதையிலிருந்து கருவைப் பிரித்து ஊடகத்தில் வளர்த்தபோது அது 48 மணி நேரத்தில் வளர்ந்து நான்காம் வாரத்தில் நடுவதற் கான நாற்றைத் தந்தது. இந்த நாற்று ஐந்தாம் மாதத்தில் ஒரு மீட்டர் உயரத்திற்கு வளர்ச்சி அடைந்தது. ஆனால் மண்ணில் போட்ட விதை முளைப்பதற்கோ நான்கு மாதம் ஆகும். இக்கண்டு பிடிப்பு, கருவளர்ப்பின் தேவையை உணர்த்துகிறது. கருவளர்ப்பின் மறறொரு பயன், விதைகளின் வாழும் தன்மையை அறிவதாகும். விதைகளின் வாழும் தன்மையை இயற்கையில் காணவேண்டுமெனில் விதைகளின் உறங்குநிலை முடியும்வரை காத்திருக்க வேண்டும். பார்டோன் 1961 இல் தனித்து எடுக்கப் பட்ட கருவளர்ச்சியின் மூலம், விதைகளின் வாழும் தன்மையை விரைவில் காணலாம் என்று கூறி உள்ளார். கருவளர்ப்பின் மூலம் அரிய பயன் தரக்கூடிய கலப்புயிரிகளையும் உருவாக்கலாம். இரு சிற்றினங் களைப் பயன்படுத்தி விரும்பும் பண்புகளைக் கொண்ட புதிய கலப்பினத்தைப் பெறுவது அறிவியலின் புதிய முயற்சியாகும். புதிய கலப்பினத்தை உருவாக்கும் முயற்சிகள் பெரும்பாலும் வெற்றியளிப்பதில்லை. இதற்குக் காரணம் கலப்பினங்களின் கருவில் தோன்றும் பல்வேறு குறைபாடுகளேயாகும். முக்கிய மான குறைபாடுகளாகக் கூறப்படுவன ஒத்த குரோம