716 கருவி மின்மாற்றி
716 கருவி மின்மாற்றி கோட்டிற்குச் சார்பான மையநிலையை விளக்க ஒரு கருவியும் உயரத்தைக் குறிப்புணர்த்த ஒரு கருவியும் இருக்கும். இவற்றோடு எல்லை எச்சரிப்புக் கருவிகளும் இணைந்து செயல்படுகின்றன. அலை வரிசையைக் கொண்ட நிலையுணர்த்தி. காற்றெதிர்த்திசையில் ஓடுபாதை யிலிருந்து ஏறத்தாழ 1000 அடி பின்னால் அலை வாங்கிகள் பொருத்தப்படுகின்றன. ஓடுபாதையின் வளைவுகளாலும் பிற தடைகளாலும் திருப்பி அனுப்பப்படும் குறிப்பு அலைகள் அலைவாங்கியில் குறுக்கீடுகளை ஏற்படுத்தலாம். இக்கருவிகளில் இரு வகைக் குறிப்பு அலைகள் உருவாக்கப்படுகின்றன. முதல் வகை 90 H மற்றும் 150 Hz அதிர்வெண் உடைய இருபக்க தாகும். எஞ்சியதில் 150Hz மற்றும் 90 Hz அதிர்வெண்தான் என்றாலும் இரு அலைகளும் 180° நிலைவிலக்கம் பெற்றவையாக உருவாக்கப்படு கின்றன. இக்குறிப்பு விமானத்தின் வாங்கிகள் கண்டுகொள்கின்றன. வடிகட்டுங்கருவிகள் மூலம் 90 Hz மற்றும் 150 Hz அலைவரிசைகள் தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன. பிறகு இவ்விரு அலைகளின் வீச்சுகள் ஒப்பிடப்படுகின்றன. வீச்சுகள் சமமாக இருந்தால் விமானம் சரியான பாதையில் செல்வது உணரப்படுகிறது. பாதையை விட்டு விமானம் விலகியிருக்குமேயானால் வீச்சுகள் இருக்கா. பொதுவாக விமானம் ஓடுதளத்தைவிட்டு 350 அடி விலகினால் விமானத்தின் நிலையுணர்த்துங் கருவியின் முள் ஒரு முழு வட்டமடித்துவிடுமாறு அமைக்கப்படுகிறது. அலைகளை சிக்கல்கள் இல்லாமல், வளைவுகளற்ற நன்கு பறக்கும் வழிகளை உருவாக்கித் தர நான்குவகை அலைவரிசைகள் பயன்படுகின்றன. அவை ஒத்த குறிப்பு அலைத்திட்டம், மைய ஒப்புநோக்கு அலைத் திட்டம், பக்க அலை ஒப்புநோக்கு அலைத்திட்டம், ஈர்ப்பு. விளைவு ஒப்புநோக்கு அலைத்திட்டம் என்ப வையாம். இவை அனைத்திலும் மைய ஒப்புநோக்கு அலைத்திட்டமே பெரிதும் பயன்படுகிறது. ஓடுபாதை எல்லை எச்சரிப்புக் கருவிகள் (beacon). இரண்டு அல்லது மூன்று எச்சரிப்பு அலைக்கற்றைகள் விமானம் நெருங்கும் பகுதியின் எல்லைகளைக் குறிப்பாக உணர்த்துகின்றன. ஓடுபாதையிலிருந்து 7 கி.மீ. தாலைவில் வெளி எச்சரிப்புக் கற்றை இருக்கும். தன் அலைகள் 400 Hz அதிர்வெண் உடையவை ஆகும். இடைநிலை எச்சரிப்புக் கற்றை யிலிருந்து ஏறத்தாழ 3,500 அடி தொலைவில் இருக்கும். இக்கற்றைகளின் அதிர்வெண் 1,300 Hz. இறுதி எச்சரிப்புக் கற்றை இறங்கு பாதையைத் தரையில் இருந்து 100 அடி உயரத்தில் வெட்டும் படி அமையும். இதன் அதிர்வெண் 3,000 Hz ஆகும். இக்கற்றைகளின் ஊடாகப் பறக்கும்போது கற்றைகளின் அலைகளால் விமானத்தின் உள்ளே நிறுத்து' சரிவு நிலை 45 45 247 வீச்சு off கருவி குறியீடு 45 45 ress to test படம் 1. நவீன குறுக்குக் குறிமுள் கருவி ஒரு விளக்கு எரியும், அலைகளின் அதிர்வெண்ணுக்கு ஏற்ப விளக்கு ஒளிரும் காலம் வேறுபடுகிறது.இந்தக் கால அளவைக் கொண்டு எந்த எல்லை எச்சரிப்புக் கற்றை வழியாக விமானம் பறக்கிறது என்பதை அதிலிருந்து ஓடுபாதையின் வயி. அண்ணாமலை -றுதி செய்யலாம். தாலைவைக் கணக்கிடலாம். கருவி மின்மாற்றி மாறு மின்னோட்டக் கருவிகளின் அளவு எல்லைகளை அதிகரிப்பதற்குக் கருவி மின்மாற்றிகளை (instrument transformers) அவற்றோடு சேர்த்துப் பயன்படுத் துவர். இந்த மின்மாற்றிகள் தொடர் நிலையில் இணைக்கப்படும் மின்னோட்ட மாற்றிகள், மின்னழுத்த மாற்றிகள் என இருவகைப்படும். மின் னோட்ட மாற்றிகள் மின்னோட்ட அளவு எல்லையை அதிகரிக்கவும் மின்னழுத்த மாற்றிகள் மின்னழுத்த எல்லையை அதிகரிக்கவும் பயன்படுகின்றன. அளவீட்டு எல்லைகளை அதிகரிக்கப் படும் ஏனைய கருவிகளைவிடக் கருவி மாற்றிகளால் கீழ்க்காணும் நன்மைகள் உண்டு. பயன் மின்