722 கருவி முறைப் பகுப்பாய்வு
722 கருவி முறைப் பகுப்பாய்வு வகைக்கு, 0.5% விகிதப் பிழையும் 20 நிமிடம் கோணப்பிழையும் அனுமதிக்கப்படும். கருவியின் மின் மாற்றிகளை நுட்பமாக ஆய்வு செய்து அவற்றின் விகிதம் மற்றும் தறுவாய்க் கோணத்தைத் தக்க கருவிகள் மற்றும் முறைகள் மூலம் அமைக்க வேண்டும். கருவி முறைப் பகுப்பாய்வு எஸ். சுந்தரசீனிவாசன் 1930க் வேதிச் சேர்மக் கருவிமுறைப் பகுப்பாய்வில் குப் பின்னரே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட் டது. அதன் விரைவான வளர்ச்சி பகுப்பாய்வு வேதி யியலில் இன்று வியத்தகு மாறுதலை ஏற்படுத்தி யுள்ளது. கருவிமுறைப் பகுப்பாய்வில் (instrumental analysis) உரிய கருவியைப் பயன்படுத்திப் பகுப்பாய் வில் ஒரு முக்கிய கூற்றை அளக்கலாம் அல்லது பகுப் பாய்வு முழுவதையும் நிகழ்த்தலாம். கருவிமுறைப் பகுப்பாய்வு என்பது தன்னியக்கமாக்கப்பட்ட (auto- mated) வேதி வினைகளிலிருந்து தொடங்க, கொடுக் கப்பட்டுள்ள பொருள் குறிப்பிட்ட வகை ஆற்றலோடு எத்தகைய மாற்றத்தை அடைகிறது என்பதை அளக் கும் வரை அமைகிறது. பின் முறை முன் முறையி லிருந்து வேறுபடும். கருவிமுறைப் பகுப்பாய்வில் இடம் பெறும் கருவிகள் விலை குறைந்த எளிய pH அளவு கருவி முதலாக விலையுயர்ந்த பல நிரலியல் (spectro- photometer) கருவிகள் வரை உள்ளன. பொதுவாக மிகச் சிறந்த கருவியைப் பயன்படுத்தும்போது, பகுப் பாய்விற்கு மிகுந்த கவனம் தேவையில்லை. மாறாகத் தொடக்கத்தில் பகுப்பாய்வு முறையைத் திட்டமிடப் போதிய காலமும் கவனமும் தேவை. ஆற்றல், (வேதிப்) பொருளைத் தாக்கி ஏற்படுத் தும் விளைவின் அடிப்படையில் எழுந்ததே கருவிப் பகுப்பாய்வு. இவ்விளைவின் அடிப்படையை அறியப் பொருளின் அமைப்பைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். பொருள் என்பது சிக்கலான ஆனால் ஒழுங்காக அமைக்கப்பட்ட, பொருண்மையும் மின் சுமையும் உடைய அணுக்களாலானது. அணு என்பது எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் போன்ற சிறு துகள்களால் ஆனது. அணுக்கள் இணைந்து மூலக்கூறுகளைத் தரும். இவ்விணைப்பில் பங்கு பெறுபவை அணுக்களின் எலெக்ட்ரான்களும் ஆற்றல் நிலையும் ஆகும். ஒரு வேதி வினை நிகழும்போது, எலெக்ட்ரானை இழக்க லாம் அல்லது பெறலாம். அணுக்களிடையே எலெக்ட் ரான்கள் பங்கிடப்படலாம். எனவே மூலக்கூறு, படிகம், திண்மம், நீர்மம், வளிமம் ஆகியவற்றில் உள்ள அணுக்களின் ஒவ்வோர் அமைப்பையும் தனித்த எலெக்ட்ரான் ஆற்றல் நிலை மூலம் குறிப்பிடலாம். மூலக்கூறுகளின் அமைப்பைப் பொறுத்து ஒரு பொருள் திண்மமாக, நீர்மமாக அல்லது வளிமமாக அமையும். இவ்வமைப்பு எலெக்ட்ரான் ஆற்றல் நிலையை விளக்கும் வகையில் உள்ளது. ஒவ்வொரு பொருளும் அதன் சேர்க்கை வீதத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட ஆற்றல் நிலையைப் பெற்றிருக்கும். இதைப் புலப்படுத்த, வெளி ஆற்றல் ஒரு பொருளில் தோற்றுவிக்கும் விளைவு உதவுகிறது. கருவிமுறைப் பகுப்பாய்வில் பயன்படும் வெளி ஆற்றலைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். அவை, மின்காந்தக் கதிர்வீச்சு (electro magnetic radiation), மின் மற்றும் காந்தப் புலன்கள் (electric and mag. netic fields), வேதி ஈர்ப்பு மற்றும் வேதி வினைத் திறன் (chemical affinity and reactivity), வெப்ப ஆற்றல், எந்திர ஆற்றல் ஆகியன. இவ்வகைகள் பொருளோடு வினையுறும் விதத்தில் வேறுபடும். மேலும் இவை தரும் தகவல்களும் வேறுபட்டுக் காணப்படும். இவற்றை அட்டவணைகள் புலப் படுத்தும் (அட்டவணை 1-5). மின்காந்தக் கதிர்வீச்சு. ஒளியியல் முறையில் ஒரு பொருள் உட்கவரும் அல்லது உமிழும் மின்காந்தக் கதிர்வீச்சு அளக்கப்படுகிறது. எந்த அலை நீளத்தில் இக்கதிர்வீச்சு உட்கவரப்படுகிறது அல்லது உமிழப் படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு பண்பறி பகுப்பாய்வு செய்யலாம். அவ்வாறே உமிழப் பட்ட அல்லது உட்சுவரப்பட்ட கதிரின் அளவு அளவறி பகுப்புக்குப் பயன்படும். பகுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மின்காந்தக் கதிர்வீச்சுப் பகுதியின் சராசரி ஆற்றலைப் பொறுத்து ஒளியியல் முறைகளைப் பல வகையாகப் பிரிக்கலாம். மின்காந்தக் கதிர்வீச்சின் பகுதிகளான ரேடி ரேடியோ, அகச்சிவப்பு, புறஊதா, கண்ணுறு மற்றும் எக்ஸ் கதிர்கள், வேதிப் பகுப்புக்கு ஏற்றவை (அட்ட வணை 1,2). வேதி வினைத்திறன். வேதி வினைகள் உட்புறத் தகுதி பெற்றுள்ளன. வினையின் குறிப்பிடத்தக்க தனித்தன்மையின் அடிப்படையில் நீர்மம், கூழ்மம் (slurry) ஆகியவற்றின் சேர்க்கை வீதத்தைக் சுண் டறியலாம். மின் அல்லது காந்தப்புலன் பொருள்களில் தானே நிலவும் அல்லது அல்லது கொடுக்கப்பட்ட மின் அல்லது காந்தப் பண்பின் வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு பொருள்களின் சேர்க்கை வீதத்தைக் கண்டறிய து ஒரு மிகச் சிறந்த முறையாகும். பொருளை உரிய மின் அல்லது காந்தச்சுற்றில் தகுந்தபடி இணைத்து, அதில் தோன்றும் தனித்