பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/751

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவியல்‌ ஆய்வுமுறை 731

இவ்வியல் உதவும். உறுப்புகள் உண்டாவதையும் என்பதை வளர் உறுப்புகளையும் நிர்ணயம் செய்வது எது இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் வில்ஹெல்ம் ரூக்ஸ் என்னும் கருவியல் வல்லுநர் ஆய்வு முறைக் கருவி யல் முறையைக் கையாண்டு தீர்மானித்தார். கரு மிக நுண்ணியதாக இருக்குமாதலால் அதை பிரிக்கலோ, அறுக்கவோ, பகுதிகளைப் சேர்க்கவோ ஆற்றல்மிக்க நுண்ணோக்கிகளைக் கொண்டுதான் ஆய்வுகளை நடத்தவியலும். மீண்டும் கருவியல் ஆய்வு முறைகளில் சூழ்நிலை மாற்ற முறை, செல்களைப் பிரித்தல், பிரித்த செல்களை கருவில் வேறோர் இடத்தில் ஒட்டுதல், திசுவளர்ப்பு என நான்கு வகையுண்டு. கருவளர்ச்சியின்போது இயற்கைச் சூழ்நிலையை மாற்றுவது. தவளையின் முட்டைகள் நன்னீரில் மட்டுமே வளரும். நன்னீருக்குப் பதிலாக லித்தியம் போன்ற உப்புக் கரைசல் சேர்த்தால் முட்டைகளி லிருந்து வெளிவரும் தலைப்பிரட்டைகள் அமைப்பில் மாறுபடும். இரண்டு கண்கள் சேர்ந்து ஒரு கண்ணாக அமைந்திருக்கும். இதேபோன்று நீரின் தட்ப வெப்ப நிலையை மாற்றினாலும், ரேடியம் கதிர், எக்ஸ் கதிர் ஆகியவை கருவின்மீது செலுத்தப்பட்டாலும் உறுப்பமைப்புகளில் மாறுபாடுகள் உண்டாகும். உண் கருவளர்ச்சியின்போது சில செல்களைக் களைந்து விட்டால் அச்செல்கள் உண்டாக்கும் உறுப்பு வளர்வ தில்லை. எடுத்துக்காட்டாக கண் உண்டாக்கும் செல்களைக் களைந்து விட்டால் கருவில் கண் டாவதில்லை. இவ்வாறு பிரித்த செல்களை வேறோர் இடத்தில் ஒட்டினால் அவ்விடத்தில் இயற்கையாகத் தோன்றும் உறுப்புகளுடன் கண்ணும் உண்டாகும். சில செல்களைப் பிரித்தெடுத்து ஆய்வுக்கூடத்திலும் வளர்க்கலாம். சில கரு முட்டைகளில் பிளவுப் பெருகலுக்கு முன்பே உறுப்பு நிர்ணயப் பகுதிகள் தீர்மானிக்கப் படுகின்றன. வேறு சில முட்டைகளில் பிளவிப்பெரு கவின்போது காலப் போக்கில் தீர்மானிக்கப்படு கின்றன தவளையின் கருமுட்டை இரண்டு, நான்கு. எட்டு, பதினாறு என்று பிளவுபட்டு வளர்ந்து வரும் செல்களில் ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்து வளர் ஊடகத்தில் விட்டு மீண்டும் வளரச் செய்தால் ஒவ்வொரு செல்லும் உடலின் ஏதோ ஓர் உறுப்பை உண்டாக்கும் எனக் கருத வேண்டும். ஆனால் வொரு செல்களிலிருந்தும் அனைத்து உறுப்புகளையும் கொண்ட தலைப்பிரட்டை வரும். இதனால் தவளை யில் உறுப்பாகு பகுதி நிர்ணயம், செல் பிளவுபடும் முதல் நிலையில் தீர்மானிக்கப்படவில்லையெனத் தெரிகிறது. அனைத்துச் செல்களும் அனைத்து உறுப்பு களையும் உண்டாக்கும் இயல்பு கொண்டுள்ளன. செல்கள் மேலும் பிளவுபட்டு, கருவளர்ச்சி முதிர்ந்த நிலையில் செல்கள் இத்தனித்தன்மையை இழந்து ஒவ் கருவியல் ஆய்வுமுறை 73/ குறிப்பிட்ட மட்டும் உறுப்புகளை தன்மையுள்ளனவாக மாறுகின்றன. உண்டாக்கும் மெல்லுடலி நத்தை, கடல்வாழ் வளை தசைப் புழுக்கள் ஆகியவற்றில் பிளவுபடும் செல்களை மேற் கூறியவாறு வளர் ஊடகத்தில் விட்டால் ஒவ்வொன் றிலிருந்தும் முழு இளவுயிரி உண்டாவதில்லை. ஒவ்வொரு செல்லும் ஒரு குறிப்பிட்ட உறுப்பை உண்டாக்கும். எனவே இவ்வுயிரிகளில் உறுப்புகள் எவ்வாறு உண்டாகும் என்பது செல்பிளவுபடு முன்னரே தீர்மானிக்கப்படுகிறதென்று உணரலாம். இதனால் தவளை முட்டை காலப்போக்கில் நிர்ணய மாகும் முட்டை என்றும், நத்தை, கடற்புழு முட்டை முன்கூட்டியே நிர்ணயமாகும் முட்டை என்றும் குறிப்பிடப்படும். முதுகெலும்பிகளில் கண் கோளம் தலை மூளையிலி ருந்தும், விழி ஆடி தலைப்பகுதி புறத்தோலிலிருந்தும் உண்டாகின்றன. முதலில் தோன்றும் மூளை, குழா ய் போன்று இருக்கும். அதன் முன் முனையில் இருமருங் கிலும் புறவளர்ச்சிகள் உண்டாகும். இவற்றிற்குக் கண் பைகள் எனப்பெயர். இவற்றின் சுவர் மேற்பரப்பின் புறத்தோலைத் தொட்டவாறுவளரும். விழி ஆடி உண்டாகும். முறையைக் கண்டுபிடிக்க, தவளையின் கருவில் விழி ஆடி உண்டாகும் பகுதிக் குக் கேடு நேராமல் புறத்தோலைக் கிழித்துக் கண்பையை அகற்றிவிட்டு, புறத்தோலை ஒட்ட வைத்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் விழி ஆடி உண்டாகவில்லை. இதனால் கண்பை புறத்தோலைத் தொடாவிட்டால். புறத்தோலிலிருந்து விழி ஆடி உண்டாகாது எனத் தெரிந்தது. விழி ஆடி உண்டாக் கும் தீர்மானிகள் (determiners) கண்பையில்தான் இருக்க வேண்டுமென்று விளங்குகிறது. ஆனால் தலை மேற்பரப்புப் புறத்தோலல்லாமல் வேறு பகுதி மேல் தோலில் விழி ஆடி உண்டாக்கும் தன்மை இத்தீர் மானிக்கு உண்டா என்பதை அறிய மேலும் ஆய்வு நடத்தப்பட்டது. தவளையின் கருவில் கண்பை உண்டாக்கும்போது தலை மேற்பரப்புப் புறத்தோலைக் கிழித்துக் கண்பை யைப் பிரித்தெடுத்து, வயிற்றுப்பகுதியில் புறத் தோலுக்கடியில் ஒட்டவைக்கப்பட்டது. அங்கு புறத்தோலில் விழி ஆடி உண்டாயிற்று. இதிலிருந்து கண் பையில் விழி ஆடி உண்டாக்கும் தீர்மானிகள் எந்தப் பகுதிப் புறத்தோலிலும் விழி ஆடி உண்டாக்கும் ஆற்றலுடையன என்பது உறுதியானது. புறத் தோலைத் தொட்டு விழி ஆடிகளை உண்டாக்கத் தூண்டுவதால் இவை தூண்டிகள் (inductors) எனப் பெயர் பெற்றன. இவ்வாறு பல தூண்டிகள் இருப்ப தாகவும் அறியப்பட்டது. அமைப்பிகள். கருவியல் பிளவிப்பெருகலால் உண்டாகும் செல்கள், செல்லிடைவெளிகொண்ட