கருவுறுதல் 735
தாகும். இது முதலில் சிறியதாக இருந்து, பிறகு பெரியதாகிச் சூல் முழுதும் நிரம்பியிருக்கும். சூல் துளையின் கீழ் உள்ள சூல்திசுவில் ஆர்கிஸ்போரியம் (Archesporium) தோன்றுகிறது. இது குறுக்காகப் பகுப்படைந்து வெளியில் முதல்நிலைச்சுவர்செல் (primary parietal cell) என்றும் உட்புறம் முதல் நிலை வித்துண்டாக்கும் செல் (primary sporogenous cell) என்றும் மாற்றமடையும். இந்தச்செல் பிறகு விதைத் தாய்ச்செல்லாக அமைந்து குன்றல் பகுப் படைந்து (meiosis) நீளவாக்கில் நான்கு செல்களைத் தோற்றுவிக்கிறது. மேலேயுள்ள மூன்று செல்கள் பெரியவித்துச் சிதைந்து விடுகின்றன. கீழேயுள்ள செல் செயல்படு செல்வாகி அதிலுள்ள நியூக்ளியஸ் பகுப்படைந்து 2, 4 என்னும் முறையில் உள்ளீட்டு நியூக்ளியஸ்கள் உண்டாகின்றன. இந்த 8 நியூக்ளியஸ் களும் 8 செல்களாகின்றன. இதற்குப்பெண் பால் இனச் செல் (female gametophyte) என்று பெயர். கருப்பையில் 8 செல்கள் உள்ளன. இவற்றில் நான்கு செல்கள் சூல்துளை நுனியிலும் ஏனைய நான்கு செல்கள் சூலடி முனையிலும் இருக்கும்; பிறகு இரு எதிர்முனைகளிலுமிருந்து இரு செல்கள் கருப்பையின் மையத்தை நோக்கி நகர்ந்து வந்து இணைகின்றன். இதற்கு இரண்டாம் நிலை நியூக்ளியஸ் (secondary nucleus) என்று பெயர். சூல் துளை முனையில் உள்ள மூன்று செல்களின் நடுவில் இருப்பதற்கு அண்டம் (egg) என்று பெயர். அதற்கு இருபுறமும் உள்ள செல்கள் துணைச்செல்கள் (syner- gids) எனப்படும். இம்மூன்றும் சேர்ந்த தொகுதி அண்ட உறுப்பு (egg apparatus) எனப்படும். கருப்பை யின் ம மறுமுனையில் மூன்று செல்கள் காணப்படும். இவற்றிற்கு எதிர்முனைச் செல்கள் என்று பெயர். மகாந்தத்துகள், வை மகரந்தப்பைகளில் உண்டாகி வெடித்து வெளியாகின்றன. மகரந்தச் முடியை அடைகின்றன. சேர்க்கையால் சூலக மகரந்தத்துகளில் உள்ளுறை, வெளியுறை என இரு உறைகள் உண்டு. வெளியுறை பல வளரிகளோடும் பள்ளங்களோடும் அமைந்திருக்கும். இது மேடு கருவுறுதல் 735 கியூட்டிகிள் என்னும் பொருளால் கெட்டியாக்கப்பட் டுள்ளது. இதில் மெழுகு அமைந்திருப்பதால் நீரில் விழுந்தாலும் இதன் உயிர்த்தன்மை கெடுவதில்லை. உள்ளுறை செல்லுலோஸ் என்னும் பொருளால் மெல் லிய சவ்வுபோல் ஆக்கப்பட்டது. மகரந்தத்துகளின் சில மெல்லிய பகுதிகளில் உருண்டையான சிறு வளர் துளைகள் உள்ளன. ஒரு செல்லால் ஆன மகரந்தத் துகளின் மையத்தில் நியூக்ளியஸ் உள்ளது. இது இரண்டாகப் பகுப்படைந்து, குழாய் நியூக்ளியஸ் செல்லுண்டாக்கும் நியூக்ளியஸ் ஆகிறது. இந்த இரு நியூக்ளியஸ்களுடன் மகரந்தம், மகரந்தப்பையை விட்டு வெளியேறி மகரந்தச் சேர்க்கையால் சூலக முடியை அடைகிறது. மசுரந்தத்துகளின் அமைப்பு மகரந்தத்தூளின் வளர்ச்சி சூலகமுடியைச் சேர்ந்த மகரந்தத்துகள் தன் வளர்ச்சியைத் தொடர்கிறது. மகரந்தத் துகளின்