பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/758

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

738 கருவேலமரம்‌

738 கருவேல மரம் 100 % ot 900 யாதது. அதற்கான உணர்ச்சிகளைத் தூண்டும் பொருட்டுக் குறிப்பிட்ட சில பழக்க வழக்கங்கள் தோன்றியுள்ளன. சினையணு, குன்றல் பகுப்புக்குப் (meiosis) பின்னர் முதிர்ச்சியடைந்த பிறகுதான் விந்தணுவின் நியுக்ளியஸுடன் இணைய முடியும். நீரில் வாழும் சில சிறப்பினங்களின் சினையணுக்கள் ஃபெர்டிலை சின் (fertilizin) என்னும் வேதிப்பொருளைச் சுரக் கின்றன. அது சினையணுக்களைச் சுற்றிலும் நீரில் பரவுகிறது. இதுபோல் விந்தணுக்களும் ஆண்டில் பெர்டிலைசின் என்னும் பொருளைச் சுரக்கின்றன. வேதித் தூண்டியக்கத்தால் ஈர்க்கப்பட்ட விந்தணுக் கள் சினையணுவின் மேற்பரப்பில் குவியலாக ஒட்டிக் கொள்கின்றன. இது கருவுறுதலைத் தூண்டுவதற்கு உதவுகிறது. விந்தணுக்கள் சினையணுவுள் நுழையும் இடத் தில் சினையணுச் சவ்வுகளை நொதிகளால் அழிப் பதும் சினையணுவில் கருவுறுகூம்பு ஒன்றை ஏற்படுத் துவதும், சிணையணுத் தூண்டுதல் என்று கூறப்படு கிறது. சினையணுவினுள் விந்தணு நுழைந்தவுடன் கருவுறுதலின் முதற்செயலாக, சினையணுவின் புறணித் துகள்கள் வைட்டல்லைன் சவ்வு (vitelline memb:an:) சூழ் இடைவெளிக்குள் செல்கின்றன. இதனால் இப் பகுதி பெரியதாகிறது. இருபுறணி அடுக்குகளும் கருமஞ்சள் சவ்வுடன் இணைந்து கருவுறுதல் சவ்வு உண்டாகிறது. இதன் மூலம் மற்றொரு விந்தணு சினையணுவினுள் நுழைதல் தடுக்கப்படுகிறது. கருவுறு கூம்பின் வழியாக விந்தணு, நியுக்ளி யஸும் வாலைத் தவிர்த்த பிற பகுதிகளும் சினை யணுவினுள் நுழைந்து 180° சுழன்று, விந்தணுவின் நடுப்பகுதிச் சினையணுவின் மையப்பகுதியை நோக்கி அமையும் சினையணுவின் சைட்டோபிளாசத்தில் விந்தணுக் கதிர் அமைப்பு உண்டாகிறது. பொதுவாக ஆண் முன்னோடி நியுக்ளிஸும் (விந்தணு நியூக்ளியஸ்) பெண் முன்னோடி நியுக்ளி யஸும் (சினையணு நியூக்ளியஸ்) ஒன்றையொன்று தொடுமிடத்தில் நியூக்ளியஸ்களின் சவ்வுகள் உடை படுகின்றன. இரண்டு நியூக்ளியஸ்களின் பொருள் களும் ஒன்று கலக்க அவற்றைச் சூழந்து ஒரு புதிய நியூக்ளியச் சவ்வு உண்டாகிறது. இதை நியுக்ளியக் கலப்பு என்று கூறுவர். ஆனால் அஸ்காரிஸ் போன்ற சில விலங்குகளில் இரண்டு நியுக்ளியஸ்களும் ஒன்றாகக் கலப்பதில்லை ஒவ்வொரு நியுக்ளியஸின் சவ்வும் மறைந்து குரோமோசோம்கள் வெளிப்படு கின்றன. இவ்வாறு வெளிவரும் இரு குரோமோ சோம் தொகுதிகளும் விந்தணுக்கதிர் அமைப்பில் பிளவுறுகின்றன. தொடர்ந்து மறைமுகப் பகுப்பு முறையால் பிளவுற்று இரு சுருக்கோளச் செல்களா கின்றன. கருவேலமரம் சா. காசிநாதன் ராபின்சன் தாமஸ் இம்மரப்பட்டையின் நிறத்தைக் கொண்டு கருவேல் மரம் எனப்படுகிறது. இம்மரத்தைக் கருவேல், கண்டாலு என்றும் கூறுவதுண்டு. இதன் தாவரவியல் பெயர் அக்கேசியா அரேபிக்கா அரேபிக்கா (Acacia arabica) என்பதாகும். அக்கேசியா நீலோடிகா (Acacia nilotica) என்பது பழைய பெயர். இந்தியா, இலங்கை. பர்மா, எகிப்து, அப்ரிக்கா நாடுகளில் இது மிகுதி யாகக் காணப்படுகிறது. . கருவேல மரத்தைப் பெரும்பாலும் கரிசல் மண் நிலங்களில் மிகுதியாகக் காணலாம். ஆனால் அனைத்து வகை மண்ணிலும் சரளை மண் நிலங்கள் லும் மலைப் பகுதிகளிலும் கூட இம்மரம் வளர்ந் திருப்பதைக் காணலாம். இம்மரம் சாதாரணமாகத் தானாகவே முளைத்து வளர்ந்து கூட்டம் கூட்ட மாகக் காணப்படும். வேலியோரங்களில் இம்மரங்கள் வளர்ந்திருப்பதைக் காணலாம். மரம் மிகவும் பயனுடையது, கடினமானது. தேவைப்படும் பொருள் களும், கலப்பைகளும் செய்ய இதைப்பயன்படுத்துவர். காற்றுத்தடை மரமாகவும், எரிபொருள் மரமாகவும்,