பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/759

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவேலமரம்‌ 739

வளர்க்கப்பட்டு வரும் இம்மரத்தைத் தற்போது சமூக நலக்காடுகளில் வளர்த்து வருகின்றனர். சமூக நலக் காடுகளில் குட்டையான, சிறுமுள்ளுடைய மர வகையே விரும்பி வளர்க்கப்படுகின்றது. வறட்சி தாங்கு மரங்களில் இதுவும் ஒன்றாகும். மரம். இம்மரம் நேராக வளர்ந்து நன்கு கிளைத்துக் குடைபோல் மரத்தண்டு இருக்கும். உறுதியாக இருக்கும். மரத்தின் பட்டை கரும்பழுப் பாகவோ. கருமையாகவோ இருக்கும். இதில் வெடிப்புகள் நீளவாக்கில் இருக்கும். புளியமரத்தி லுள்ள பட்டைகளைப் போன்ற இதன் பட்டைகளும் மரத்திலிருந்து சற்றுப் பெயர்ந்து காணப்படும். இதன் பட்டைகளைப் பெயர்த்து அடுப்பு எரிக்கப் பயன் படுத்துவர். இலை ஈரிறகு வடிவுடன் 5-10 செ.மீ நீளமிருக்கும். சிற்றிலைகள் மிகச் சிறியவை. இலை யடிச் செதில்கள் முள்களாக மாறியிருக்கும். இம் மரத்தில் கூர்மையான நேரான முள்கள் இரண்டு இலைக்காம்புக்குக் கீழே இருக்கும். பூங்கொத்து கருவேலமரம் 739 மஞ்சள் நிறமாக ஜூன் - செப்டம்பர்மாதம் வரை காணப்படும். காய்கள் 7.5-15 செ.மீ நீளம், 0.6 செ.மீ அகலம் இருக்கும். விதைகளுக்கிடையே கனி குறுகி மணி மணியாகத் தோற்றமளிக்கும். ஒவ்வொரு காயி லும் 8-12 விதைகள் அடங்கியிருக்கும். இது கருமண் நிலத்திலும் ஆற்றோரங்களிலும் நன்கு வளர் கிறது. பஞ்சாபிலும் ஏனைய வட இந்திய மாநிலங் களிலும் வண்டல் மண்பரப்பில்மிகுதியாகக் காணப் படுகிறது. இது வறட்சியைத்தாங்கி வளரும் மரமாக இருந்தபோதும் இம்மரத்திற்கு நட்டபின் ஓரிரு முறை நீர் பாய்ச்சுதல் வேண்டும். இம்மரம் 15-18மீ உயரம் வரை வளரும். அடி மரத்தின் பருமன் 1.5-3 மீ வரை இருக்கும். இது பஞ்சாப் மாநிலத்தில் 12 ஆண்டுகளில் 0.75 மீட்டர் பருமனை எட்டுகிறது. கருவேல மரம் உறுதியானது; நீண்ட நாள் பயன்படும். ஒரு கன அடி மரக்கட்டையின் எடை 23.2 கிலோ இருக்கும். தேக்கு மரத்தைவிட கருவேல் 1.கிளை நுனிக்குருத்தும் கூட்டிலைகலும் முள்களாக மாறியுள்ள இலையடிச் செதில்களும் 2. பூக்கொத்து 3.தனிப்பூ, 4. கனி