56 கட்டமைப்புக் கூறுபாடுகள்
56 கட்டமைப்புக் கூறுபாடுகள் ஒரே அலைவு நேரங்கொண்ட, சீரிசைமாற்றத் தில் இருக்கும் இரு அளவுகளுக்கிடையில் ஒரு குறிப் பிட்ட நேரத்தில் உள்ள கட்ட வேறுபாடு, ஒன்றன் சமநிலை மதிப்பு நேரத்தைச் சுழியாகக் கொண்டு, அடுத்த அளவு அம்மதிப்பை அடையத் தேவையான நேரத்தை, சீரிசை அலைவு நேரத்தின் பகுதியாகக் குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக, சீரிசை மாற்றங்களுக்கிடையில் கட்ட வேறுபாடு T4 என்றால், ஒன்று சுழிநிலையை அடைந்து T/4 நொடி களுக்குப்பின் அடுத்த இயக்கம் சுழிநிலை அடையும் எனப் பொருள்படும். அலைவு நேரத்தின் பகுதிகள் கோண அலகுகளி லும் குறிக்கப்படுகின்றன. ஓர் அலைவு நேரக் காலம் என்பது 360' அல்லது 27 ரேடியன் கோண அலகுக்குச் சமம். எடுத்துக்காட்டாக இரு சைன்வடிவ அலைகளுக்கு இடையில் கட்ட வேறுபாடு 90° அல்லது எ /2 ரேடியன் என்றால் நேர அலகில் ஓர் அலை பிற அலையை விட்டு T/4 நொடிகள் விலகியிருக்கின்றது. எனப் பொருள்படும். அளவு இரு அலைகளின் கட்ட வேறுபாடும், பாதை வேறுபாடும் தொடர்பு கொண்டவை. பாதை வேறுபாடும், 2 ரேடியன் கட்ட வேறுபாட் டிற்குச் சமம் ( 1 - அலைநீளம்). எனவே x - பாதை ரேடியன் கட்ட வேறுபாட்டிற்குச் வேறுபாடு சமம். 2 n X கட்டமைப்புக் கூறுபாடுகள் வெ. ஜோசப் நிலவியலின் பல பிரிவுகளில் அந்தந்தப் பிரிவுக்கு ஏற்றவாறு கட்டமைப்பு (structure) என்பது தனித் தனிச் சிறப்புப் பொருளைத் தரவல்ல சொல்லாகும். பாறையியலில் (pelrology) இச்சொல் தனிப்பட்ட தொரு பாறையின் ல் கனிம அமைப்புகளின் கொண்டு வடிவமைப்பைக் பெறப்படும் கூட்டு அமைப்பைக் குறிக்கும். பாறை எண்ணெய் (petro- Jeum) இயலின் கட்டமைப்பில் துளையிடல் என்பது எண்ணெய் தங்கும் வாய்ப்பை உருவாக்கும் வடிவம் பெற்றுள்ள பாறைகளைக் குறிக்கும். கட்டமைப்பு இயலில் (structural geology} சாறைகள் தனித்தோ, அடுக்குகளாகவோ. குழும மாகவோ பல்வேறு ஆற்றலுக்குட்பட்டுத் தோற்றக் காலத்திலும் பின்பும் தாம் கொண்ட கனிம மாற்றங்களால் ஏற்படுத்திக் கொள்ளும் பெரிய மாற்றங்களால் உருவாகும் புதிய புதிய தோற்றங் களையும் அமைப்பு முறைகளையயும் குறிக்கும். நில மடிப்புகள், பெயர்ச்சிப் பிளவுகள் (faults), நிலக் து உருவி படிவிலா குறைந்த இடைவெளிகள் (unconformities) படிவு டைவெளிகள் (disconfirmities). பெயராப் பிளவுகள் (joints) போன்றவை சில குறிப்பிடத்தக்க கட்டமைப்புக் கூறுபாடுகள் (structural features) ஆகும். நில மடிப்புகள், பெயர்ச்சிப் பிளவுகள், பெயராப் பிளவுகள் போன்றவை, பாறைகளின் தோற்றக் காலத்திலும் தொடர்ந்தும் அவற்றிற்குள்ளும் புறமும் ஏற்படும் உயர் அழுத்தம், மிகு வெப்பம், பொதிச் சுமை ஏற்றம், கால நீட்டம் போன்ற காரணங்களால் அடையும் உருமாற்றங்களின் பல்வேறு வெளிப்பாடு கள் ஆகும். இரும்புத் தகடு ஒன்றைப் பக்கவாட்டு உள்ளாற்றலுக்கு ஆட்படுத்தினால் அது தரும் நெளிவு அலைகளைப்போன்றே பெரும் பாறைப் படிவங்களும் தகைவு (stress), திரிபு (strain), திருக்கம் (torque) முதலியவற்றிற்கு ஆட்படும்போது முதல்நிலையில் நெளிவுகளை உருவாக்கி, இறுதி நிலையில் முறிந்து சரிகின்றன. நிலமடிப்புகள். பெரும்பாலும் அடுக்குப் பாறை களில் இது தெளிவாகக் காணப்படும். படிவுப் பாறை கள் எரிமலைப் பாறையடுக்குகள் இவற்றின் உருமாறிய பாறைகளில் எளிதில் னம் கண்டு கொள்ளவல்ல இக்கட்டமைப்புக் கூறுபாடு கப்ரோ கிரேனைட் வரிப்பாறைகள் போன்ற அனற்பாறைகளிலும் தெளிவாகவே அமைந்திருக்கும். சில மீட்டர் முதல் பல ப நூறு கிலோமீட்டர் வரை அகலம் கொண்ட நிலமடிப்புகள் உள்ளன. பாறைப் படிவத்தின் அமிழ் கோண மாறுபாடுகள் கோணத்திலும், அதன் திசை களிலும் ஏற்படுவதால் தோன்றும் புதிய உருவம் நில மடிப்புக்கள் எனப்படும். நில மடிப்புகளின் வளைவு உச்சி மேல் நோக்கிய முகட்டுடன் அமைவதை முகட்டு உரு (antiform) என்றும், வளைவின் கூர்மை கீழ்நோக்கிய கவட்டுடன் அமைவதைக் கவட்டு உரு (synform) எனவும் பகுக்கலாம். ய பாறைப் படிவத்தின் எந்தக் கோட்டில் இருந்து அமிழ்கோணத்திசையும் அளவும் மாற்றம் அடையத் தொடங்குகின்றனவோ அந்தக் கோட்டை மூட்டுக் கோடு (hinge line) என்பர். பெரும்பாலும் இந்த இடத்தில்தான் மிகுந்த வளைவு அமைப்பு இருக்கும். நிலமடிப்பு ஏற்பட்ட பாறையின் இரு பக்கங்களையும் அதன் இரண்டு உறுப்புகள் (limbs) எனவும், இவ்விரு உறுப்புகளும் இணைந்து கூடும் பகுதியை அச்சுக் சோடு எனவும், அச்சிலிருந்து இரு உறுப்புகளையும் சமபாதியாகப் பிரிக்கும் தளத்தை அச்சுத்தளம் எனவும். இரு உறுப்புகளும் இணையும் தளப்பகுதியை உச்சிப் பகுதி எனவும், இரண்டு உறுப்புகளின் மிக விலகிய எல்லையின் இடையே அமைந்த உட்பகுதியை உள்ளகம் (core) என்றும் குறிப்பிடலாம். (படம் 1). நிலமடிப்பின் இரு உறுப்புகளும் இணைகின்ற திசை குவிபகுதி எனப்படும். பக்கவாட்டில் குவிபகுதி கொண்ட மடிப்புகள் மடியும் திசைகொண்டு தென்