பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/762

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

742 கரைசல்கள்‌

I 742 சுரைசல்கள் விலகல்' எண் அதிர்வெண் தொடர்பு உண்டாகை யால், வளிமநிலையில் முதன்மை பெறும் வாண்டர் வால்ஸ் ஈர்ப்பு விசைக்கும் லண்டன் பிரிகை விசைக்கும் உள்ள தொடர்பு புலனாகிறது. இத்தொடர்புகளை அடிப்படை அறிமுறைக் கொள்கைகளிலிருந்து (irom first principles) பெற லாம் என்றாலும் இவ்வாறு நிறுவப்படும் கரைசல் கருத்துப் படிமம் (model), பல்லணு மூலக்கூறுகளைக் கொண்ட பெருவாரியான கரைசல்களுக்குப் பொருந்துவதில்லை. பொதுவாக, கரைசல்களில் ஈர்ப்பழுத்தப் புலம் (potential field) மையம் கொண்டதாகவோ, ஆரக்காலில் பரவுவதாவோ இல்லை; எலெக்ட்ரான்களுக்கு இடைப்பட்ட இடை யீடு மூலக்கூறுகளின் ஆரப்பகுதியில் மட்டுமே தோன்று கிறது. எ.கா. ஆக்ட்டாமெத்தில் டெட்ராசிலாக்சேன் எனும் மூலக்கூறின் உள்ளகத்தில் சிலிகான் அணுக் களும் ஆக்சிஜன் அணுக்களும் மாறி மாறி இடம் பெற்றிருப்பினும், எட்டு மெத்தில் தொகுதிகளுக்குள் புதைந்து கிடைப்பதால், இம்மூலக்கூறு பிற மூலக்கூறு களுடன் அலிஃபாட்டிக் ஹைட்ரோகார்பன்களைப் போலவே தொடர்புறுகிறது. அலிஃபாட்டிக்ஹைட்ரோ கார்பன்களே கோள வடிவான சமச்சீர்மை பெற்றி ருப்பதில்லை. மேலும் மூலக்கூறுகளிலுள்ள எலெக்ட் ரான்கள் யாவும் ஒரே அதிர்வெண் கொண்டவை யன்று. இச்சிக்கலான உண்மை நிலையை விளக்கு வதற்கு லண்டனின் அடிப்படைக் கருத்தை விரிவாக்க வேண்டியுள்ளது. லண்டன் விசைகளுள் பலவகை உள்ளன. அவை (1) குறை நெடுக்கம் கொண்டவை (2) கூட்டலுக்குநந்தவை மற்றும் தனிக்குறிப்புத் தன்மை அற்றவை (additive and non-specific) (3) வெப்பநிலைச் சார்பற்றவை (4) மின்முனைவற்ற மின்முனைவுற்ற, லோக என்னும் பாகுபாடில்லாத அனைத்து வகை மூலக்கூறுகளுக்கும் இடையே இயங்கவல்லவை (5) எலக்ட்ரான்களின் எண்ணிக் கை மற்றும் தளர்ச்சியைப் (looseness) பொறுத்து அளவில் மாறுபடும் விசைகள் (6) பலவகைப்பட்ட மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட சராசரிக்கும் குறைவான எண் மதிப்புள்ள விசைகள் என்பன வாகும். இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள விசையைப் பற்றி அறிவதற்கு வ ஐயும் 622 ஐயும் E13 - உடன் ஒப்பிடுதல் தேவை. மற்றும் ஆகியவற்றின் சமன்பாடுகளுக்கிடையே -ஐ நீக்கினால் சமன்பாடு (!). €12 = (v₁₂) 11/2 (v₁ + v₂)/2 2 . (€11€22) 2 இரு வேறு மூலக்கூறுகளுக்கிடையே மின்முனைவு கொள்திறத்தில் உள்ள வேறுபாட்டைவிட அயனி யாக்கும் ஆற்றலில் (ionisation energy) வேறுபாடு மிகக் குறைவாக இருப்பதால், அதிர்வெண்களைக் கொண்ட காரணியை ஒன்று எனக் கருதி இச்சமன் பாட்டிலிருந்து நீக்கிவிடலாம். எனவே, €12 = (€11€22)/2 (3) ஒரேவகை மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட இடை வீட்டுக் கூட்டல் சராசரியை விட (arithmetic mean) வேறுபட்ட வகை மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட இடையீடு குறைவாகவே உள்ளது. இருமூலக்கூறு களுக்கு இடைப்பட்ட ஈர்ப்பைக் குறிக்கும் சமன்பாடு களைத் தூய (தனித்த) கூறுகளுக்கும், கரைசலுக்கும் தாகை ஆக்கம் செய்தால் கரைப்பானுக்கும் கரை பொருளுக்கும் இடைப்பட்ட ஈர்ப்புக்கான துணை அலகுகளைக் (attraction parameters) கணக்கிடலாம். இத்துணையலகுகள் வாண்டர் வால்ஸின் மூலக் கூறிடைக் கவர்ச்சிக்கான (van der Waals intermolei- cular attraction) a எனும் மாறிலியை ஒத்தவை. ஒரே வகையைச் சார்ந்த மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட ஈர்ப்பு மாறிலிகளுக்கும் மாறுபட்ட வகைகளைச் சார்ந்த மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட ஈர்ப்பு மாறிலி களுக்கும் கீழ்க்காணும் தொடர்பைப் பெர்தலாட் என்பார் வருவித்துள்ளார்: 012 = (a11022)/2 இச்சமன்பாடு நீர்ம - இரட்டைகளுக்கு 1% பிழை எல்லைக்குட்பட்டுப் பொருந்துகின்றது. எ.கா. (C1,-க்கு a இன் மதிப்பு 31.21; SnBr,க்கு aஇன் மதிப்பு 64.79, கணக்கிடப்பட்ட பெருக்குச் சராசரி (geometric mean) 46.46 ஆகவும், ஆய்வு வழி அறியப்பட்ட மதிப்பு 46.86 ஆகவும் உள்ளன. இத்தொடர்பின் கருத்து, மாறுபட்ட நெருக்கப் பிணைவு (cohesion) கொண்ட இரு நீர்மங்களின் சராசரிப் பிணைவைவிட அக்கலவையின் பிணைவு குறைவாகவுள்ளது என்பதாகும். இதன் விளைவாகக் கலவையின் (கரைசலின்) பருமனில் கூடுதலும், வெப்ப உறிஞ்சலும், ஆவியமுத்தத்தில் உயர்வும் தோன்றும்? ச்சமன்பாடு ஒரே வெளி எலெக்ட்ரான் அமைப்புக் காண்ட பிற வகைகளில் வேறுபட்ட மூலக்கூறு களுக்கு ஏற்புடையதாகும். ஆனால் வெளி எலெக்ட் ரான் அமைப்புகளில் வேறுபட்ட மூலக்கூறு இரட்டை களுக்குப் பொருந்தாது. இருமுனையி இடையீடு. நிலைத்த மின்வகை இரு முனையிகளை (permenent electric dipoles உள்ளடக் கிய மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட ஈர்ப்பு இவ்வகை யைச் சாரும். லண்டன் விசையும், இரு முனையி களுக்கு இடைப்பட்ட நிலை மின் டையீடும் (electrostatic interaction) இணைந்த விசை, இரண் டாவதாகக் கூறப்பட்ட விசை மூலக்கூறுகளின் இரு முனைத் திருப்புந் திறத்தைப் பொறுத்தது. மேலும், இடை யீடு பெரும நிலையை எய்த உதவும் இணை எதிர் வச அமைப்பை: fantinarallel orientoticn .