பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/765

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரைசல்கள்‌ 745

நிலையின்ம்ை, இங்கு V = N_V,/N,, அதாவது, ஒரு மோல் கரை பொருளை உள்ளடக்கிய கரைசல் பருமன். வாண்ட் ஹாஃப்பின் நீர்த்த கரைசல் விதி (Van't Hoff'$ dilution law) என்பது இச்சமன்பாடேயாகும். வளிமங் களுக்கான நல்லியல்புச் சமன்பாடும் நீர்த்த கரைசல் சமன்பாடும் அமைப்பில் ஒத்துள்ளமையால் வாண்ட் ஹாஃப் விதியை நல்லியல்புக் கசைரல் விதி எனலாம். இது ஒரு வரம்புக்குட்பட்ட விதியாகும்; செறிவு மிகுந்த கரைசல்களுக்குப் பொருந்தாது. ஒவ்வொரு கரைப்பானின் தனித்தன்மை இவ்விதியைப் பாதிப்ப தில்லை. வளிமத்தைப் போன்ற கரைபொருள் (quasi-gas solute) பரவுவதற்குக் கொள்ளிடம் அளிக்கும் அமைப்பே கரைப்பானாகும். சவ்வூடு பரவல் அழுத்தத்தை அளக்கும் முறை, கரைசல்களில் பலபடி மூலக்கூறுகளின் மூலக்கூறு எடையைக் கண்டறிவதற்குச் சிறந்த த்தியாகும். ஏனெனில், இக்கரைசல்களில் கரைபொருளின் மோல் பின்னங்கள் மிகக் குறைவாக உள்ளன. இதனால் இவற்றின் தாக்கம் ஆவியழுத்தத்தின் மீதோ கரைப் பானின் உறைநிலை மீதோ பெரும்பான்மையாக இல்லை. சான்றாக, ஒரு மோல் பென்சீனில் 0.001 மோல் கரைபொருளைச் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட கரைசலின் உறைநிலை 279K உருகுதல் வெப்பம் 9.95 கி.ஜீல் மோல், உறைநிலைத் தாழ்வு மட்டுமேயாகும். சவ்வூடு பரவல் அழுத்தமோ 194 மி.மீ. இந்த அளவு அழுத்தத்தை அளப்பது கடினமன்று. 0.5 X 00 படம் 1. A 0.065K வகை கரைசல்கள் 745 நல்லியல்பற்ற கரைசல்கள். இருகூறுக் கலவையில் (binary mixture) இரு கூறுகளுக்கும் இடையே வேறு பாடு கூடுதலாக இருப்பின், நிலையின்மை எண் மதிப்பு (fugacity value) நல்லியல்பு வழியாகக் கணக் கிடப்படும் மதிப்பைவிடக் கூடுதலாக இருக்கும். ஒரு மூலக்கூறுகளைப் பெரும்பாலும் வேறொரு வகை மூலக்கூறுகள் மட்டுமே சூழ்ந்திருக்க நேரிடின், ஆய்வு வழி அறியப்பட்ட நிலையின்மைக்கும் நல் வியால்பு அடிப்படையில் காணக்கிடக்கும் நிலை யின்மைக்கும் இடையே வேறுபாடு மிகவும் கூடுதலாக இருக்கும்.படம் 1 இல் நடைமுறை வரைபடமும் நல்லியல்பின் அடிபடையில் எதிர்பார்க்கப்படும் வரைப டமும் ஒப்பிடப்பட்டுள்ளன. வரைகோடுA : நல்லியல்பு அடிப்படையில் கரைசலில் நடத்தை, வரைகோடு B: நடைமுறையில் கரைசலின் நடத்தை.வரைகோடு C ஹென்றி விதியின்படி எதிர்பார்க்கப்படும் நடத்தை. . நடைமுறைக் கரைசல்களில் கரைப்பானின் மோல் பின்னம் உயர்வாக ருக்கையில் {X,→→1} ரௌல்ட்டின் விதியும், கரைப்பானின் மோல்பின்னம் குறைவாக இருக்கும்போது (X,→0) ஹென்றியின் விதியும் பின்பற்றப்படுகின்றன. கூறுகளுக்கும் ஈரி ணையக் கரைசல்களின் இடையேயான தொடர்பைக் கிப்ஸ் டியூ-ஹெம் சமன் பாடு விளக்குகிறது. (as) - (ang), = in ஒரு கரைசலில் அடங்கிய கரைபொருளின் செறிவும், கிளர்ச்சியும் (activity) ஒன்றேயல்ல. செறிவில் மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட இடை யீடுகளைப் புகுத்தினால் கிளர்ச்சியின் மதிப்புக் கிடைக் கும். கிளர்ச்சி இங்கு f" என்பது ஒரு நியம ஒப்பீட்டு நிலையில் நிலையின்மையின் மதிப்பு, நல்லியல்புக் கரைசலில் கிளர்ச்சியும் மோல் பின்னமும் சமமாகும். பிற கரைசல்களில் கிளர்ச்சிக் கெழு (activity co-efficient) r = a/x. கிப்ஸ்-டியுஹெம் சமன்பாட்டை நிலையின்மைக்குப் பதிலாகக் கிளர்ச்சி யைக் கொண்டும் குறிப்பிடலாம். மூன்றாம் வகைக் குறியீடு : NG, +NodG2 0 இங்கு G என்பது பகுதி மோலால் கிப்ஸ் ஆரற்ல், மின்முனைவற்ற கூறு களைக் கொண்ட பல கரைசல்களில் வெப்பப் பாய் வால் கலத்தல் நன்கு நிகழ்ந்து, கலத்தல் இயல் பாற்றல் நல்லியல்பு மதிப்பைப் பெறுகிறது. இரு உட்கூறுகளின் நிலை ஆற்றலின் மொத்த எண் மதிப்புக்கும், கரைசலின் நிலை ஆற்றலுக்கும் உள்ள வேறுபாடு கலத்தல் வெப்பம் எனப்படுகிறது. ஒரு நீர்மத்தில் இரு மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட ஈர்ப்பு-விலக்கு அழுத்தம், e(r), ஒரு மோல் நீர் மத்தின் மொத்த நிலையாற்றலுக்குத் தொடர்பு