கரை நீர்மச் சேர்க்கை 749
எடையறி பகுப்பு முறையில், ஒரு பொருளின் எடையைக் கணக்கிடும் முன்னர், அப்பொருள் முழுமையாக வீழ்படிவாக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்வதற்காக, அப்பொருளை வீழ்படிவாக்கப் பயன் படும் காரணியைச் (precipitating reagent) சற்று மிகுதியான அளவில் சேர்க்க வேண்டும். அப்போது கரைசலில், அயனிச் செறிவுகளின் பெருக்குத் தொகை வீழ்படிவாக்க வேண்டிய உப்பின் கரை திறன் பெருக்க மாறிலியைவிட அதிகரித்து, உப்பு முற்றிலும் வீழ்படிவாகப் படியத் துணைபுரியும். பண்பறி பகுப்பாய்வு முறைகளில் ஒவ்வொரு தொகுதியிலுள்ள உலோக அயனிகளையும் அந்தந்தத் தொகுதிகளிலேயே வீழ்படிவடையச் செய்வதற்கான சூழ்நிலைகளை இத்தத்துவத்தின் அடிப்படையிலேயே பெறலாம். சான்றாக,இரண்டாம். நான்காம் தொகுதி யிலுள்ள உலோக அயனிகள் எந்தச் சூழ்நிலையில் ஹைட்ரஜன் சல்ஃபைடு வளிமத்தால் வீழ்படி வாக்கப்பட வேண்டும் என்பதை இத்தத்துவம் உணர்த்துகிறது. இரண்டாம் தொகுதியிலுள்ள உலோக சல்ஃபைடுகளின் கரைதிறன் பெருக்க மாறிலி யின் மதிப்புகள் மிகக் குறைவாக உள்ளன. ஆகவே அந்த உலோக சல்ஃபைடுகளின் விழ்படிவைப் பெற சல்ஃபைடு அயனிகளின் செறிவு மிகக்குறைவாக இருந்தால் போதுமானது. சோக அமிலக் கரைசல்களில் ஹைட்ரஜன் சல்ஃபைடு செலுத்தும்போது சல்ஃபைடு அயனிகளின் அளவு குறைகிறது. ஆகவே இரண்டாம் தொகுதி உலோக அயனிகள் அமிலக் கரைசலில் வீழ்படிவாக்கப் படுகின்றன. நான்காம் தொகுதியிலுள்ள உகே சல்ஃபைடுகளின் கரைதிறன் பெருக்க மாறிலியின் மதிப்புகள் இரண்டாம் தொகுதி சல்ஃபைடுகளின் கரைதிறன் பெருக்க மாறிலிகளைவிட மிகுதியாகும் ஆகவே நான்காம் தொகுதி உலோக அயனிகள் காரக் கரைசலில் வீழ்படிவாக்கப்படுகின்றன. அது போல் மூன்றாம் தொகுதி உலோக அயனிகள் குறைந்த அளவு றைட்ராக்சைடு அயனிகளால் வீழ்படிவாக்கப்படுகின்றன. ஆகவே அம்மோனியம் குளோரைடு கொண்ட உப்புக் கரைசலின் அம்மோனி யம் உைறட்ராக்சைடால் உலோக உைறட்ராக் சைடுகளாக வீழ்படிவாக்கப்படுகின்றன. கரை நீர்மச் சேர்க்கை மூலக்கூறு, அயனி அல்லது -பா.குற்றாலிங்கம் துகள் வடிவிலான பொருளின்மீது கரைப்பான் மூலக்கூறுகள் படர்தல் அல்லது ணைதல் கரை நீர்மச் சேர்க்கை (solvation) எனப்படும். இவ்விணைப்பு இயற்பியல் வடிவிலோ, கரை நீர்மச் சேர்க்கை 749 வேதி வடிவாகவோ இரண்டின் கலப்பாகவோ இருக் கலாம். ஒரு சேர்மம் உருவானால் அச்சேர்மத்தில் (இது அணைவுச் சேர்மம் எனப்படும்) ஒவ்வொரு கரை பொருள் மூலக்கூறைச்சுற்றிலும் குறிப்பிட்டஎண்ணிக் கையுடைய கரைப்பான் மூலக்கூறுகள் சூழ்ந்திருக்கும். நீரியக் கரைசலில் நிகழும் கரை நீர்மச் சேர்க்கை நீரேற்றம் (hydration எனப்படும். நீரிய அயனிக் கரை சல்களில் மின் முனைவுமிக்க நீர் மூலக்கூறுகள் அயனி களைச் சூழ்ந்து கொண்டு நீரேற்றக் கூடுகளை உரு வாக்குகின்றன. இதன் விளைவாக, குறிப்பிட்ட மின் னழுத்தச் சரிவில் ஓர் அயனியின் விரைவு குறைகிறது. நீரேற்றத்தின் அளவு அயனியின் குறுக்களவையும் மின்னேற்றத்தையும் பொறுத்தது.ஓர் எதிர் மின் அயனியின் மின்னேற்றத்திற்கும் ஆரத்திற்கும் உள்ள விகிதம் (அயனி அழுத்தம்) இரண்டுக்கு மேற்பட்டால் கரைப்பான் நீர்மச் சேர்க்கை நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டு. எடுத்துக்காட்டாக, கார உலோக அயனி களிலேயே மிகச் சிறியதான லித்தியம் அயனி நீரேற்ற அளவு கூடுதலாகப் பெற்றது.அலுமினியம் அயனி ஆறு நீர் மூலக்கூறுகளுடன் இணையும்போது பெரிலியம் அயனி நான்கு நீர்மூலக்கூறுகளால் மட்டுமே சூழப்பட் டுள்ளது. கரைப்பான் சேர்க்கை வலிமையை மதிப் பிட அயனி அழுத்த மதிப்புகளைப் பயன்படுத்துதல் அனைத்துச் சூழ்நிலைகளுக்கும் ஒவ்வாது. எடுத்துக் காட்டாக, சோடியம் அயனியும், தாமிர (1) அயனியும் சமமான அயனி அழுத்தம் கொண்டவை. ஆனால், சோடியம் அயனி கரை நீர்மச் சேர்க்கை அடைவ தில்லை. தாமிர (1) அயனி கரை நீர்மச் சேர்க்கைக்கு ஏற்றது. இதற்குக் காரணம் தாமிர (I) அயனியில் d ஆர்ப்பிடால்கள் இருப்பதும், சோடியத்தில் வை இல்லாதிருத்தலும் கூடும். பொதுவாக. ஓர் அயனி வகைத் திண்மம் ஒரு நீர்மத்தில் கரைதல் அத்திண்மத்தின் படிக அமைப்பு ஆற்றலைவிடக் கரை நீர்மச் சேர்க்கையின்போது வெளியாகும் ஆற்றல் கூடுதலாக இருப்பதால்தான் என்று அறியப்பட்டுள்ளது. நீரில் கரைந்த அசெட்டிக் அமிலம் அயனியாகிறது. CH,COOH + H,O=CH, COO +H,O 6 25°C வெப்பநிலையில் இவ்வினையின் வெப்பவியக்க வியல் துணையலகுகள்: இG 6.5கி. கலோரிகள் AH = 0.1 கி. கலோரிகள் AS 22 கலோரி மோல். இவ்வினைக்கு எதிர்க் குறியீட்டுடன் உயர்ந்த எண் மதிப்புக்கொண்ட இயல்பாற்றல் மாற்றம் (entropy change) தோன்ற வாய்ப்பில்லை, ஏனெனில் சமநிலையின் இருபுறமும் துகள்களின் எண்ணிக்கை சமமாகவுள்ளது. இவ்வுயர் இயல்பாற்றல் மாற்றத் திற்கு இரு அயனிகளும் நீரேற்றம் அடைந்திருப்பதே காரணமாகும். நீர் மூலக்கூறுகள் (கரைப்பான் மூலக் கூறுகள்) அயனிகளைச் சுற்றி உறைப் போன்று