752 கரைப்பான்கள்
752 கரைப்பான்கள் . ஒரு சிறந்த கரைப்பானாகும். எனினும், பாகுத்தன்மை நீரைவிட 25 மடங்கு கூடுதலாக அமையப் பெற்றிருப் பதால் கரை பொருள்கள் விரைவில் கரைவதுமில்லை: கரைசல்களிலிருந்து படிகமாவதுமில்லை. கரைசலி லி ருந்து படிக உருவில் வெளியேற்றப்பட்ட படிகக் கரைபொருளிலிருந்து மிகையான கரைப்பானை அகற்றுவதும் எளிதன்று. சல்ஃப்யூரிக் அமிலத்தின் ஆவி அழுத்தம் மிகமிகக் குறைவாகவு ள்ளதால் படிகத்தின் மீது ஒட்டியுள்ள கரைப்பானை ஆவியாக்கு தலினால் வெளியேற்ற முடிவதில்லை. சல்ஃப்ரியூக் அமிலத்தின் தன் அயனியாதல் வினையில் உைறட்ரஜன் சல்ஃபேட் அயனியும். கரை நீர்மச் சேர்க்கையுற்ற புரோட்டானும் விளைகின்றன. 2H,SO, H,SO,+ + HSO,– இதன் விளைவாக, பொட்டாசியம் உைறட்ரஜன் சல்ஃபேட் கரைசல் ஒரு வலிவுமிக்க காரமாகவும், H,SO, அயனியைத் தரவல்ல கரைபொருளால் நிலையாக்கவல்லதாகவும் செயல்படுகிறது. இத்தரம் பார்த்தவை மின்கடத்துத்திறன் அளவை முறையில் நிகழ்த்தினால், சமன்படுநிலையில் மின்கடத்துமை ஒரு சிறும நிலையை ஊட்டும். சுரைசலிலுள்ள பொருள் களின் தன்மைகளையும் செறிவுகளையும் அறிவதும் எளிதேயாகும். சல்ஃப்யூரிக் அமிலத்தில் கரைந்துள்ள பொருள் களைப் பற்றிய விவரத்தை உறைநிலைத் தாழ்வு களை அளப்பதாலும் அறியலாம். சல்ஃயூரிக் அமிலத் தின் உறைநிலைத் தாழ்வு மாறிலி 6.12 கி.கி/செ. மோல் நல்லியல்புக் கரைசல்களுக்கு (ideal solutions), AT = km m: (விகித வியல் அடிப்படையிலான) மோலால் எண். V: ஒரு மூலக்கூறு கரைபொருள் கரைவதால் தோன்றும் துகள் எண்ணிக்கை. எத்தனால் சல்ஃயூரிக் அமிலத்தில் கரையும்போது நீரில் காரங்களாகச் C,H_OH + H,SO,→ C,H,SO, + HSO,- + H,O+ செயல்படும் சேர்மங்கள் யாவும் சல்ஃப்யூரிக் அமிலத் திலும் காரங்களாகவே உள்ளன. OH - +2H,SO, 2HSO,- + H,O+ LUPS + NH. + HSO, → HSO, + NH, இதேபோன்று நீரும் சல்ஃப்யூரிக் அமிலத்தில் கார மாகவே விளங்குகிறது. H,O + H_SO, HSO,- + H,O+ நீரில் கரைந்த நிலையில் மின்கடத்தாப்பொருள் களாகவும் அம்மோனியாவில் அமிலமாகவும் செய லாற்றும் யூரியாவும் பிற அமைடுகளும் சல்ஃப்யூரிக் அமிலத்தில் காரங்களாக மாறுகின்றன. NH, CONH, + H,SO - → HSO,- + NH CO NH நீரியக் கரைசலில் வீரியமற்ற அமிலமாகிய அசெட்டிக் அமிலம், வீரியமிக்க அமிலமான நைட்டிரிக் அமிலம் இரண்டுமே சல்ஃப்யூரிக் அமில ஊடகத்தில் காரப் பொருள்களாக விளங்குகின்றன. 0 OH CH,-C + H2SO4 → HSO, + CH-C (+) 1 HO OH (ஓனியம் அயனி) வலிமிக்க அமிலங்களுள் ஒன்றான பெர்குளோரிக் அமிலம், சல்ஃப்யூரிக் அமிலத்தில் கரைந்த நிலையில் மிகமிக வலிக்குறைந்த அமிலமாக மாறிவிடுகிறது. சல்ஃப்யூரிக் அமிலத்தால் கரைக்கப்படும் சேர்மங் களுள் ஹைட்ரஜன் டெட்ராசில் ஹைட்ரஜன் சல்ஃப்பேடோபோரேட், HB(HSO,),எனும் சேர்மம் மட்டுமே உண்மையாகவே வலிமிக்க அமிலமாக விளங்குகிறது. S0, வளிமத்தைச் செலுத்தி H,O+ மற்றும் HSO- அயனிகளை அகற்றினால், இவ்வ மிலத்தின் வீரியத்தன்மை தெளிவாகிறது. HB(HSO,), + 3H,O+ + 2HSO, + 3SO H,SO,+ + 4H,SO, + B(HSO,), வீரிய அமில வகைக் கரைப்பான்களில் ஏனைய வீரிய அமிலங்களைக் கலந்தால் அக்கலவை வீரிய அமிலம் (superacid) எனப்படுகிறது. மிக வ்வகையில் கார வகைக் கரைப்பான்கள். முதன்மை பெறுவது நீர்ம அம்மோனியாவாகும். பிற நீரற்ற கரைப்பான்களைவிட அம்மோனியாவே மிகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இயற்பியல் பண்புகளில் அம்மோனியா நீரை ஒத்துள்ளது (அட்ட வணை-1 எனினும், நீருடன் ஒப்பிடுகையில் அம்மோனியாவின் மின்கடத்தா பொருள் மாறிலி மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே உள்ளது. இதன் விளைவாக அயனிச் சேர்மங்களைக் கரைக்கும் திறன் குறைவாகவுள்ளது. குறிப்பாக கார்பனேட்