கரைப்பான்கள் 753
VOL 7 சல்ஃபேட், பாஸ்ஃபேட் போன்ற மின்னேற்றமிக்க அயனிகள் அம்மோனியாவில் கரைவதில்லை. சில கரைபொருள்களைக் கருதும்போது, அம்மோனியா வின் குறைவான மின்கடத்தாப் பொருள் மாறிலி மதிப்பின் அடிப்படையில் எதிர்பார்கப்படும் கரைதிற னைவிடக் கூடுதலான கரைதிறன் இருப்பதைக் காணலாம். அம்மோனியா மூலக்கூறுக்கும் கரைபொரு ளுக்கும் நிலைப்படுத்தும் இடையீடு தோன்றுவதே கூடுதல் கரைதிறனுக்குக் காரணமாகும். எடுத்துக் காட்டாக, Ni2+, Cu'+, Zn'+ போன்ற உலோக அயனிகளுக்கு அம்மோனியா மூலக்கூறுகள் எலெக்ட் ரான் இரட்ை டைகளை ஈந்து அம்மைன் அணைவுகளை (ammine complexes) உருவாக்குகின்றன. Cu + + 4NH, == = [Cu(NH)]₁²+ முனைவுகொள் திறன் மிக்க அம்மோனியா மூலக்கூறும் முனைவு கொள்ளத்தக்க கரைபொருள் மூலக்கூறு அல்லது அயனியும் இடையீடுறுவது அம்மோனியாவின் கரைப்பானியலுக்கு மற்றொரு காரணியாகும். இதன் விளைவாக, மின்முனைவற்ற (ஆனால் மின் முனைவு கொள்ளத்தக்க) கரைபொ ருளுக்கு நீரைவிட அம்மோனியா சிறந்த கரைப்பா னாகும். எடுத்துக்காட்டாக, முனைவுகொள்திறன் கொண்ட பெரிய அயனிகளை உள்ளடக்கிய அயோ டைடுகளும், தயோசனேட்டுகளும் அம்மோனியாவில் கரைகின்றன. நீரில் நிகழ்வது போன்றே அம்மோனியாவிலும் வீழ்ப்படிவாக்கல் வினைகள் நிகழ்கின்றன. இரு கரைப்பான்களின் கரைதிறன் வேறுபாடுகளால் விளைவுக கள் சற்றே வேறுபடுகின்றன. எடுத்துக் காட்டாக, நீரியக் கரைசலில் நிகழும் ஒரு வினைக்கு எதிர்வினை அம்மோனியாவில் நிகழ்கிறது. KCl + AgNO,+KNO, + AgC1 (நீரியக்கரைசலில்} AgNO, KCI (அம்மோனியா AgCl + KNO கரைசலில்) நீர்ம அம்மோனியா தன்னயனியாகி (auto- ionises) அம்மோனியம் மற்றும் அமைடு அயனி களைத்தருகிறது. நீரில் நிகழ்த்துவதற்கு இணையாக நடு நிலையாக்கல் வினைகளை நீர்ம அம்மோனியா வில் நிகழ்த்தலாம். 2 NH – NH + NH,- KI + 2 NH, KNH, + NHI (காரம்) (அமிலம்) (உப்பு) (கரைப்பான்) அணைவு அயனித் தோற்றத்திலும் கரைப்பானின் ஈரியல்புத்தன்மையிலும் (amphoteric behaviour, நீரும் அம்மோனியாவும் ஒத்துள்ளன. Zn + + 20H- + Zn(OH); கரைப்பான்கள் 753 -Zn(OH)*- ) Za" + 2NH - → Zn(NH,} = Zn(NH, ), ஒரு பொருள் நிலையான அமிலமோ, நிலையான காரமோ அன்று; கரைப்பானின் அயனியாதல் அளவைப்பொருத்தே கரைபொருளின் அமில-காரத் தன்மைகள் அமைகின்றன. சுருங்கக்கூறின், அமில காரப் பண்புகள் சார்பிலாத் தனிப்பண்புகள் அல்ல; ஒப்புமைப் (relative) பண்புகளேயாகும். இவ்வுண் மையை அம்மோனியாவின் கரைப்பானியல் நன்கு விளக்குகிறது. நீரில் வீரியமிக்க அமிலங்களாக விளங்கும் கரைபொருள்கள் அம்மோனியாவில் அம் மோனியம் அயனியின் அமிலத்தன்மைக்குச் சமனப் படுத்தப்படுகின்றன (levelled). HNO + NH,— NH+ + NO - ,+ மாறாக, நீரில் வலிமைகுறைந்த அமிலமாகச் செயல்படும் சேர்மங்கள் அம்மோனியாவில் வலிவு மிக்க அமிலங்களாகின்றன. CH_COOH + NH, NH+ + CH COO- மேலும், நீரில் கரைந்த நிலையில் சிறிதும் அமிலப் பண்பு கொண்டிராத சேர்மங்கள் அம்மோனியாவில் வீரியம் குறைந்த அமிலங்களாகின்றன. NH,CONH, + NH, NH, + NH CONH பொதுவாக, காரவகைக் கரைப்பான்கள் குறிப் பிடத்தக்க அமிலத்தன்மையுடைய சேர்மங்களில் அமிலத் தன்மையைச் சமனப்படுத்துகின்றன; வீரியம் குறைந்த அமிலங்களின் அமிலத்தன்மையைக் கூடுத லாக்குகின்றன. நீரியக் கரைசலில் காரங்களாகக் கருதப்படும் வேதி னங்கள் அம்மோனியாவில் கரை வதில்லை அல்லது வீரியம் குறைந்த காரங்களாக உள்ளன. வீரியமிக்கவை அமைடு அயனியின் மட்டத் திற்குச் சமனப்படுத்தப்படுகின்றன. H- + NH, -- NH- + H 02- + NH3 NH - + OH- 2 நீராற்பகுப்பைப் போன்றே கரைப்பான்வழிப் பகுப்பு அமோனியாவிலும் நிகழ்கிறது. எடுத்துக் காட்டாக, ஹாலோஜன்களை இரு கரைப்பான்களும் சிதைவுறச் செய்கின்றன. Cl, + 2 H,O + HOCI + H,O+ + Cl- Cl, + 2 NH₁ 2 NHẠC! + NH+ + CL-