பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/774

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

754 கரைப்பான்கள்‌

754 கரைப்பான்கள் மேலும், பாஸ்ஃபோரிக் அமிலமும் (OP(OH}, ) பாஸ்ஃபோரமைடும் (OP(NH,)), ஒத்த அமைப் புடையவை. இவ்வொற்றுமைகளின் அடிப்படையில் நீருக்கு உள்ளது போன்று அம்மோனியாவுக்கும் pH அளவை இருக்கக்கூடும். என்று தோன்றுவது இயற்கை. அம்மோனியாவின் கரைப்பான் திறன் கார உலோகங்களான சோடியம், பொட்டாசியம் ஆகிய வற்றை கரைப்பதிலிருந்து நன்கு தெளிவாகிறது. நீர்மஅம்மோனியாவில் சிறு சோடியத் துண்டைச் சேர்த்தால், நீர்மம் ஆழ்ந்த நீல நிறத்தை அடை கிறது. மேலும் சோடியத்தைச் சேர்த்தால், ஒரு கட்டத்தில் வெண்கல நிறம் (bronze-coloured) கொண்ட நிலைமை உருவாகிறது. இது நீலநிறக் கரைசலின் மீது மிதக்கிறது. மேன்மேலும், சோடி யத்தை இட்டால் இறுதியாக நீலநிறக் கரைசல் முழு தும் வெண்கல நிறமாகும். இக்கரைசலிலிருந்து அம்மோனியாவை ஆவியாக்கி வெளியேற்றினால், கார உலோகத்தைச் சிறிதும் மாற்றமின்றிப் பெற லாம். எந்தக் கார உலோகத்தைக் கரைத்தாலும் இக்கரைசலின் நிறம் நீலமாகவே உள்ளது. இதன் அடர்த்தி அம்மோனியா நீர்மத்தின் அடர்த்திக்கச் சமமாக உள்ளது. கரைசல் பாரா காந்தப் பண்பு கொண்டது. இதிலிருந்து இக்கரைசலில் பங்கிடப் படா எலக்ட்ரான்கள் (unpaired electrons) இருப்பது தெளிவாகிறது. உலோகம் நீர்ம அம்மோனியா உலோக அயனி + {NH Jx அம்மோனியா ஏற்றம் அடைந்த எலெக்ட்ரான் இருப்பதால் இக்கரைசல் சிறந்த கடத்தும் திறன் படைத்தது. அம்மோனியா (கரைப்பான்) கூடுக்குள் அடைபட்ட எலெக்ட்ரான் 1500 am அலை நீளம் கொண்ட ஒளியை உறிஞ்சுவதால் நீல நிறம் தோன்று கிறது. எலெக்ட்ரான் (கரைசலில்) தனித்த நிலையில் இருப்பதற்கு இங்கு வாய்ப்பு கூடுதலாகவுள்ளது. அமிலம், காரம் இருவகைகளிலும் சேர்க்கப்படக் கூடிய கரைப்பான்கள் உள்ளன என்றாலும், இவ் வகையில் மீ வலிவுள்ள காரத்தையும், மீ வலிவுள்ள அமிலத்யுைம் மட்டுமே சேர்க்க இயலாது. முன்பே குறிப்பிட்டதுபோல் அமில-காரத் தன்மை ஓர் ஒப்புமைத் தத்துவமாதலால், பெரும்பாலான கரைப் பான்களை ஈரியல்புள்ளனவாகக் கருதலாம். மேற்கூறப்பட்ட கரைப்பான்கள் யாவும் இரு கூறுகளில் ஒத்தவையாகவுள்ளன: (1) பரிமாற்றப் படவல்ல ஹைட்ரஜன் அணுவைக் கொண்டவை; (2) ஓனியம் அயனிகளை (onium ions) உருவாக்கல்லவை. புரோட்டானற்ற கரைப்பாள்கள். இதில் நான்கு உட் பிரிவுகள் உள்ளன: (1) மின்முனைவற்றவை: கார்பன் டெட்ரா குளோரைடு வளையஹெக்சேன் ஆகியன. வை கரிம நீர்ச் சேர்க்கைக்கு ஒவ்வாதவை; தன் அயனியாதலுக்குட்படுவதில்லை. (2) மின்முனைவு கொண்டவை. இருப்பினும் அயனியாகாதவை: அசெட்டோநைட்ரல், (CH,CN), டைமெத்தில் சல் ஃபாக்சைடு (DMSO), சல்ஃபர் டைஆக்சைடு, போன்றவை குறிப்பிடத்தக்க அளவு அயனியாவ தில்லையெனினும், ஈதல் பிணைப்பு மூலம் கரைதல் இயக்கத்தை நிகழ்த்துகின்றன. இவற்றுள் பலவும் கார வகையைச் சார்ந்த கரைப்பான்கள். எனவே அமில அமைப்புகளுடனும் எதிர் அயனிகளுடனும் இணைகின்றன. CoBr. + 6 DMSO SbC1, + CHC =N (C0(DMSO,) + 2 Br- CH.C=N SbC16 அலோக ஆக்சைடுகளும் ஹாலைடுகளும் ஏற்பி வகைக் (அமிலக்) கரைப்பான்களாகச் செயல் படுகின்றன. எனவே, நேரயனிகளுடனும் கார அமைப்புகளுடனும் வினைபுரிகின்றன. (C.H.1 CC] + SO, → - (C H ),C+ + $0, Ci இதில் மின்முனைவற்ற கரைப்பான் முதல் தன் அயனியாதல் கொண்ட கரைப்பான் வரை பல வகைகள் உள்ளன. கரைப்பானின் காரத்தன்மையை அளப்பதற்குக் சுட்மன் என்பார் வழங்கி எண் (donor number) என்னும் துணையலகை நிறுவினார் ஆட்ன்டிமனிபென்ட்டாகுளோரைடு என்னும் லூயின் அமிலத்துடன் குறிப்பிட்ட கரைப்பானின் நடுநிலை யாக்கலில் தோன்றும் உள்ளுறை வெப்ப (enthalpy} மாற்றத்தின் அளவு (எதிர்க் குறியீடு கொண்டது) அக்கரைப்பானின் வழங்கி எண்ணாகும். இந்த அலகைப் பயன்படுத்தி மின்முனைவற்ற 1.2- டைகுளோரோ எத்தேன் முதல் மின் முனைவுற்ற ஹெக்சாமெத்தில் பாஸ்ஃபோரமைடு வரை பல கரைப்பான்களின் காரத்தன்மைகளை அறியலாம். இப்பட்டியலிலிருந்து கரைப்பானின் காரத்தன்மைக் கும் மின்கடத்தாப் பொருள் மாறிலிக்கும் தொடர்பு (correlation) Jama இல்லை என்பது தெளி வாகிறது. அதாவது. கரைதல் என்பது ஒரு நிலை மின்னியல் இயக்கம் மட்டுமன்று, சக அல்லது ஈதல் பிணைப்பும் உள்ளடங்கிய செயலாகும். கரைப்பானின் அமிலத்தன்மையை அளந்தறி வதற்கு ஏற்பி எண் (acceptor number) என்னும் துணையலகு வரையறுக்கப்பட்டுள்ளது.