கரைப்பானால் சாறு இறக்கம் 757
கரைப்பானால் சாறு இறக்கம் 757 கரைப்பானால் சாறு இறக்கப்பட்ட மீன் எண்ணெய், வைட்டமின் மிகுந்த எண்ணெயைத் தருகிறது. கரி அடுப்புத் தொழிலகங்களில் அம்மோனியா கலந்த நீர்மங்களிலிருந்து ஃபீனால் மற்றும் தார் அமிலங்கள், சாறு இறக்க முறையில் பெறப்படுகின்றன. இதற்கு உதவும் கரைப்பான்கள் பென்சீன், டிரைகிரிசைல் பாஸ்ஃபேட், பியூட்டைல் அசெட்டேட் முதலியன வாகும். மருந்து தயாரிப்பில் வைட்டமின்கள், பென்சீன்,ஆரியோமைசீன், ஹிஸ்ட்டமீன்கள், ரிசர்ப்பைன் போன்ற மருந்துகளி லிருந்து இயற்கை மாசுகள், தேவையற்ற விளை பொருள்கள் இம்முறையால் நீக்கப்படுகின்றன. செய யற்கை முறை எதிர் அணு ஆற்றலுக்குத் தேவையான யுரேனியம் டைஎத்தில் ஈதர், ட்ரை பியூட்டைல் பாஸ்ஃபேட் போன்ற கரைப்பான்களைக் கொண்டு சாறு இறக்க முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது. அணு ஆற்றல் எரிபொருள்களை மீள் வழிமுறை (reprocess) வழி யாகப் புளுட்டோனியம் திரும்பப் பெறுதலிலும் (recovery), பிளவு வினைப் பொருள்களான (fission products) அரிய மண்சார் உலோகங்களைப் (rare earth metals) பிரித்தெடுப்பதிலும் இம்முறைபெரிதும் பயன்படுகிறது. எந்த முறையிலும் பிரிக்க இயலாத சிர்கோனியம் - ஹாஃப்னியம், நியோபியம் -டான்ட் டலம் ஆகிய உலோக இணைகளை இம்முறையில் எளிதாகப் பிரித்தெடுக்கலாம் தேவையான கலன்கள் சாறு இறக்கும் கலனில் முக்கியமான பகுதிகள் சாறு இறக்கிகளும் (extractors) கலவை தங்குவிப்பி களும் (setters) ஆகும். இறக்கிகளில் (படம் 1) சாறு இறக்கம் பெறும் கலவைக்கும் (feed) இறக்கம் செய்ய உதவும் கரைப்பானுக்கும் நேரடித் தொடர்பு ஏற் படுகிறது. இதனால் பிரித்தெடுக்கபப்பட வேண்டிய பொருள் பரவல் (diffusion) முறையில் கரைப் பானுக்குச் செல்லும். இப்பரவல் ஒன்றுடன் ஒன்று கலவா இரு நீர்மங்களின் தொடு பரப்பையும் (contact area), அவற்றின் கலங்கலையும் (turbulance) பொருத் தது. நீர்மங்கள் ஒன்றில் ஒன்று பரவப் புறப்பரப்பு விரிவடைகிறது. நீர்மங்கள் ஒன்றுடன் ஒன்று நன்கு கலப்பதற்கும், பின் இறக்கச் சாறு (extract) மற்றும் சாறு இறக்கப்பட்ட பின் மிதுமுள்ள திரவம் (raffinate) ஆகியவை அவற்றின் அடர்த்தி வேறுபாட்டின் அடிப் டையில் பிரிப்பதற்கும் இறக்கிகள் வழி வேண்டும். இதை நிகழ்த்துவதற்குக் கலவை அடித்தங் குவிப்பிகள் (mixer settler) உதவும். செய்ய படம் 1 ஒரு - படி (single stage) சாறு இறக்கியைக் காட்டுகிறது. சாறு இறக்கம் பெற வேண்டிய கலவையும், இறக்கும் கரைப்பானும் தொடர்ச்சியாக இறக்கிக்குள் பாய்கின்றன. இங்கு சுழலும் குலுக்கித் rotating agitator) திரவங்களைச் சிறு சிறு திவலை றக்கப்பட்ட சாறு. யா று படம் 1. ஒரு படி கலக்கி-தங்குவிப்பி உள்ள சாறு இறக்கும் கலன் களாக்கி ஒன்று மற்றதில் நன்கு பரவச் செய்கிறது. குலுக்கல் மிகு விசையுடன் நடைபெறல் வேண்டும். ஆனால் அதே நேரத்தில், இறுதியில் படிவது பாதிப் படையும் வண்ணம் மிகத் துல்லிய திவலைகளாக்கப் படுத்தலைத் தவிர்க்க வேண்டும். பரவலாக்கப்பட்ட கலவை பெரிய தொட்டி போன்ற தங்குவிப்பியுள் நுழைகிறது. பாயும் வேகக் குறைவாலும், குலுக்கல் இல்லாததாலும், புவி ஈர்ப்பு விசையால் அடித் தங்கல் ஏற்படுகிறது. இப்போது திவலைகள் ஒன்றுடன் ஒன்று சேரக் கலக்கமற்ற வெளிச் செல்லும் திரவங்கள் (effluents) ஆகின்றன. டர்வுதறைவு சற்று இறக்கப்பட்ட இறவும். அடாலு மீழ் துளைதட்டு. irud அடர்வுமிகு நீர்மம் படம் 2. செங்குத்தான கோபுரச் சாறு இறக்கிக் கலன்கள் அ. நிரப்பப்பட்ட கோபுரச் சாறு இறக்கி ஆ. துளையுள்ள தட்டு கள் கொண்ட சாறு இறக்கி