758 கரைப்பானால் சாறு இறக்கம்
758 கரைப்பானால் சாறு இறக்கம் இவ்வாறு ஒருபடி முறையில் கரைபொருளின் அடர்வு இரு நீர்மங்களிலும் ஒரு சமநிலையை அடை கிறது. எனவே சாறு இறக்கம் முழுமையடைய பலபடிக் கலன் தேவை. கரைப்பானின் அளவைக் குறைக்க எதிர் நோக்கு இடை நிலை ஓட்டம் (counter current inter-stage flow) உதவுகிறது. அணு ஆற்ற லியலில் கதிரியக்க உலோகங்களை அவற்றின் நீர்த்த கரைசல்களிலிருந்து பிரித்தெடுக்க முப்படி சாறு றக்கிக் கலன்கள் பயன்படுகின்றன. பல-படி (multistage) இறக்கிகளுக்கான மிகு நிலப் பரப்பைக் குறைக்கவும். எக்கிகளின் (pump) தேவையைக் குறைக்கவும் செங்குத்தான கோபுரங்கள் உதவுகின்றன (படம் 2). கோபுரங்கள் ஒரு நீர்மத் தால் நிரப்பப்பட்டுள்ளன. மற்றொரு நீர்மம் மேலி ருந்து சிறு சிறு திவலைகளாக, அடர்த்தி வேறு பாட்டின் காரணமாகக் கீழே இறங்குகிறது. கோபுரங் கள் தடைப்பொருளால் நிரப்பட்பட்ட நீள் உருண்டை வடிவமானவை. அடர்வு மிக்க நீர்மம் மேலிருந்து கீழ் நோக்கி இறங்கும். அடர்வு குறைந்த நீர்மம் கோபுரத் தின் அடியில் உள்ள நுண் துளைகள் வழியாக உள்ளே நுழைகிறது. குறைந்த அடர்வுடைய நீர்மத்தின் சிறு திவலைகள் அடர்வு மிக்க நீர்மத்தின் ஊடே மேல் எழுகின்றன இச்சமயத்தில் சாறு இறக்கம் நிகழ்கிறது. சாறு இறக்கப்பட்ட நீர்மம் மேலெழுந்து கோபுரத்தின் உச்சியில் வெளிப்படுகிறது. கோபுரத்தி லுள்ள தடைப்பொருளான நிரப்பிகள் (packing materials) நீர்மங்களின் பரவலுக்கும் குலுக்களுக்கும் காரணமாகின்றன. பரவலாக்கப்படும் நீர்மம் சுலவை யாகவோ. கரைப்பானாகவோ, எடை உடைய தாகவோ இலேசானதாகவோ இருக்கலாம். பல படி இறக்கிகளில் உள்ளது போல் நீர்மங்களைப் பரவ லாகச் செய்தலும் அடித் தங்குதல்களும் இம்முறையில் இல்லாத போதும், அவ்வினை விளைவுகள் கோபுர முறைகளில் ஏற்படுகின்றன. தூவி கோபுரங்களில் (spray towers) நிரப்பி கள் இல்லை. மேலும் இவற்றின் திறனும் குறைவு. சில கோபுரக் கலன்களில் துளையுள்ள தட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன (படம் 2 ஆர். அடர்த்தி குறைந்த நீர்மம் தட்டுகளுக்கு அடியிலுள்ள சேகரிப் பானில் சேகரிக்கப்படும். ங்குள்ள நுண் துளை களால் இது மேலும் பரவலடைகிறது. மேலிருந்து கீழும்,தட்டுகளின் ஊடேயும் ஓடும் உயர் அடர்த்தி உள்ள நீர்மத்தின் ஊடே இத்திவலைகள் மேலெழு கின்றன. அடிக்கடி மீள்பரவல் ஏற்படுவதால் இக் கலன்கள் திறம் படைத்தவையாக அமைகின்றன. கலன்களையே தலைகீழாகத் திருப்பும் முறையும் உள்ளது. எந்திரக் கலக்கலவை உண்டாக்கும் சுழல் இயக்கி (rotating impellers) நுண்பரவலுக்கும். கூடு தல் கலக்கலுக்கும் வழி செய்கின்றன. எந்திர அதிர்வை ஏற்படுத்தும் அதிர்வு கோபுரக் கலன்கள் (pulsed towers) மிக விரைவான (20-100 சுழற்சி நிமிடம்) நுண்ணிய அதிர்வுகளை ஏற்படுத்தும் கதிரியக்கப் பொருள்களைக் கையாள இம்முறை பெரிதும் பயன்படுகிறது. கோபுரக் கலன்களின் விட்டம், நீர்மங்களின் கொள்ளளவைப் பொறுத்தும், உயரம் சாறு இறக்கப் படிகளைப் பொறுத்தும் அமையும். 15 அடி விட்டமும் 125 அடி உயரமும் உள்ள கோபுரங்களும் உள்ளன. மேலும் நீர்ம ஓட்டங்களுக்கான எக்கிகள், கலக்கத் தேவையான எந்திரத் துருவிகள் (motor drivers), நீர்மங்களின் பாயும் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வால்வுகள், பாய்மஅளவிகள் (flow- meters), நீர்ம நிலையை நிலை நிறுத்து கருவிகள் என்பன வேண்டும். மைய நோக்குச் சாறு இறக்கிகள் (centrifuga extractors) கொண்ட வளையங்களாலான உருண்டை வடிவத் தொட்டி போன்றவை. வளையங்கள் கிடை அச்சை மையமாகக் கொண்டு மிசு விரைவகச் (2,000 -5,000 சுழற்சி நிமிடம்) சுழலும். மைய அச்சின் வழியே நீர்மங்கள் உள்ளே செல்லவும் வெளியேறவும் முடியும். பொது மையத்தில் நுண்துளைகள் அவை மையநோக்கு விசை நீர்மங்களுக்கிடையேயான அடர்த்தி வேறுபாட்டை அதிகரிக்கிறது. எனவே எதிர் எதிர்த் தொட்டிகளில் பாய் கின்றன. இக்கலனின் செயலாக்கத் திறன் நீர்மங்கள் உள் தங்கும் நேரம்குறைவேயாகும். நொதித்தல் கலக் கலிலிருந்து (ermentation broths) எதிர் நுண்ணுயிரி (antibiotic) மருந்துப் பொருள்களைப் பிரித்தெடுக்க இம்முறை சிறப்பாகப் பயன்படுகிறது ஒரு ஆய்வுக்கூடப் பயன்கள். கரைசலிலிருந்து ன்றும், அதற்கு மேலுமான பகுதிப் பொருள் களைக் குறிப்பிடத்தகுந்த அளவில் தனித்துப் பிரிக்க பண்பைப் வல்ல சில கரைப்பான்களின் அளப்பரிய பயன்படுத்திச் சாறு இறக்கும் முறை தோன்றியது. இதை கரிய ஆய்வுக்கூடத்தில் வேதிப்பொருள் தயாரிப்பிலும், தூய்மைப்படுத்தலிலும், பகுப்பாய்வுப் பிரிப்புகளிலும் கையாளுகின்றனர். எளிதில் பிரித் தெடுக்க புனல் பயன்படுகிறது. கைசளால் குலுக்கல் செய்யப்படுகிறது.இயற்கை உயிரியல் பொருள்களான ஹார்மோன்,சீரம், வேக்சீன், வைட்டமின், தாவரச் சாறு முதலியன பல வேதிச் சேர்மங்களால் ஆனவை. வை எளிய பகுப்பாய்வு முறைகளால் பிரித்தெடுக்க இயலாதவாறு ஒப்பும் சிக்கலும் கொண்டுள்ளன. கிரெய்க் (Craig) என்னும் ஆராய்ச்சியாளரின் ஒப் பற்ற ஆய்வுக்கூட முறையால் இவை பகுதிப் பொருள் களாகப் பிரிக்கப்படுகின்றன. இம்முறை தானியங்கி யாசு ஆயிரக்கணக்கான சாறு றக்கங்களைச் செய்யும் தன்மை உடையது. சாறு இறக்கல் வழிமுறை. கரைசலிலிருந்து சாறு அத்துடன் கலவாத ஒன்று யில் பிரித்தெடுப்பதைப் கரைபொருள் துக்க முறை கரைப்பானால் பின்வ வருமாறு குறிப்பிடலாம்.