பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கட்டமைப்புக்‌ கூறுபாடுகள்‌

58 கட்டமைப்புக் கூறுபாடுகள் சீர்மை நிலமடிப்புகள் என்றும், அச்சுத்தளம் அமிழ் கோணச் சாய்வுடன் அமைந்தால் அத்தகைய நில மடிப்புகள் சீர்மையிலா நிலமடிப்புகள் என்றும், அச்சுத்தளம் கிடைநிலையில் அல்லது ஏறத்தாழ அந்நிலையில் அமைந்தால் நேப்பி அல்லது சாய்நிலை நிலமடிப்புகள் என்றும் பகுக்கப்படும். சாய்நிலை அளவினவாகவே அமைந் மடிப்புகள் மிகப்பெரிய துள்ளன. 70° நிலமடிப்பின் இரு உறுப்புகளில் ஒன்று தலை கீழாகத் திரும்பி இரு உறுப்புகளுமே ஒரே அமிழ் கோணத் திசையும் வேறுபட்ட அமிழ்கோண அளவு களும் கொண்டிருந்தால் அத்தகைய நிலமடிப்பு வகை யைப் பிறழ் நிலமடிப்பு என்றும், நிலமடிப்பின் இரு உறுப்புகளுக்கும் உட்பட்ட இடைக்கோணம் அளவிற்கும் மேல் அமைந்தால் அவற்றைத் திறந்த வகை நிலமடிப்புகள் என்றும், 30-70 உள்ளதாக அங்க இடைக்கோணம் கொண்டவற்றைக் குவிவகை யின என்றும், 30க்கும் முடைய நிலமடிப்புகளை இறுக்கமான வகையின என்றும் குறிப்பிடலாம். குறைவான உட்கோண நிலமடிப்பின் இரு உறுப்புகளும் ஒன்றுக்கு ஒன்று ணையாக அமைந்தவை அ, த சமகோண நிலமடிப்பு எனப்படும். இவை நிமிர்ந்தோ, சாய்ந்தோ, கிடை நிலையாகவோ அமைவதற்கு ஏற்ப, முறையே நிமிர் சமகோண, சாய்சமகோண, கிடைச்சமகோண நில மடிப்புகள் எனப் பாகுபடும். பாறைப் படிவத்தின் ஓர் உறுப்பு மட்டும் மடிந்து கிடைநிலையில் இருக்க. அதுவே மேல் உயர்ந்து நிமிர்நிலை அடைந்து மீண்டும் முன்னமைந்த கிடைநிலைக்கு இணையாக மாறி விடுவதைக் கொண்டும், அதன் அமிழ்கோணத் திசை யில் எந்தவித மாற்றமும் இல்லாமை கொண்டும். அதனை ஒருகோணநிலமடிப்பு (monoclinal fold; என்பர். நிலமடிப்பின் இரு உறுப்புகளும் மேல்நோக் கிக் குவிந்துள்ள நிலையில் அமைந்தவற்றை முகட்டு நிலமடிப்புகள் என்றும் இரு உறுப்புகளும் கீழ்நோக்கிக் குவிந்துள்ளவை கவட்டு நிலமடிப்புகள் (synclinal folds) என்றும் கூறலாம். முகட்டுநிலமடிப்புகளின் இரு உறுப்புகளில் ஒவ் வொன்றும் பற்பல சிறுமுகட்டு நிலமடிப்புக்களைக் கொண்டு அமைந்திருப்பின் முகட்டுக் குழுமம் (anti- clinoria) எனவும். கவட்டு நிலமடிப்புகளின் இரு உறுப்புகளும் பற்பல சிறுசிறு கவட்டு நில மடிப்பு களுடன் கொண்ட கவட்டு நிலமடிப்புகள் கவட்டுக் குழுமம் (synclinoria) எனவும் குறிக்கப்படும். NV 2 அ. த சமச்சீர் நிலமடிப்பு சீர்மையிலா நிலமடிப்பு கிடைநிலை நிலமடிப்பு(நேப்பி) A பிற நிலைமடிப்பு திறந்த வகை குவிந்த வகை இறுக்கமான வகை படம் 3