கல்கவுதாரி 761
போலப் பளபளப்பான வண்ண நிறங்களைப் பெற் இரா. வறண்ட பாலைவெளிகளில் தரையில் திரிந்த வாறு இரை தேடும். நெடுந்தொலைவு விரைவாகப் பறக்கும் ஆற்றல் பெற்ற இவை, சிறிய கால்களை உடையனவாயினும் நன்கு நடக்கவும் ஓடவும் செய் கின்றன. தென்னிந்தியாவில் கல்கவுதாரி (Pterocles exusius) வண்ணக் கல்சுவுதாரி (Pieroles indilus) ஆகிய இரு சிறப்பினங்கள் மணற்பாங்கான வறண்ட நிலப் பகுதிகளில் காணப்படுகின்றன. கல்கவுதாரி மஞ்சள் தோய்ந்த மணற்பழுப்பு நிற உடலைக் கொண்டது. ஆண்பறவை தலையிலும் உடலின் மேற்பகுதியிலும் மார்பிலும் சிறிய பிறை வடிவக் கருங்கோடுகள் நிறைந்திருக்கும். வயிறு பழுப்பு நிறக் கறுப்பு நிறம் கொண்டது. நீண்ட கூரிய வால் 12 செ.மீ. நீளம் இருக்கும். மங்கிய பழுப்பு நிறக் கருங்கோடுகள் கொண்ட மேல் உடலை யும் கரும்புள்ளிகள் கொண்ட மார்பையும் பெண் கொண்டிருக்கும். ஆண், ஆகியவற்றின் மார்பில் மெல்லிய கறுப்பு வளையம் குறுக்கே செல்லக் காணலாம். பெண் பொட்டல் நிலங்களிலும் உழுது தரிசாகக் கிடக் கும் புழுதியிலும் இது 3-10 வரை சிறு குழுவாகத் திரியும். காடுகளையும் கடற்கரைப் பகுதிகளையும் இது நாடிச் செல்வதில்லை. தமிழ் நாட்டில் திருச்சி. இராமநாதபுரம் மாவட்டங்களில் இவை படுவனவாகக் குறிப்பு உண்டு.தரையை ஒட்டியவாறு ஓடியாடித் திரியும் இதன் நிறம் தரையின் நிறத் காணப் கல்கவுதாரி 76 தோடு ஒத்திருப்பதால் மிக அருகில் திரியும்போது கூடக்கண்ணில் படாது போகலாம். தரையில் திரிந்து புல் விதைகளையும் தானியங்களையும் மணலோடு பொறுக்கும் இதற்கு நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் நீர்நிலைகளுக்கு நீர் பருக வரும் பழக்கம் உண்டு. நீர்நிலையில் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக இறங்கி நீர் குடிக்கும் பழக்கமுள்ள இதை வேட்டைக்காரர்கள் நீர்நிலையருகே காத்திருந்து வேட்டையாடிப் பிடிப்பர். வேட்டையாடுவதில் விருப்பமுள்ள அமெரிக்கர்கள் இதை அண்மைக் காலத்தில் ஐக்கிய அமெரிக்காவில் மணற்பாங்கான நெனேடா. ஹவாய் மாநிலங்களில் விட்டுள்ளதோடு அங்கு இது இனப்பெருக்கம் செய்ய ஏற்பாடுகளை யும் செய்து இது அங்கு பல்கிப் பெருகும் விதம் பற்றி ஆய்ந்து வருகின்றனர். பறக்கும்போது 'குட்ரோ' என உரக்கக் குரல் கொடுத்து எழுந்து பறக்கும். ஜனவரி - மே வரை உள்ள பருவத்தில் விளைநிலங்களில் பயிர்களுக் கிடையே வெறுந்தரையில் இரண்டு மூன்று முட்டை யிடும். சாம்பலும் மஞ்சளுமான உருண்டை வடிவ முட்டைகள் பல நிறச் சிறு புள்ளிகளைக் கொண் டவை. அடைகாக்கும் காலம் 20 நாளாகும். வண்ணக் கல்கவுதாரியில் ஆண் பறவை நெற்றி யின் மேல் கறுப்புப்பட்டை ஒன்று இருக்கும். இதன் மார்பில் காணப்படும் வளையத்தில் பழுப்பு, மஞ்சள், கறுப்பு ஆகிய மூன்று நிறப்பட்டைக்கோடுகள் அடுத் தடுத்து அமையக் காணலாம். பெண் வண்ணக் கல்கவுதாரி ஆணைப் போல நெற்றிப் பட்டையை I VOL 7 கல்கவுதாரி