பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/783

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்நார்‌ 763

பகுதிகளில் தரையில் காணப்படும் சிறு குழிகளில் புல்லையிட்டு மெத்தென்று ஆக்கி நான்கு முட்டை களிடுகிறது. க. ரத்னம் கல்நார் 763 கல்நார் இரும்பு, மக்னீசியம், நிக்கல், அலுமினியம் ஆகிய வற்றுடன் நுண்மணல் சார்ந்த சிலிகேட் உப்புகளா லான கலவையே கல்நார் (asbestos : ஆகும். இது இயற்கையிலேயே நார் போன்ற ழைகளாகக் கிடைப்பதாலும் கல் போன்ற உறுதியுடன் உள்ள தாலும் கல்நார் எனப் பெயர் பெற்றது. கல்நார் இரண்டு வகைப்படும். ஒரு வகையில் சில கனிமங்களின் நார் போன்ற இழைகள் எளிதரசு பிரிக்கக்கூடியனவாக இருக்கும். பிறிதொரு வகையில் அந்த இழைகளைப் பிரித்தெடுக்க இயலாது. இதன் அடிப்படையில் பிரியும்-கல்நார், பிரியாத கல்நார் என்று வகைப்படுத்துவர், இவ்விரு வகைக் கல்நார் களில் பிரியும் வகையைச் சேர்ந்தவை சிறந்தவை எனலாம். இவ்வகையே மிகவும் பயனுள்ளதாகும். கல்நார், கனிமங்களின் அடிப்படையில் இரண்டு வகையாகக் கிடைக்கிறது. அவை ஆம்ஃபிபோல் குழுவைச் சேர்ந்தவை, செர்ப்பன்ட்டைன் குழுவைச் சேர்ந்தவை எனப்படும். ஆந்தோஃபில்லைட், அமோ சைட், ட்ரிமோனலட், ஆக்டினோலைட், குரோசி டோலைட் ஆகியவை ஆம்ஃபிபோல் இனத்தைச் சேர்ந்தவை. கிரைசோட்டைல், செர்ப்பன்ட்டைன் இனத்தைச் சேர்ந்ததாகும். கல்நாரின் இழைகள் மிகவும் மென்மையாகவும், வழவழப்பாகவும் உள்ளன. இவை மிகுந்த இழுதிறன் கொண்டவை. கல்நாரின் இழுதிறன் எஃகின் திறனுக்குச் சமமாக உள்ளது. கல்நாரின் இழைகளில் தீப்பிடிக்காது; மேலும் அமிலங்கள் இந்த இழைகளைப் பாதிப்பதில்லை. உயர் வெப்பத்தைத் தாங்கக் கூடியன வாகவும் உள்ளன. கல்நார், ஆலிவீன் என்னும் கனிமத்தைப் பெரு மளவில் கொண்டுள்ள பெரிடோடைட், டூனைட், பைராக்சினைட் பெரிதும் ஆ கிய பாறைகளில் காணப்படுகிறது. ஆலிவீன் மாற்றமடைந்து செர்ப் பன்ட்டைன் கனிமமாசு மாறுகிறது. இது பின்னர் மெல்லிய பட்டகப்படிகங்களாக உருவெடுத்து நார் போன்ற இழைகளாகிறது. இவ்வாறு கிரைசோட் டைல் என்னும் கல்நார் படிவுகள் தோன்றுகின்றன. சிலசமயங்களில் வெப்பம், அழுத்தம், வேதி நிலை களுக்கு ஏற்பப் பெரிடோடைட், பைராக்சினைட் ஆகிய பாறைகள் மாற்றம் அடைந்து ஆம்ஃபிபோல் படம் 1.இயற்கையில் காணப்படும் கல்நார் இதன் இழைகள் பாறைகளிலிருந்து பிரிக்கப்பட்டுத் தீத்தடுப்பு இழைகளாக நூற்கப்படுகின்றன. குழுவைச்சேர்ந்த கனிமங்களாகிக் கல்நார் தோன்றும். தனால், கார அனற்பாறைகள், மிகு கார அனற் பாறைகளிலிருந்து அல்லது இப்பாறைகளிலிருந்து உண்டான மாற்றுருப் பாறைகளிலிருந்து கல்நார் கிடைக்கிறது எனலாம். கல்நார் மேலே கூறப்பட்ட பாறைகளில் நீண்ட நரம்புகளைப் போன்று காணப்படுகிற றது. கல்நாரின் இழைகள் நரம்புகளின் நீளத்திற்கு ணையாக உள்ளன. இது ஒரு வகையாகும். சிலசமயங்களில் இழைகள் நரம்புகளின் நீளத்திற்குக் குறுக்காக அமை கின்றன. இந்த அடிப்படையில் கல்நார் குறுக்கு இழைக் கல்நார், நீள் இழைக் கல்நார் என வகைப் படுத்தப்படும். இந்த இரண்டு வகைகளில் குறுக்கு இழைக்கல்நார்தரத்தில் சிறந்துள்ளது. கல்நார் இழை களின் நீளம் பொதுவாக 8 செ.மீ. வரை இருக்கும். சில இழைகள் 25-30 செ.மீ. நீளமும் இருக்கும். கிரைசோடைல், குறுக்கு இழைக்கல்நாராகவும், நீள் இழைக் சல்நாராகவும் கிடைக்கிறது. ஆம்ஃபிபோல் இனத்தைச் சேர்ந்தவை பெரும்பாலும் நீள் இழைக் கல்நாராகவே கிடைக்கின்றன. இந்தியாவில் கல்நார் இழைகளின் நீளத்தை அடிப்படையாகக் கொண்டு மூன்று தரங்களாகக் கூறப்படுகின்றன. கல்நாரின் திறன், வளையுந்தன்மை, லெப்பந்தாங்கும் ஆற்றல் முதலான தன்மைகளை அடிப்படையாகக் கொண்டும் பல வகைகளாகப் பிரிக்கலாம். கிரைசோடைல், படம்2 இது நீர் கலந்த மக்னீ சியம் சிலிக்கேட்டாகும் (Mg, Si, O. (OH)). இது வேதிச் சேர்க்கையில் செர்ப்பன்டைன் கனிமத்தை