772 கல்யாண முருங்கை
772 கல்யாண முருங்கை வயிற்று வலியைப் போக்கி மிகப் பருத்த உடலை இளைக்கச் செய்து மலட்டு நோயையும்நீக்கும். சிறுநீர் எரிச்சல், சிறுநீர்த்தடை முதலிய நோய் களுக்கு இதன் இலைச்சாற்றை 4 மி.லி. முதல் 8 மி.லி. வரையில் காலை, மாலை இருவேளையும் கொடுத்து வர அந்நோய்கள் தீரும். இதன் இலை, மிளகு, அரிசி இவற்றைச் சேர்த்து அரைத்து அடை சுட்டு அதைச் சுடச்சுட நெய்யில் தோய்த்து உட் கொண்டு வர இருமல், இளைப்பு, இரத்தகாசம் தீரும். கடும் பத்தியமிருக்க வேண்டும். இதன் பூவைக் குடி நீரிட்டுக் குடித்தாலும், அல்லது கருப்பைக்கு நேராக அடிவயிற்றில் வைத்துக் சுட்டினாலும் இரத்தக் குன் மத்தைப் போக்கும். குடிநீரிட்டுக் கொடுக்க, குன்ம நோயைப் போக்கும். . 9 இதன் விதையை மேற்றோல் நீக்கி நன்றாகக் காயவைத்து, இடித்துப் பொடித்து வஸ்திரகாயம் செய்த தூளில் 130-260 மிகி. எடை வரை இரவு படுக்கும் முன் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு. மறுநாள் காலையில் விளக்கெண்ணெய் சாப்பிட, மலம் பெருகி மலக்கிருமிகள் அழிந்துவிடும். இதன் பட்டையின் உட்பகுதியில் நெய் தடவித் தீயில் வைக்க, இதில் ஒருவகைப் புகை படியும். அதை எடுத்துக் கண்ணில் கீழிமையின் உட்புறத்திலும், ஓரத்திலும் தடவிவர, கண்ணோய் முதலியநோய்கள் நீங்கும். என்னும் பட்டை ரசத்தைப் புண் கிருமிகளைக் கொல்லப் பயன்படுத்தலாம். காய்ந்தாறிய பாலுடன், வெண் முருக்கன் இளம்வேர்ச் சூரணம் சேர்த்துச் சாப்பிடத் தாது புஷ்டி உண்டாகும். வேர்ப்பட்டை 24 கிராம், தூய நீர் 251 மி.லி. சேர்த்து நாலிலொன்றாகக் கஷாயமிட்டு. வசந்தகுசுமாகரரசம் மாத்திரை சேர்த்து ஒவ்வொரு நாளும் காலையில் அருந்திவர, நீரிழிவு நோய் நீங்கும். கலியாண முருக் கஞ் சாற்றிலாவது, சீமை அகத்திச்சாற்றிலாவது சோற்றுப்புக் கூட்டியரைத்து அல்லது கரைத்துப் படைகளின் மீது தடலினால் உதிர்ந்து போகும். கல்யாண முருங்கை சே. பிரேமா இம்மரத்தின் வேறு பெயர்கள் இந்தியப் பவழ மரம், கலியாண முருக்கு, கலியாண முருக்கன் முருக்க மரம், முள்ளு முருக்கு, வல்லை. சிஞ்சுசும் நெருப்புக்கொட்டை மரம் என்பன. இதன் இண்டிகா (Ery- பாப்பிலியோனேசி தாவரப் பெயர் எரித்ரைனா thrina indica) ஆகும். குடும்பத்தைச் இது சேர்ந்தது. கல்யாண முருங்கை (Indian coral tree) இந்தியா, ஆஃப்ரிக்கா, மடகாஸ் கர் இலங்கை, பர்மா தாய்லாந்து, ஜாவா கம்போடியா, லாபோஸ், வியட்நாம். சீனா, மலேசியா போன்ற நாடுகளிலும் உள்ளது. இம்மரத்தின் தாயகம் இந்தியா. பீகார், வங்காளக் கடல் ஓரக்காட்டுப் பகுதி, இமயமலைப் பகுதிகளில் இம்மரம் காணப்படு கிறது. வறண்ட நிலப்பகுதிகளில் வளரும் தன்மை கொண்ட இம்மரம் வலிவ வற்றது. எனவே பெருங் காற்று வீசும்போது எளிதில் ஒடிந்து கீழே சாய்ந்து விடும். இம்மரத்தை இந்தியாவின் பல பகுதிகளில் வேலி களில், வெற்றிலை, மிளகுக் கொடிகளை ஏற்றி வளர்ப்பதற்குப் பயிரிட்டு வருகின்றனர். இது காற் றுத்தடை மரமாகவும் வளர்க்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மலைப்பகுதியில் தேயிலை, காப்பித் தோட்டங்களிலும் இம்மரத்தைக் காணலாம். இது ஒரு சிறு மரம் ஆகும். இது 15-18 மீட்டர் உயரம் வரை வளரும் இயல்புடையது. அடிமரத்தண்டு வழ வழப்பான பட்டையுடன் மேலே முள்களைக் கொண் டிருக்கும். இலைகள் 20-30 செ.மீ. நீளத்திலிருக்கும். உள்ளன. என கூட்டிலைகள். சிற்றிலைகள் அகன்ற முட்டை வடிவில் இருக்கும். இவ்விலைகள் இரண்டு பக்கங் களில் இரண்டும் நுனியில் ஒன்றும் மூன்று நுனிச்சிற்றிலை பிற இரண்டு சிற்றிவை களை விடப் பெரியது. சிற்றிலைகள் 5-15 × 5.5- 17 செ.மீ. அளவில் இருக்கும். இலையின் ஓரம் முழமையாக இருக்கும். இலைக்காம்பு 15செ.மீ. நீளம் இருக்கும். மூன்று சிற்றிலைகளாலான கூட்டிலைகளைக் கொண்ட இம்மரத்தின் கிளை நுனியில் பவளச் சிவப்புப் பூக்கள் கொத்தாக மலரும். மலர்கள் கை விரல்களை நீட்டியுள்ளது போலத் தோன்றும். பூங் கொத்து 5-15 செ.மீ. நீளமிருக்கும். பூக்காம்பு தடிப்பாகவும் கடினமாகவும் இருக்கும். பூவடிச் செதில் முக்கோண வடிவிலும், பூக்காம்புச் செதில் தமர் ஊசி வடிவிலும் (subulate) இருக்கும். புல்லி வட்டம் 2 0.6செ.மீ. நீளமிருக்கும். நுனிப்பகுதியில் பற்களைப் போன்ற அமைப்புடன் இருக்கும். அல்லி இதழ்கள் ஒளிர் சிவப்பு நிறத்துடன் இருக்கும். இலைகள் உதிர்ந்தவுடன் பிப்ரவரி-ஏப்ரல் மாதங்களில் பூக்கும். காய்கள் 15-30 செ.மீ. நீளமாக வளைந்து கறுப்பாக இருக்கும். ஒரு காயில் 10-1£ கொட்டைகள் இருக்கும். விதைகள் இளஞ்சிவப்பு நிறத்துடன் பருத்து இருக்கும். விதையைத் தரையில் வேசுமாக உராய்ந்தால் சூடு பிறக்கும். இதற்குச் சூட்டுக் கொட்டை மரம் அல்லது நெருப்புக் கோட்டை மரம் என்னும் பெயர் வந்தது. விதைகள் வழுவழுப்பாக இருக்கும். அழகிய பூக்களுக்காசு இம்மரம் சாலை வளர்க்கப்படுகிறது. எனவே ஓரத்திலும் தன் மரம் வின கோயில்களிலும் ளையாட்டுப்