பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/794

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

774 கல்லீரல்‌

714 கல்விரல் உதவும். இதன் இலைச்சாறு ஒரு தேக்கரண்டியுடன் ஒரு தேக்கரண்டி ஆமணக்கெண்ணெயைச் சேர்த்து நாளும் மூன்று வேளை சாப்பிடச் சீதபேதி குண மாகும். இலைச்சாறு 30 மி.லி. உடன் சிறிதளவு தேன் கலந்து உள்ளுக்குத்தர நீர் மலத்துடன் குடற் புழுக்கள் வெளியேறும். கீல் வாதத்திற்கு இலை களைத் தூளாக்கி வெந்நீரில் இட்டுக் காய்ச்சி நல்ல சூட்டோடு வைத்துக்கட்ட வலி நீங்கும். இலையைத் தேங்காய் எண்ணெயில் சமைத்து உண்ணத் தாய் மார்களுக்கு பால் மிகுதியாகச் சுரக்கும் எனக் கருதப் படுகிறது. பூக்கள் காதுக்கோளாறு, குன்மம் ஆகிய நோய் களுக்கு உதவும். பட்டை, கண்நோய்களுக்கு உதவும். பட்டையின் சாற்றைப் புண்ணில் தடவ, அது விரைவில் குணமாகும். வெள்ளை முருக்க மரத்தின் இளம் வேரை உலர்த்திப் பொடித்துக் காய்ச்சி ஆறிய பாலில் கலந்து அருந்திவர விந்து விருத்தி உண்டாகும். எரித்ரினா வேரிகேட்டா (Erythrina Variegata) மரத்தை அந்தமான் - நிக்கோபார் தீவுகள் உள்பட இந்தியாவின் இலையுதிர் காடுகளில் காணலாம். இது காட்டு மரமாக வளர்கிறது. 15 மீட்டர் உயரம் வளரும். இலைகள் 15-30. செ.மீ. நீளமாக, மூன்று சிற்றிலைகளைக் கொண்டிருக்கும். பூக்கள் சிவப்பு நிறத்துடன் நீளமான ரசீம் மஞ்சரியில் தோன்றும். விதைகள் பழுப்பு நிறத்துடன் அவரை விதை வடி விவிருக்கும். இலைச்சாற்றை இளஞ்சூடாக்கி நெஞ்சில் தடவி வர இருமல் நோய் போகும். பட்டை கண்ணோய் களைப் போக்கவும், இருமல், சளியை நீக்கவும் உதவும். இதன் இலைகளை முயல் விரும்பி உண்ணும். கோ. அர்ச்சுனன் நூலோதி, எஸ்.. சுந்தரம், சாதாரண மரங்கள், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, புதுடில்லி, 1966. கல்லீரல் காண்க: ஈரல் கல்லீரல் இரத்தக் குழாய்க்கட்டி அறிகுறிகள் மிகுதியாக இல்லாமையால், குழந்தை பிறந்த உடன் இந்தக் குறைபாடு கண்டுபிடிக்கப் படுவதில்லை. பெண் குழந்தையே இக்குறைபாட்டால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. கல்லீரலின் இடப் பகுதியில்தான் இந்நோய் மிகுதியாக உண்கிறது அறிகுறிகள். வயிறு வீக்கம், உள் இரத்தக் கசிவால் இரத்தச் சோகை, வயிற்றில் கட்டி புலப் படுதல், கட்டியின்மேல் தொடர் முணுமுணுப்புப் போன்றவை ஏற்படலாம். எக்ஸ் கதிர் விச்சுப் படத்தால் இந்நோயை அறியலாம். ஊசி மூலம் உறிஞ்சுதல் தவிர்க்கப்பட வேண்டும். பிறந்த குழைந்தைக்கு மண்ணீரல் வீக்கம், கல்லீரல் இரத்தத் தேக்கம், வயிற்றின் மேலுள்ள சிரைகள் விரிவடைதல் போன்றவை ஏற்படக் கூடும். மஞ்சள் காமாலை, நுண்தட்டுச் செல்கள் குறைவு போன்றவையும் அரிதாக ஏற்படக்கூடும். இந்த இரத்தக் குழாய்க் கட்டி வெடிப்பதால் இறப்பும் ஏற்படும். மிகப் பெரிய சுட்டிகள் வெற்றி கரமாக அறுவை மருத்துவம் மூலம் அகற்றப்படக் கூடும். கல்லீரலில் பல இரத்தக் குழாய்க் கட்டிகள் இருக்குமானால் அவை தமனிச் சிரை இணைப்பைப் போல் செயல்பட்டு தய அயர்வு, இதயத் தசை வீக்கம், போன்றவற்றை ஏற்படுத்திவிடக்கூடிய தீமை உண்டு. போயம் இல்லாத கட்டிகள் பிறவி இதயக் கோளாறுகளைப் போன்ற அறிகுறிகளைக் காட்டக்கூடும். இந்தக் குழந்தைகளின் இதயத்தில் அல்லது இரத்தப் பெருங்குழாய்களில் எவ்விதக் கோளாறும் இருக்காது. இது தீமையற்ற, மிகுதியாகக் காணப்படும் ஒரு வகைக் கட்டியாகும். மிகப்பெரிய கட்டிகள் இரத்த பிளெட்லெட் அணுக்குறைவையும், இரத்த உறைதல் கோளாறுகளையும் ஏற்படுத்தக்கூடும். கசாபா மெரிட் என்னும் ஒரு நோய்க் கட்டியால், இரத்த உள் உறைவால் பிளேட் லெட் அணு குறைகிறது. கட்டியுடன் மண்ணீரலையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுவதால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். நா, கங்கா கல்லீரல் தமனி போர்ட்டல் சிரை இணைப்பு இது ஓர் இயல்பு மாறிய பிறவிக் கோளாறு ஆகும். இதன் மருத்துவ முறைகள் சில ஆண்டுகளாகவே விளக்கப்பட்டுள்ளன. கல்வீரலுக்கு உள்ளேயோ வெளியிலோ இந்த இணைப்பு இருக்கக் கூடும். அறிகுறிகள். இந்நோயில் உணவுக்குழாய் அல்லது முன்சிறுகுடல் சிரைக்கொத்து (oesophageal and duo denal var} இரத்த ஒழுக்கு, வயிற்றுவலி ஆகியன தோன்றலாம். வயிற்றின் புறப்பரப்பில் தொடர் முணுமுணுப்புக் கேட்கக்கூடும். இந்தத் தமனிச் சிரை இணைப்பு, பிறவியில் இருப்பதுபோலவே, காயத்தால் அல்லது கல்லீரல் தமனி வெடிப்பால் ஏற்படலாம்.