பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/795

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லீரல்‌ நார்‌ மிகைத்தல்‌ 775

பெருந்தமனி எதிர்நிறப் படத்தால் இந்த ணைப்பை அறியலாம். போர்ட்டல் சிரைநுனி பிறவியில் இல்லாமை. மிக அரிதாக ஏற்படும் இந்தக் கோளாறு பிறந்த ஆறு மாதத்தில் இறந்த ஒரு பெண் குழந்தையிடம் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் குழந்தையின் கல்லீரலுக்குள் சிரை மண்டலம் இல்லை. போர்ட்டல் சிரையின் வழக்கமான கிளைகள் ஒரு பெரிய இரத்தக் குழாயில் முடிந்திருந்தன. அந்தக் குழாய், கல்லீரலுக்குப் பின்புறம் சென்று, கல்லீரல் சிரையுடன் இணைந்து கீழ்ப்பெருஞ்சிரையாக மாறியது.உதரவிதானத்திற்குக் கீழுள்ள கீழ்ப்பெருஞ் சிரைப் பகுதி, இலியச் சிரைகள் சிறுநீரகச் சிரைகளின் கூட்டால் ஏற்பட்டன. உதர விதானத்தின் மூலம் உட்சென்று அசைகாஸ் சிரையுடன் இணைந்து வல மேலறையில் முடிந்தது. உருப்பெருக்கியின் மூலம் கல்லீரலை ஆய்வு செய்ததில், கல்லீரலுக்குள் சிரை மண்டலம் இல்லை, இதனால் தய வெளிப்பாடு மிகுதியாயிற்று. கரு வளர்ச்சி விதிப்படி இதை ஆராய்ந்தால், கொப்பூழ்ச் சிரையுடன் கல்லீரல் இணைவது தடைப் படுத்தப்பட்டுக் கீழ்ப்பெருஞ்சிரையின் கல்லீரல் பகுதி உற்பத்தியாவது தடுக்கப்பட்டுள்ளது என்று கொள்ள லாம். போர்ட்டல் சிரைப் பிறவி மாறுபாடுகள். கல்லீரல் தமனியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் போர்ட்டல் சிரையில் பிறவிக் கோளாறுகள் குறைவாகும். அறுவை மருத்துவத்திற்கு முக்கியமான வகையில் பின்வரும் மாறுதல்கள் தோன்றலாம். போர்ட்டல் சிரை நேரிடையாகக் கீழ்ப்பெருஞ் சிரையில் இணையலாம். சிரையும் அதன் கிளைகளும், மண்ணீரலுக்கும் முன்சிறு குடலுக்கும் முன்பக்கமாகச் செல்லலாம். நுரையீரல் சிரைகள் போர்ட்டல் சிரை யுடன் இணையலாம். சிரைக் குறுகல் இருக்கலாம். கல்லீரல் தமனிப் பிறவி மாறுதல்கள் பெருந்தமனியி லிருந்து நேரிடையாக அல்லது மேல் குடல்தாங்கித் தமனியிலிருந்து இது வெளிப்படலாம் இட வயிற்றுத் தமனியிலிருந்தும் வெளிப்படலாம் ஒன்றுக்கு மேற் பட்ட கல்லீரல் தமனி விரிவடையலாம். விரிவு ஏற்படும் இடத்தைப் பொறுத்துக் கல்லீரல் இரத்த ஓட்டம் மாறுபடும். போர்ட்டல் இரத்த ஓட்டத்தடையும் ஏற்படலாம். கொப்பூழ்ச் சிரையில் ஏற்படும் நார்த்திசுப் பெருக்கம் போர்ட்டல் சிரை யிலும் நுழைத்து பிறவியிலேயே அடைப்பு ஏற்படக் கூடும். கல்லீரல் நார் மிகைத்தல் 775 போர்ட்டல் சிரை தேன்கூடு மாறுபாடு. பிறவியில் அல்லது பிறந்தபின் ஏற்படும் அடைப்பு அல்லது புற்று நோயால் போர்ட்டல் சிரை தேன்கூடு போன்ற அமைப்படைந்து கல்லீரல் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு ஒரு வெளிக் காரணமாகிறது. கல்லீரல் நார் மிகைத்தல் நா. கங்கா இந்நோய் ஈரல் அழற்சியால் உண்டாகிறது. குழந் தைப் பருவ ஈரல் அழற்சி, வைரஸ் ஈரல் அழற்சி ஏ மற்றும் பி நாள்பட்ட தொடர் அழற்சி (chronic active hepatitis) மருந்துகளால் உண்டாகும் ஈரல் அழற்சி ஆகிய முக்கிய காரணங்களால் இது தோன்றலாம். மெதுவாகத் தொடங்கும் இந்நோய், மஞ்சள் காமாலை இல்லா ஈரல் அழற்சி, வில்சன் நோயை ஒத்த நோய்க் குறிகளுடன் காணப்படும். நாட்பட்டு முற்றும் இந்நோயில் ஈரல் அழற்சியை ஒத்த நோய்க்குறிகள் இடை இடையே தோன்றும். சில வேளைகளில் நோய்களின் விளைவுகள் மிகுதி யாகக் காணப்படா நிலையில் நார் மிகுத்தல் தொடர்ந்து நடைபெறும். ஈரலின் தாங்கும் தன்மையைப் பொறுத்து நார் மிகுத்தலின் விரைவு தோற்றுவித்த நோய் தொடர்ந்து காணப்படும். அறிகுறிகள். உடல் சோர்வு, பசியின்மை, நலிவு, எதிர்க்களித்துவரும் வாந்தி போன்ற உணர்ச்சி ஆகிய நோய்க்குறிகள் பொதுவாகக் காணப்பட்டாலும் சில சமயங்களில் அஞ்சத்தக்க விளைவாகிய செரிமான மண்டலக் குருதிவாரி (gastro intestinal haemorrhass), மகோதரம் (ascitis). ஈரல் ஆழ் மயக்கம் போன்ற குறிகளும் முதவில் இந்நோயைக் காட்டும். இக்குறி களுடன், ஈரல், மண்ணீரல் வீக்கம், சிலந்திக் கால்கள் போல் தோற்றமளிக்கும். இரத்த நாள் வீர்ப்பு (spider angioma), ஈரல் உள்ளங்கை (liver palm எனப்படும் சூட்டுடன் உள்ளங்கை சிவத்தலும் காணப்படும். அரிதாக மார்புக்கூட்டைத் தட்டிச் சிறுத்த ஈரலையும் கண்டுபிடிக்கலாம். பொதுவாக ஈரல் சிறிது வீர்த்து மார்பு எலும்பின் கீழ்ப்பகுதி கடினமாக இருப்பதைத் தொட்டுணரலாம். ஆண் களில் முலை பருத்துக் காணப்படும். 10-15% உருண்டும் நோய்களில் விரல் நகங்கள் பருத்தும் இருக்கும். பருவமடைந்த பெண்களின் மாதவிலக்கு நின்று போகும் குறைபாடு தோன்றும். உயிர் வேதியியல் ஆய்வு இந்நோயில் புரோம்சல் பாதலின் வெளியேற்றும் ஆய்வில் மிகுதியான அளவு உடலில் தங்கியுள்ளதை அறியலாம். மஞ்சள் காமாலை தோன்றாமலும் இருக்கும். இரத்தத்தில் அல்புமின் அளவு குறைந்தும் காமாகுளோபிலின் அளவு கூடியும் காணப்படும். புரோத்திராம்பின் நேரம்