கலத்தல் 781
கலத்தல் 761 மூலம் இயங்குவதற்கான கருவிகள் பொருத்தப்பட் டுள்ளன. மேலும் பகல் ஒளி மங்கியவுடன் ஒளி படரு மாறும், மூடுபனி பற்றிய அறிவிப்பு ஒலி போன்ற ஒருவித ஓசையால் அறியுமாறும், மின்கருவி ஒன்று மனித உதவியின்றித் இயங்குமாறு தானாகவே அமைக்கப்பட்டுள்ளது. எத்தகைய குறிப்புகள் கொடுக்கவேண்டுமோ அவற்றிற்கேற்றவாறு புதிய எந்திரங்கள் பொருத்தப்படுவதால் கலங்கரை விளக்குகளை மனிதன் யக்க வேண்டியதில்லை. கலங்கரை விளக்குகளைக் கடலினுள் அமைப்பது கடினமானது. இவற்றைப் பேணுவதும் கடினமாக உள்ளது. மேலும் ஆழம் குறைந்த கடற்பகுதிகளைக் காட்டக் கடல் மிதவை அமைத்து அதில் விளக்கு வைப்பதும் உண்டு. இதுவும் ஒரு வகைக் கலங்கரை விளக்கேயாகும். இவ்வாறே விமானங்களுக்கு இரவு நேரங்களில் வழிகாட்ட, விமான நிலையங்களில் கலங்கரை விளக்கையொத்த விளக்குகள் அமைக்கப் படுகின்றன. இவற்றை விமானக் கரைவிளக்குகள் என்று கூறுவதுண்டு. கடல் இந்தியாவில் விசாகப்பட்டினத்துக்கு அருகே டால்ஃபின் முனை, அந்தமான் தீவுக்கூட்டத்தில் ராஸ் தீவு, சௌராஷ்ட்ரக் கரையில் சங்கா ஆகிய இடங்களில் புதிய கலங்கரை விளக்குகளும், கட்ச் வளைகுடாவில் உள்ள கண்டலா துறைமுகத்துக் கருகே ரான்வாரா, கோதாவரிக் கழிமுகத் தீவின் அருகே உள்ள சாக்ரமென்டோ முதலிய இடங்களில் ஆழங்குறைவான கடற்பகுதியைக் காட்டக் மிதவை விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. கத்திய வார் கடற்கரையில் உள்ள ஓக்கா துறைமுகத்திற்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் லூஷிங்ட்டன் ஷோல் என்னும் பெரிய மணல் திட்டுப் பகுதி உள்ளது. அதில் மிகப்பெரிய, உயர் மான கலங்கரைவிளக்கு, மிகு வியப்பான முறையில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பங்கஜம் கணேசன் கலங்கல் நீரேட்டம் நீரில் கரையாமல் அடர்ந்து கிடக்கும் மண் துகள், பெருமணல், சிப்பி -சங்கு போன்றவற்றின் நொறுங் கிய துகள்கள் யாவும் வண்டலாகி மிகுவிரைவாக நீரோட்டத்தோடு கலந்து கடலடியில் போய்ச் சேருகின்ற நிலை கலங்கல் நீரோட்டம் (turbidity currents) எனப்படும். இவ்வகை நீரோட்டம் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகும். பொதுவாக, புவி அதிர்ச்சி, கடும்புயல், வெள்ளம் ஆகியவற்றின் மூலம் கலங்கல் நீரோட்டம் உருவாகிறது. கண்டச்சரிவின் ஓரங்களிலும் ஆறுகள் கடலோடு கலக்கும் கழிமுகங்களிலும் கலங்கல் நீரோட்டம் தொடங்குகிறது. கடலின் ஓரங்களில் தொடங் கினாலும் இக்கலங்கல் நீரோட்டம் மண் துகள், பெருமணல், கரையருகே ஆழமற்ற நீரில் வாழும் சிப்பி -சங்கு அனைத்தையும் ஆழ்சுடல்நோக்கி ஏறத்தாழ 5000 கி.மீ. தொலைவிற்கும் மேலாகக் கொண்டு செல்கிறது. கடலடிக் குடைவுகளைத் (submarine canyons) தோற்றுவிக்கக் கூடிய கலங்கள் நீரோட்டம் பற்றிய ஆய்வு இப்போது முனைப்பாக்கப்பட்டுள்ளது. 1929 இல் கனடா நாட்டில் உள்ள நியூஃபௌண்ட் லாந்துக்குத் தெற்கே அமைந்துள்ள பெரும் திட்டை (Grand Bank) மிகக் கடுமையான புவி அதிர்ச்சி தாக்கியது. அதன் விளைவாக அட்லாண்டிக் பெருங் கடலுக்குள் அமைக்கப்பட்டிருந்த ஆழ்கடலில் பல தந்திவடங்கள் அறுந்துவிட்டன. இது பற்றிய ஆய்வின்போது, ஓர் ஆற்றல் மிகுந்த நீரோட்டம் கடல் சரிவின் மேல் பகுதியிலிருந்து கீழ் நோக்கிப் டாய்ந்துள்ளது என அறியப்பட்டது. இதுதான் இவ்வகை நீரோட்டங்களின் தன்மைகளைப் பற்றி ஆய்வுகள் நடத்தத் தூண்டியது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உள்ள லேமான்ட் புவியமைப்பு நிலையத்தைச் சார்ந்த மாரிஸ் ஈலிங், ப்ரூஸ் ஸி. ஹீட்ஸென் என்போர் அட்லாண்டிக் ஆழ்கடல் தந்திவடங்களைக் குறித்து ஆராய்ந்து, தந்திவட வடங்கள் அறுந்துபோவதற்குப் புவி அதிர்ச்சியின் விளைவாகத் தோன்றிய ஒரு ய கவங்கல் நீரோட்டமே காரணம் எனக் கண்டறிந்தனர். தந்திவடங்கள் அறுந்து விழுந்தபோது, செங்குத்துச் சரிவுகளில் (1: 50) நீரோட்டத்தின் வேகம் மணிக்கு ஏறத்தாழ 80 கி.மீ அளவிலும், மிகக்குறைந்த சரிவுகளைக் கொண்ட (1:1500) ஆழ்கடற்பகுதிகளில் அதன் வேகம் ஏறத்தாழ 24 கி.மீ. அளவிலும் இருந்ததாகக் இக்கடலியல் வல்லுநர்கள் கண்டறிந்தனர். இவ்வாறே, 1954 ஆம் ஆண்டு அல்ஜீரியாவில், ஆர்லியன்ஸ்வில்லி என்னும் இடத்தில் தோன்றிய புவி அதிர்ச்சியின் விளைவாக, மத்தியதரைக்கடலில் உருவான கலங்கல் நீரோட்டம், அக்கடலினடியில் சென்ற ஆழ்கடல் தந்திவடங்களை அறுத்து விட்டது. கலங்கல் நீரோட்டத்தின் மாதிரியை ஆய்வகங்களில் உருவாக்கி, அதன்மூலம் இவ்வகை நீரோட்டத்தின் தன்மையைக் கடலியலார் விளக்கியுள்ளனர். களின் ஆழப்பகுதிகளில் இக்கலங்கள் நீரோட்டத்தைப் பற்றிய நேரிடை ஆய்வு இதுரை தொடங்கப்பட வில்லை. கலத்தல் கடல் இரா. நடராசன் இது ஓர் ஒருமச் செயல் முறை (unit operation ஆகும். இரண்டோ அதற்கு மேற்பட்ட எண்ணிக்கை