பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/803

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலத்தல்‌ 783

தாரை கலத்தல் (jetmixing). பெரிய தேக்கக் கலன்களில் பக்கவாட்டில் தாரையாக ஊற்றிக் கலத்தல் நிகழ்த்துதல் நீர்மக் சுலவைகளுக்கு ஏற்ற முறையாகும். நீர்மம் தாரையால் உருவாக்கப்படும் குழிவில் (சுழலில்) ஏற்கப்பட்டு, நன்கு கலக்கப்படு கிறது. இதற்கு உட்புகுத்துதல் (entrainment) எனப் பெயர். தாரைவகைக் கலக்கிகளின் கலக்கும் நேரத்தைக் கணக்கிடச் சமன்பாடுகள் பெறப் பட்டுள்ளன. அசையாக் கலத்தல் அமைப்புகள் morinless mixers). வாயுக்களையும், எளிதில் பாயும் நீர்மங் களையும் கலப்பதற்குப் பாய்மத்தை மாறிமாறிப் பிரித்தும், மீண்டும் சேர்த்தும் நிகழ்த்தவல்ல அமைப்பு படம் 2. கலத்தல் 787 கள் உள்ளன. இவற்றில் ஒன்றன்பின் ஒன்றாகப் பல திருகுச் சுழல் வடிவு (helical) உறுப்புகள் உள்ளன. முதல் பகுதி பாய்ம ஓட்டத்தை 180° முறுக்கி, அடுத்த உறுப்புக்குள் செலுத்துகிறது. இரண்டாம் உறுப்பு, முதலாம் உறுப்பின் இறுதிப் பகுதிக்குச் செங்குத்தாக அமைந்துள்ளது. இவ்வாறு ஏறகனவே பிரிக்கப்பட்ட பாய்மத்தை இரண்டாம் உறுப்பு மீண்டும் பிரித்து முறுக்கிச் சேர்க்கிறது. n உறுப்புகள் உள்ளதோர் அமைப்பில் 2 பிரித்தலும், மீள் இணைப்பும் நிகழும். எடுத்துக்காட்டாக, இருபது உறுப்புகள் இருப்பின் ஒரு மில்லியன் கலத்தல் நிகழ்வுகள் முடிந்துவிடும். அதே நீளமுள்ள வெற்றுக் குழாய் வழியே பாயும்போது, தோன்றும் அழுத்தச் சரிவை விட நான்கு மடங்கு இவ்வகையில் அழுத்தச் சரிவு கூடுதலாக இருக்கும். வேறு சில வகைகளில், ஒவ்வோர் உறுப்பும் பாய்ம ஓடையை நான்கு முறை பிரித்துத் திருப்பவல்லது. நீர்மக்கலப்பு, வெப்பப் பரிமாற்றம், வேதி வினைகள் ஆகிய யாவற்றுக்கும் நிலையான அசைவற்ற கலக்கிகள் ஏற்றவை யென்றாலும்,கூழ்நிலைப் பொருள்களைப் பாகுத் தன்மை குறைந்த நீர்மங்களுடன் கலப்பதற்கும், விளாவுவதற்கும் மிகவும் ஏற்றவையாகும். , கலத்தலின் அளவுக்கும், செலவிடப்படும் ஆற்ற லின் அளவுக்கும் தொடர்புஎதுவும் இருக்க வேண்டிய தேவை இல்லை. தடைத்தகடுகளற்ற (unbaffled) கலனில் எளிதில் பாயும் நீர்மமொன்றைச் சுழற்றி னால், நீர்மத்திலுள்ள துகள்கள் இணை-வட்டப் பாதைகளில் முடிவின்றிப் பாய்ந்து கொண்டே இருக்கக்கூடும். கலத்தல் நிகழ வாய்ப்பின்றி, ஆற்றல் முழுதும் சுற்றலுக்கு மட்டுமே செலவாகி வீணாகும். தடைகளைத் தோற்றுவித்தால், கலத்தல் விரைவு படுத்தப்படும். குறைந்த அளவு ஆற்றலைக் கொண்டு குறைந்த அளவு நேரத்தில் முழுமையாகக் கலத்தலை நிகழ்த்தவல்ல கலக்கியே சிறந்த கலக்கியாகும். மட்டிக்கல் கலக்கி (Muller mixer), மண்குழைப் பாலைகள் (pug milis) ஆகியன கலக்கி வகைகளுள் சிலவாகும். மோது சக்கரங்கள் (impact whcels) எனும் அமைப்புகள் பூச்சிக் கொல்லிகளைக் கலப்பதற்கும் பயன்படுகின்றன. மிக விரைவாகச் சுழலும் வட்டத் தகட்டின் ஒருபகுதியில் உலர்நிலை கலவையை இட்டால், துகள்கள் கலனின் சுவர்ப் பகுதிக்கு வீசி எறியப்படுகின்றன. ரவை போன்ற திண்மத் துகள்களை உலர்நிை நிலையில் கலப்பதற்குக் குண்டு ஆலைகள் (ball mills) உள்திருகுக் கலக்கி (internal screws) ஆகியன பயனாகின்றன. உலர்ந்த துகள் களைக் கலக்கும்போது முதலில் கலக்குந் திறன் எண் (mixing index) விரைவாக உயருகிறது (படம் 3).பின்பு சிறிது நேரத்திற்குக் குறைந்து. மீண்டும் உயர்ந்து, பின்பு சரியத் தொடங்குகிறது.