பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/808

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

788 கலப்பு வீரியம்‌

788 கலப்பு வீரியம் திருந்தார். நைட் என்பார் தாவரங்களைக் கலப்ப தால் உண்டாகும் இயல்பான விளைவே கலப்புயிரி வீரியம் எனக்கருதினார். இவர் போன்றே ஹெர்பர்ட், கார்னர், நாடின் ஆகியோரும் 1825-1865 ஆம் ஆண்டு வரை கலப்புயிரி வீரியம் பற்றி ஆய்வு செய் தனர். மெண்டல் (1865) என்பார். பட்டாணிக் கடலைச் செடி ஆய்வின்போது கலப்புயிரி வீரியத் திற்கு ஹெட்டிரோசிஸ் என்னும் சொல்லைப்பயன் படுத்தினார். ஹெட்டிரோசிஸ் என்னும் கிரேக்கச் சொல்லிற்கு மாறுபட்ட நிலை என்று பொருள். எனவே கலப்புயிரி வீரியம் தாய்ப்பயிர்களிலிருந்து மாறுபட்ட நிலை எனக்கொள்ளலாம். இரு தற்கலப்புச் சந்ததிகளை அயல்கருவுறுதல் முறையில் கலப்புச் செய்வதால் கலப்புயிரி வீரியம் மிகுதியாகக் காணப்படுகிறது. தற்கலப்பால் முதலில் பல இயல்பிற்கு மாறான பண்புகளும், கொல்லிப் பண்புகளும்,உண்டாகின்றன. பச்சையக்குறை, வள மின்மை, வளர்ச்சிக் கோளாறால் உண்டான வெறுப்பான உருவம், இயல்பாக உள்ள உருவ அளவில் குறைதல் ஆகியவை தற்கலப்பால் நிகழ்வனவாகும். அரு கலப்புயிரி வீரியம் என்பது தற்கலவிக்குப்பின் ஏற்படும் தரக்குறைவிற்கு நேர் எதிரானது. நெருங்கிய உறவுமுறையுடைய அல்லது தொலை முறையுடைய பயிர்களாக இருந்தாலும் அவற்றைக் கலப்புச் செய்து கிடைக்கும் F. கலப்புயிரிகளில் நல்விளைவுகளே F, ஏற்படுகின்றன. தற்சுலவியால் தரக்குறைவு ஏற் படாத பயிரினங்களிலும் கலப்பால் பலன் உண்டா கிறது. ஈரினங்களைக் கலக்கும்போது உண்டாகும் உயர்ந்த அளவு நன்மைகளை F, கலப்புயிரிச் ச களிலேயே காணமுடியும். எதிர்ப்புத் தன்மை, தக அமைவுத் திறன் ஆகிய செயலியல் பண்புகள் பெருகுகின்றன. கலப்புயிரி வீரியத்திற்கான காரணங்களை மரபியல் முறையிலும், செயலியல்முறையிலும் பின்வரு மாறு விளக்கலாம்: என்பாரின் கொள்கைகளை ஓங்கு பண்புக்கோட்பாடு (dominance hypothesis ) தாவன்போர்ட் முன்வைத்து, புருஸ் இக்கோட்பாட்டை உரு வாக்கினார். இக்கோட்பாட்டின்படி நன்மைதரும் ஜீன்கள் யாவும் ஓங்கு தன்மை பெற்றுள்ளன. நன்மை தாராத ஜீன்கள் யாவும் ஒடுங்கு தன்மை பெற்றுள்ளன. இத்தகைய எண்ணிக்கையில் பலவகை மரபியல் சரணிகளால் கலப்புயிரி வீரியம் உறுதி செய்யப்படுகிறது. ஒரு தற்கலவியில் (inbreeding) குறிப்பிட்ட சில ஓங்கு தன்மை பெற்ற ஜீன் தொகுதியும், மற்றொரு தற்கலவியில் வேறு சில ஜீன்கள் ஒடுங்கிய ஜீன் தொகுதியும் காணப்படும். தற்கலவிகளிலும் உள்ள ஓங்கு தன்மையற்ற ஜீன்கள் கலப்புயிரியில் வந்து சேர்வதால் கலப்புயிரியில் வீரியம் உண்டாகிறது. தற்கலவி x தற்கலவி y aa, BB, CC, dd, ee ஓங்குதன்மை பெற்று ஜீன்கள் 10 செ.மீ. AA, bb, cc, DD, EE ஓங்கு தன்மை ஜீன்கள் சந்ததி |A+D+E = 3X5 = 15 செ.மீ. ஒடுங்கு தன்மை ஜீன்கள் B + C = 25 = ஒடுங்கு தன்மை கலப்பு வீரியம் ஒரு தாவரம் முழுமையும் ஜீன்கள் காணப்படுவதில்லை. குறிப்பிட்ட பகுதிகளில் ஆனால் அத்தாவரத்தின் கீழ்க்காணும் முறையில் |b+c = காணப்படுகிறது. 2 செ.மீ. மொத்த உயரம் = 17 செ.மீ. a+d+e = 3 செ:மீ. மொத்த உயரம் = கேரட்-வேர்க்கிழங்கு (root tuber) உருளைக்கிழங்கு நூல்கோல்-கிழங்கு (tuber) சேம்பு-காம் (corm) டர்னிப் - வித்திலைக் கீழ்த் தண்டு (hypocotyl) முட்டைகோஸ் லெட்டுஸ்-இலை மக்காச்சோளம் - முளைசூழ்தசை (endosperm) தானியங்கள் - கதிர்கள் (ears) அவரை, பட்டாணி - விதைகள். மேற்கூறிய கலப்பு வீரியத்தால் செல் வினை, செல்பகுப்பு விரைவடைந்து கனிகள், விளைச்சல் மிகுதியாகும். உயிரியல் செயல்திறனும் (biological efficiency) மிகுதியாகிறது. முன்முதிர்வு, நோய்,பூச்சி 13 செ.மீ. F1 கலப்புயிரி Aa, Bb, Cc. Dd, Ee ஓங்கு தன்மை பெற்ற ஜீன்கள் =5×5=25 செ.மீ. உயரம். A+B+C+D+E X மேற்காணும் கலப்பில் 17செ.மீ. உயரமுள்ள என்னும் பயிரையும் 13 செ.மீ. உயரம் உள்ள ஓ என்னும் பயிரையும் கலந்து உண்டாக்கிய F, கலப் புயிரிப் பயிர் 25 செ.மீ. உயரமாக இருக்கும். இக் கலப்புயிரியில் மிகு எண்ணிக்கையிலான ஓங்கு தன்மை பெற்ற ஜீன்கள் இருப்பதால், தாய்ப்பயிர் களைவிட மிகு உயரமுள்ள கலப்புயிரி வீரியம் காணப்படுகிறது. தாய்ப்பயிர்களின் சராசரிப் பண்பு கனளவிடக் கலப்புயிரிகளில் நன்மைதரும் ஜீன்