798 கலப்பைக்காலிகள்
798 கலப்பைக்காலிகள் ctenidia) பக்கத்திற்கு ஒன்றாக அமைந்துள்ளன. ஒவ்வொரு செவுளும் வெளிச்செவுள் தகடு, உட் செவுள் தகடு என இரு பகுதிகளாகப் பிரிந்துள்ளது. ஒவ்வொரு செவுள் தகடும் இரு செவுள் படலங்க ளால் ஆனது. ஒவ்வொரு படலமும் செங்குத்தான நீண்ட செவுள் இழைகளால் ஆனது. நியுகுவா என்னும் கலப்பைக் காலியில் இத்தகைய மெல்லிழைகள் குட்டையாகவும் செவுள் அச்சின் இருபுறமும் போர்வை உட்குழிக்குள் தொங்கிக் கொண்டுள்ளன. ஆர்க்காவில் மெல்லிழைகள் நீண்டு கீழ்நோக்கி வளர்ந்து மேல் மடிந்துள்ளன. ஆங்கில எழுத்தான V போன்ற வடிவுடையனவாக ஒன்று கீழிறங்கும் பகுதியுடனும் ஒன்று மேல் ஏறும் பகுதியுடையனும் உள்ளன. இவ்விரு கொம்புகளும் குற்றிழைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. போர்வை உட்குழிவு வயிற்றுப் பக்கத்தில் ஒரு பெரிய உள்ளிழுக்கும் அறையாகவும் முதுகுப்புறம் ஒரு சிறிய வெளியேற்றும் அறையாகவும் அமைந் துள்ளது.நீர் உள்ளிழுக்கும் தூம்புக் குழல் வழியாகப் போர்வை உட்குழிவுக்குள் நுழைந்து செவுள்கள் மூலமாகச் செவுள் மேல் அறையுள் நுழைந்து வெளி யேற்றும் தூம்புக் குழல் வழியாக வெளியேறுகிறது. இச்சமயத்தில் நீரில் உள்ள ஆக்சிஜன் இரத்தத்தோடு கலக்கிறது. முன் இரத்த ஓட்ட மண்டலம். கலப்பைக்காலிகளின் இதயம், இதய உறைக்குள் மூடப்பெற்று முதுகுப் புறத்தில் காணப்படுகிறது. இதயம், நடுவில் ஓர் இதயக்கீழறையுடனும். கீழறையின் இருபுறங் களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இதயமேலறையுடனும் காணப்படும். இதயக்கீழறையின் முன்புறம் பெருந்தமனியும் பெருந்தமனியும் பின்புறம் பின் உள்ளன. முன்பெருந்தமனி மலக்குடலுக்கு மேற்பக்க மாகவும் பின் பெருந்தமனி மலக்குடலுக்குக கீழ்ப்பக்க மாகவும் செல்கின்றன. இரு பெருந்தமனிகளும் பல தமனிகளாகப் பிரிந்து உடலில் பல பகுதிகளுக்கும் செல்கின்றன, உடல்போர்வைக்கும் இரைப்பைக்கும் குடல் சார்ந்த பகுதிக்கும், பாதத்திற்கும் தமணிகள் இரத்ததை எடுத்துச் செல்கின்றன. இத்தமனிகள் யாவும் நன்கு வரையறுக்கப்பெறாத பைக்குழி களிலும் (sinus) இடைக் குழிவுகளிலும் (lacunae முடிவடைகின்றன. பாதத்திலிருந்தும், உள் உறுப்புகளிலிருந்தும் புறப்படும் சிரைகள் ஒன்றாக இணைந்து பாதத்தில் ஒரு பாதப்பைக் குழிவை (pedal sinus) ஏற்படுத்து கின்றன. பைக்குழிவுகளிலிருந்தும், இடைக்குழிவு களிலிருந்தும் இரத்தம் இரு சிறுநீரகங்களுக்கு இடையே சென்று பெருஞ் சிரைக்கு எடுத்துச் செல்லப் படுகிறது. சிறுநீரகம் சார்ந்த சிரைகள் மூலமாகச் சிறுநீரகத்திற்கு இரத்தம் எடுத்துச் செல்லப்படுகிறது. இங்கு நைட்ரஜனுடன் கூடிய கழிவுப் பொருள்கள் இரத்தத்திலிருந்து அகற்றப்படுகின்றன. இங்கிருந்து செல் செவுள் அமைந்துள்ள உள் அடைந்து. செவுள் நீளவாக்கில் சிரைவழியாகச் செவுளை பல கிளைகளாகப் பிரிகிறது. பெரும் இழைகளில் இச்செவுள்களில் வளிம மாற்றம் ஏற்பட்டுத் தூய த்தம் வெளிச் செல் செவுள் சிரையை அடைந்து அங்கிருந்து இரத்தம் இதய மேலறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. உடல்போர்வைக்குச் சென்ற இரத்தம் அங்கு வளிம மாற்ற மேற்பட்டுப் பாலியல் சிரை வழியாக இதய மேலறையை அடைகிறது. பெருஞ் சிரையிலிருந்து இரத்தம் செவுள்களுக்குச் செல்லாமலேயே இதயத்தை அடைகிறது. இங்குவளிம மாற்றமடையாத குருதியும் வளிம மாற்றமடைந்த இரத்தத்துடன் கலந்து விடுகிறது. ஆரிக்கிள் களிலிருந்து இரத்தம் வெண்டிரிக்கிளை அடைகிறது. கலப்பைக்காலிகளின் இரத்தம் வண்ணமற்றது. வெள்ளைச் செல்களும் ஹீமோசையனும் இதில் அடங்கியுள்ளன. டது. கழிவு மண்டலம். கலப்பைக் காலிகளின் கழிவு உறுப்புகள் சிறுநீரகங்களாகும். ஒவ்வொரு சிறு நீரகமும் குழாய் வடிவில் அதன் மேலேயே மடிந்து காணப்படுகிறது. இக்குழாயின் ஒரு முனை இதயச் சுற்றறைக்குள்ளும், மறுமுனைஉடல் போர்வை உட் குழிவுக்குள்ளும் திறக்கும், சிறுநீரகக் குழாயின் கீழ்த் தண்டு பழுப்பு நிறமும் தொய்வுத்தன்மையும் கொண் சுரப்பிச் செல்களாலான இக்குழாயின் மேல் தண்டு குறுஇழைகளுடன் கூடிய மெல்லிய சுவராலான பைபோல் உள்ளது. இரு சிறுநீரகப்பைகளும் முட்டை வடிவாக அல்லது நீளுருண்டை வடிவாக உள்ளன. ஒரு சிறுநீரகத்தின் ஒரு முனை இதயச் சுற்றிழை சார்ந்த புழை மூலமும், மறுமுனை கழிவுப்புழை அல்லது சிறுநீரகப் புழை (organs of bojanus) மூலமும் உள்செவுள் தகட்டில் திறக்கும். சிறுநீரகங்களும் போஜேனனின் உறுப்புகளும் சுரக்கும் தன்மை கொண்டவை. கீழ்த்தண்டு, சுரக்கும் தன்மை யற்றது. மேல்பகுதி சிறுநீரகக் குழாயாக இயங்கு கிறது. இங்கு நைட்ரஜனோடு கூடிய கழிவுப் பொருள்கள் இரத்தத்திலிருந்து நீக்கப்படுகின்றன. போஜேனஸ் உறுப்பைத் தவிர, கீபர்ஸ் உறுப்பு இதயச் சுற்றறைச் சுரப்பிகள் ஆகிய உறுப்புகளும் கழிவு நீக்க உறுப்புகளாகச் செயல்படும். சிவந்த சுரக்கும் கீபர்ஸ் உறுப்பு, பழுப்பு நிறமுடைய கலப்பைக்காலிகளில் தன்மை உடையதாகும். அம்மோனியாவும், அமினோ கூட்டுப் பொருள்களும் நைட்ரஜன் இணைந்த கழிவுப் பொருள்களாகும். யூரியாவும், யூரிக் அமிலங்களும் இக்கழிவுப் பொருள் களில் உள்ளன. புரோட்டோபிராங்கியேட்டா எனும் மெல்லுடலிகளில் இவ்வுறுப்பு முழுதும் சுரப்பிச் செல்களாலானது. சில சிப்பிகளில் சிறுநீரகம் சுரக்கும்