கலப்பைக் கிழங்கு 801
கலப்பைக்கிழங்கு 801 களின் முனை சுருண்டிருப்பதால் தலைச்சுருளி என்றும், அவ்வாறு வளைந்த நுனி அருகிலுள்ள செடிகளையும் மரங்களையும் பற்றுவதால், கோடல், கோடை என்றும், மழைக்காலத்தில் பூக்களை உற் பத்தி செய்வதால் கார்த்திகைப்பூ என்றும் இதற்குப் பலபெயர்கள் உண்டு. இதற்கு அரைவம், இரும்பு, கண்டல், கண்ணோவுப்பூ, நாபிக்கொடி, பட்டரை, செங்காந்தள், காந்தள், தோன்றி, வெண்தோன்றி, என்றும் வேறுசில பெயர்களும் உண்டு. இதன் தாவர வியல் பெயர் குளோரியோசா சுபர்பா (Gloriosa superba) ஆகும். இது லிலியேசி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். வேலிகளிலும், புதர்க்காடுகளிலும் முள்களிடையே இந்தச் செடி படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும் சுடர்கள் போலவும் தோன்றிப் பல நிறங் காட்டும் பூக்களைத் தாங்கிக காற்றில் மெல்ல அசைந்து கொண்டிருக்கும். கிளைத்துக் கொடிபோல் வளரும் கலப்பைக் கிழங்குச் (malabar glory lily) செடியை இந்தியக் காடுகளில் காணலாம். சமவெளியில் மட்டுமல்லாமல் மலைப் பகுதியில் 1800 மீ. உயரம் வரையிலும் வளர்கிறது. இந்தியா தவிர ஸ்ரீலங்கா, சீனா, ஆப்பிரிக்காவிலும் அந்தமான் தீவுகளிலும் இதைக் காணலாம். தோட்டங்களில் அழகான கண்ணைக் சுவரும் மலர்களுக்காக இதை விரும்பி வளர்ப்ப துண்டு. வடிகால் வாய்ப்புள்ள, கரிமப் பொருள்கள் நிரம்பிய நிலத்தில் நன்கு வளரும். இதன் தண்டு பசுமையாகவும் வலிவற்றும் இருக்கும். இதன் தண்டு 3-7 மீ. உயரம் வளரும். தண்டில் கிளைகளும் உண்டாகும். நிலத்திலுள்ள கிழங்குகளி லிருந்து ஆண்டுதோறும் புதிய தரை மேல் தண்டுகள் வளர்ந்து வரும். கிழங்கு சாதாரணமாக உருண்டை வடிவில் இரண்டு பிரிவுகள் கொண்டிருக்கும் இரண்டு பிரிவுகளும் சமமாகவோ சமமில்லாமலோ இருக்கும். அவை இரு முனைகளிலும் கூராக இருக்கும். கிழங்கு கள் 15- 30 செ.மீ. நீளமாக 2.5-3.8 செ.மீ. குறுக் களவு பெற்று இருக்கும். இலைகளுக்குக் காம்பு இல்லை இலைகள் 7.5- 15.0 செ.மீ. நீளமும், 2.0-4.5 செ.மீ. அகலமும் கொண்டவை. இவை மாற்றடுக்கம் அல்லது எதி ரடுக்கத்தில் தோன்றியிருக்கும். கணு இடைப்பகுதி வளராமல் இருந்தால் வட்டச் சுற்றாக இலைகள் உண்டாகும். இலைகள் அகன்ற அடியுள்ள முட்டை அல்லது ஈட்டி வடி வில் நீண்ட பற்றுக் கொம்பு போன்ற சுருண்ட நுனியைப் பெற்றும் இருக்கும். இவற்றைக் கொண்டு அருகில் இருக்கும் மரம் செடி களைப் பற்றிக் கொண்டு வளரும். லைச் சிறு நரம்புகள் இணையாக இருக்கும். பூக்கள் ஜூலை - அக்டோபர் வரை உண்டாகும். பூக்கள் பெரியவை: லைக் கக்கத்தில் தனியாக இருக்கும். கிளைகளின் நுனியில் இலைகள் நெருக்கமாக அமைந்திருப்பதால் பூக்கள் சமதள மஞ்சரி அமைப்புப் போன்ற தோற்றத்தைத் தரும். பூக்காம்பு 7.5-15.0 செ.மீ. நீளமிருக்கும். முனையில் வளைந்திருக்கும். பூ இதழ்கள் (perianth) 6 உண்டு. இவை 6.3 செ.மீ. நீளமும், 8 மி.மீ.-12மி. மீ. அகல மும் பெற்றுக் குறுகி நீண்டு ஓரங்களில் அலைபோல நெளிந்தும் இருக்கும். பூக்கள் மலர்ந்த பின் ஏழு வரை வாடாமல் இருக்கும். பூ இதழ்கள் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு கிச்சிலி கலந்த துலக்கமான சிவப்பு (scarlet), பிறகு நீலம் கலந்த சிவப்பு (crimson) நிறமாக மாறிக் கொண்டே போகும். நாள் பூ இதழ்கள் விரிந்து அகன்றோ, பின்னுக்கு மடங்கியோ இருக்கும். மகரந்தத் தாள்கள் 6 உண்டு. காம்புகள் 3.7 4.3 செ.மீ. நீளம் இருக்கும். மகரந்தப்பை 1.2 செ. மீ. அளவில், மேலொட்டி (dorsi fixed) இங்குமங்கும் திரும்பக்கூடியதாக இருக் கும். சூலசும் 3 அறைகளைக் கொண்டது. சூலகத் தண்டு 5 செ.மீ. நீளமாக ஒருபுறம் மடங்கியிருக்கும். சூல்கள் பல உண்டு. கனி வெடிகனி வகையானது. கிழங்குகள் மிக நச்சுத்தன்மை கொண்டவை. இவை காரமாக வும், கசப்பாகவும் இருக்கும். கிழங்கில் கொல்ச்சிசின் (colchicine) என்னும் அல்க்கலாய்டு உள்ளது. கிழங்கைவிட விதையில் இச்சத்து மிகுதி. இச்சத்து ஸ்ரீலங்காவில் விளையும் கிழங்கில் 0.3% உம் பம்பாயில் விளையும் கிழங்கில் 0.1% உம் உள்ளது. கிழங்கை அறுவடை செய்யும் பருவத்திற்கேற்ப இச் சத்தின் அளவும் மாறுபடும். கிழங்கில் குளோரி யோசின் என்னும் பொருளும் உள்ள ளது. கிழங்கு உடலில் வெப்பத்தை உண்டாக்கும். இதற்குப் புழுக் களைக் கொல்லும் தன்மை உண்டு. மருந்துக்காக தை மழைக் காலத்திலும், மழைக்குப் பின்பும் அறு வடை செய்வதுண்டு. கருஞ்சீரகம், காட்டுச் சீரகம், கார்போக அரிசி ஆகியவற்றுடன் இதைச் சேர்த்தரைத்து வெளிப் பூச்சாகத் தோல் நோய்களுக்கும் நரம்பு வீக்கத்திற்கும் பயன்படுத்தலாம். கிழங்கைப் பொடி செய்து குழைத்துக் கொப்பூழிலும் யோனியிலும் (vagina) தடவினால் பிள்ளைப் பேறு எளிதாகும். இப்பூச்சு அரிப்பு, வயிற்றுவலி இவற்றைப் போக்கும். மேலும் கருப்பையிலிருந்து நஞ்சுக்கொடி (placenta) வெளிவர உதவும். பூக்கள் காய்ச்சலைப் போக்கும். இலையில் செலிடோனிக் அமிலம் உள்ளது. இதன் இலைச்சாறு தலையிலுள்ள பேன்களைக் கொல்லும். கிழங்கி லிருந்து கிடைக்கும் ஆல்க்கலாய்டு மூலம் உயிரினங் களில் திடீர் மாற்றங்களைத் (mutation) தோற்று விக்கலாம். கோ அர்ச்சுணன்