பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/823

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலவியிலா இனப்‌ பெருக்கம்‌ 803

வெளியே வருகிறது; இதைப் பிறத்தல் என்பர். இவ் வகைக் கலவி இனப்பெருக்கத்தைக் குட்டிபோடுதல் என்பர். மனித இனத்தில் இவ்வகை இனப்பெருக்கமே நிகழ்கிறது. கலவியிலா இனப்பெருக்கம் சோம. பேச்சிமுத்து இனப்பெருக்கச் செல்களான விந்துச்செல்,அண்டம் இவற்றின் சேர்க்கையின்றி, உடலில் காணப்படும் செல்களிலிருந்தோ செல்களின் தொகுதியிலிருந்தோ ஒரு புதிய உயிரி தோன்றும் இனப்பெருக்கத்திற்குக் கலவியிலா இனப்பெருக்கம் (asexual reproduction) என்று பெயர். கலவியிலா இனப்பெருக்கத்தின் பொருட்டு முன்னரே முதிர்ச்சியடைந்த ஓர் உயிரியின் உடலில் செல்களின் தோன்றும் தொகுதிக்குப் பிளாஸ்ட்டிமா (blastema) என்று பெயர். ஆனால் கலவி இனப்பெருக்க முறையில் கருவுற்ற அண்டம் ஒரே செல்லை அடிப்படையாக வைத்து ஒரு புதிய உயிரியின் தோற்றுவாயாக அமைகிறது. பிளாஸ்ட்டி மாவிலிருந்து புது உயிரி தோன்றும் முறை பிளாஸ்டோஜெனஸிஸ் (blastogenesis) எனப் படும். இம்முறையில் தோன்றும் உயிரிக்குப் பிளாஸ் டோஸ் சுவாய்டு (blastozooid) என்று பெயர். ஒரு புதிய உயிரியை உருவாக்கத் தாய் உயிரியிலிருந்து எவ்வளவு திசுக்கள் ஒதுக்கப்படுகின்றன, மேலும் அவ்வாறு ஒதுக்கப்படும் திசுக்கள் எந்த அளவில் ஒருங் கிணைந்து செயலாற்றுகின்றன என்னும் அடிப்படை களில் கலவியிலா இனப்பெருக்கத்தை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். பிளவுபடுதல் முறை. இம்முறையில் தாய் உயிரியின் உடலின் பெரும்பாலான பகுதிகள் அல்லது உறுப்புகள் புதிய உயிரி உருவாகும்போது அதற்குப் போய்ச் சேர்கின்றன. ஒரு அரும்புதல் முறை. தாய்ச்செடி உடலின் பகுதியில் தோன்றும் புடைப்பிலிருந்து புதிய உயிரிகள் தோன்றும் முறைக்கு அரும்புதல் (budding) என்று பெயர். இவ்வாறு இவ்வாறு தாயின் உடலில் உருவாகும் அரும்புகளில் எந்தப்பகுதியும் தாயின் உடலில் சென்றடைவதில்லை. ஆனால் இவ்வரும்புகள் வளரும் போது அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான பிரிந்து ஊட்டத்தைத் தாயின் உடலிலிருந்து பெற்றுக் கொள்கின்றன. பின்பு தாயிடமிருந்து தன்னிச்சையாக வாழ்கின்றன. ஜெம்யூல் முறை. தாயின் உடலிலிருந்து தனித்து விடப்பட்ட ஒரு செல் தொகுதியிலிருந்தும் புதிய உயிரிகள் தோன்றலாம். இவ்வகைச்செல் தொகுதிக்கு கலவியிலா இனப்பெருக்கம் 803 ஜெம்யூல் (gemmule) என்று பெயர். புதிய உயிரி உருவாகும்போது தனக்கே உரிய முறையில் பல வாறாக மாறுபாட்டைந்து தாயைப் போன்ற உடலமைப்பைப் பெறுகிறது. பிளவுபடுதல் முறை. முழு வளர்ச்சியடைந்த ஓர் உயிரி சம்பகுதியாகப் பிளவுபட்டு இரு புதிய உயிரிகளாகும் முறையே பிளவுபடுதல் (binary fis- sion முறையில் மிகவும் எளிமையானதாகும். முதலு யிரிகள் இம்முறையில் பிளவுபட்டுப் பல்கிப் பெருகு கின்றன. குழியுடலிகள் புழுக்கள் போன்ற பல செல் உயிரிகளிலும் கலவியிலா இனப்பெருக்கப் பிளவு படுதல் நடைபெறுகிறது. குழியுடலித் தொகுதியைச் சேர்ந்த பவளஉயிரிகள் நீள்போக்கு முறையில் பிளவு உயிரிகளைத் பட்டுப் புதிய தோற்றுவிக்கின்றன. முள்தோலிகளில் சிறிது சிக்கலான வகையில் இம் முறை நடைபெறுகிறது. சான்றாக ஓஃபியாக்டிஸ் சாவிக்னியை என்னும் ஒடிநட்சத்திரத்தில் தாய் பெட்டி போலமைந்த தனது உடலின் மையத்தை இரண்டாகப் பிளக்கிறது. அவ்வாறு பிளவுபடும்போது மையத்தில் ஒரு பகுதியோடு இரண்டு அல்லது மூன்று கைகள் உள்ளன. உயிரி ஒவ்வொரு பகுதியும் தனியே, தான் இழந்த மறு பாதியைப் புதுப்பித்தல் முறையினால் வளர்த்துக் கொள்கிறது. அவ்வாறு வளர்ந்த ஒரு பகுதி இறுதி யில் தன் தாயின் உடலில் இருப்பது போலவே ஐந்து கைகளைப் பெற்றிருக்கும். பிளனேரியாக்களும், மண் புழுக்களும் குறுக்குப்போக்கில் பிளவுபடுதல் முறையைக் கையாளுகின்றன. இவை. இவ்வாறு பிளவுபடுவதால் தாயின் உடல் முன்பாதி, பின்பாதி என இரு பகுதியாகிறது. துண்டு பட்ட ஒவ்வொரு பகுதியிலும் தாயின் உடலிலிருந்து பெறப்பட்ட தோல், உணவுக்குழாயின், பகுதி, நரம்பு மண்டலத் தின் பகுதி, ஆகிய கியவை இருப்பதால் பிளவுபட்ட பிறகு, முன்பாதி. பின்பாதியையும், பின்பாதி மு ன் பாதியையும் காலப்போக்கில் எளிதில் வளர்த்துக் கொள்ள இயலுகிறது. ராப்டோசீல் (rhabdocoel) களிலும் சிலவகை மண்புழுக்களிலும் இவ்வகையான குறுக்குப் போக் கான பிளத்தல் முறை (transverse fission) மிகவும் விரைவாக நடைபெறுகிறது. எனவே தாயின் உடல் இரண்டாகப் பிளவுபடு முன்பே ஒவ்வொரு புதிய உயிரியின் உடலும் இரண்டிரண்டாகப் பிளவுபடத் தொடங்கும். ஆகையால் புதிய உயிரிகள் ஒன்றன் பின் ஒன்றாக இணைக்கப்பட்ட தற்காலிகமான ஒரு சங்கிலித்தொடர் போன்ற அமைப்பை ஏற்படுத்து கின்றன. குழியுடலித் தொகுதியைச் சார்ந்த ஆரிலியா (aurelia) வில் கலவியலா இனப்பெருக்கம் செய்யும் பாலிப்புக்கள் கலவி முறையில் இனப்பெருக்கம் செய்யும் மேடுசாக்களை உற்பத்தி செய்யும்போது தட்டு பிரிதல்