கலாயிஸ் 805
கலாயிஸ் 805 நீர் வீக்கத்துடன் கூடிய கலன் நலிவு. செல் வீக்கத்தை உண்டாக்கும் காயங்களைவிட நீர் வீக்கத்தை உண்டாக்கும் காயம் தீங்கானது. இதனால் செல்களில் நீர் உறிஞ்சப்பட்டுச் செல்கள் பெரிதாவ துடன் பல்வேறு அளவில் வெற்றிடங்களும் (Vacuoles) சைட்டோப்பிளாசத்தில் தோன்றும். இதனால் இதை வெற்றிடக் கலன் நலிவு என்பர். கொழுப்புக் கலன் நலிவு. இது ஈரல், சிறுநீரகம், இதயம் ஆகியவற்றில் தோன்றும். தாக்கமுறும்போது தாக்கப்பட்ட உறுப்பு மஞ்சள் நிறத்தில் பெருத்துத் தோன்றும். தொற்றினால் வரும் நச்சு, பாஸ்ஃபரஸ், கார்பன் டெட்ராகுளோரைடு, குளோரோஃபார்ம், இத்தியோனின், எத்தனால், சோகை நோய், ஆக்சிஜன் இல்லாமை போன்றவை இம்மாறுதலைத் தோற்றுவிக்கும். அதை ஹயலின் கலன் நலிவு. ஹயலின் என்பது சைட் டோபிளாசத்துள் காணப்படும் பொருள். அமில் நிறமாகிய இயோசின் நிறமேற்கும்போது ஹயலின் கலன் நலிவு என்கின்றனர். இது சிறுநீரக வடிகுழாயுள் உள்ள எபிதீலியல் செல்களிலும், உணவுக்குறைவால் ஈரலில் வரும் நார்த்தலுடன் புதுவளர்திசுவிலும் (cirrhosis), மஞ்சள் காய்ச்சலிலும், ஈரல் புற்று, பிட்டியூட்டரி சுரப்பியிலும் தோன்றும். முனைப்பான தொற்று நோய், டைஃபாய்டு காய்ச் சலில் தசை மெழுகு கலன் நலிவு (Zenker's degenera- tion) தோன்றும். அமைலாய்டு கலன் நலிவு. அமைலாய்டு நலிவு - நாட்பட்ட இரண்டாம் நிலை தொற்று நோய் களாகிய சிஃபிலிஸ், காசநோய், தொழுநோய், நாட் பட்ட அழற்சிகளான மூட்டழற்சி, குறிப்பிட்ட பகுதிக் குடல் அழற்சி (regional enteritis) நாட் பட்ட புண்களுடன் கூடிய பெருங்குடலழற்சி (chro- nic ulcerative colitis) மற்றும் ஹாட்சுகின் போன்ற புற்றுகளிலும் காணப்படும். மா.ஜெ.ஃபிரெடரிக் ஜோசப் கலாயிஸ் (1811--1832) கால்வா என்னும் எவரிஸ்ட் காலாயிஸ் சிறந்த கணித மேதையாவார். இவர் பெயர் கொண்ட கால்வா குலக் கொள்கை யல் கணிதத் துறையில் முக்கிய மானது ஆகும். வாழ்க்கை வரலாறு. இவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள போக்லாரைன் நகரின் மேயரின் புதல்வராக 1811 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தையின் முயற்சி யால் பாரிஸ் நகரில் உள்ள லைஸீ லூயிலா கிரான்ட் பள்ளியில் சேர்ந்து பயின்றார். கணிதத் துறையில் . இவர் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றாலும், பாரி சில் உள்ள தொழில்நுட்பப் பள்ளியின் நுழைவுத் தேர்வில் இருமுறை தோல்வியுற்றார். எனினும், அயர்ச்சியடையாது 1830 இல் தேர்ச்சியுற்றார். பிரெஞ்சுப் புரட்சியின் தொடக்கச் சின்னங்கள் தோன்றியபோது நிர்வாகத்தைத் தாக்கி நாளேட்டில் எழுதியதால் இவர் பள்ளியினின்று நீக்கப்பட்டார். 1821 ல் மன்னன் லூயி பிலிப்பைப் பற்றி இவர் ஆற்றிய சூறாவளி உரை புரட்சியைத் தூண்டுவது எனக் கருதப்பட்டதால் இவர் கைது செய்யப்பட் டார். விடுதலை ஆன சில வாரங்களுக்குள், இராணு வச் சீருடை அணிந்து, ஆயுதந்தாங்கிச் சென்றதன் விளைவாக ஆறுமாதச் சிறை தண்டனை பெற்றார். நூல்கள். இந்தப் போருக்கு முன், தம் நண்பரான அகஸ்ட்டஸ் கவாலியருக்கு எழுதிய கடிதத்தில் இருந்து இவர் எழுதிய மூன்று நூல்களைப் பற்றி அறிய முடியும். அவற்றில் ஒன்று இயல் சார்புகளின் தொகையீடுகள் மற்றும் நீள்வட்டத் தொகையீடுகள் (elliptic integrals) பற்றி எழுதப்பட்டது. எஞ்சிய இரண்டும் கொடுக்கப்பட்ட சமன்பாடுகளின் மூலங் களைக் கொண்டு கலாயிஸ் களங்களைப் (fields) பெறும் முறையை விளக்குவதாகும். ஒரு சமன்பாட் டில் கலாயிஸ் குலம் என்னும் புதிய அடிப்படைக் கருத்தைக் காணலாம். இவற்றைப் பிரெஞ்சு அவை ஏற்க மறுத்தது. ஆனால், இவர் இறப்பிற்குப் பின். 1832 செப்டம்பரில் இவை கலைக்களஞ்சிய ஆய்வேட் டில் (revue eucyclopedique) வெளியிடப்பட்டன. இவர் சமன்பாடுகளின் தீர்வு காண எழுதிய (Memaire sur les resolubititie des equations per radioaux) என்னும் நூலை லியோவில் ஏடு (diouvilles Journalexi) 1866 இல் வெளியிட்டதைக் கண்ட டெடிகன்ட் க்ரானெக்கர் என்போர் இவை கலாயிஸின் புகழ் நிலைத்து நிற்கப் போதுமானவை எனக் கருத்தைத் தெரிவித்தனர். கலாயிஸ் களங்கள். K என்னும் களத்தின் இயல் பான, பிரிக்கக்கூடிய, முடிவுறுவண்ணம் விரிவாக்கப் பட்ட களமாக L என்னும் களம் இருக்கலாம். L என்னும் களத்தின் K மாறா ஒன்றுக்கொன்று மேல் மாற்றங்கள் (K-automorphisms) குலத்தை, K மேல் உள்ள ட இன் கலாயிஸ் குலம் எனலாம். தை G (K) எனக் குறிப்பிடலாம். G(L/K) இன் சார்பு கள் எல்லாவற்றாலும் மாறாதிருக்கும் உறுப்புகள் K இல் உள்ளவை. மேலும் G (L/K)என்னும் குலத்தின் வரிசை எண் (order) K இன் மீது 1 படி (degree) ஆகும். K க்கும், L க்கும் டையே M என்னும் களம் இருப்பின், f: M→G (L(M) என்னும் சார்பு ஒன்றுக்கொன்று மேல்மாற்றம் ஆகும். இதில் G{L/M LM) என்பது G (L/K) இன் துணைக்குலம் ஆகும். இப் பண்புகள் முடிவுறு களங்களில் காணப்படுவதால் அவை கலாயிஸ் களங்கள் எனப்படுகின்றன. ஜ.டி. சாமுவேல்