பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/826

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

806 கலானஸ்‌

206 கலானஸ் கலானஸ் வரிசையில் இது உயிரி கணுக்காலிகள் தொகுதியில் கடின ஓட்டுக்கணுக் காலிகள் கோபிபோடா வகுப்பில் கலானஸ் (galanusi நீர்ப்பூச்சி வகைப்படுத்தப்பட் டுள்ளது. துடுப்புக்காலி எனவும் இது குறிப்பிடப் படுகிறது. கடல் வாழ் மிதவை உயிரிகளில் எண்ணிக்கையிலும், நீன்வளப் பொருளாதாரத்திலும் முக்கிய இடம் பெறுகிறது. தாவர மிதவை களை உண்டு நன்கு செழித்து வளர்ந்து, காட், ஹெர்ரிங் போன்ற மீன் இனத்திற்கும், திமிங்கலம் போன்ற கடல் வாழ் விலங்கினங்களுக்கும் சிறப்பு உணவாகப் பயன்படுகிறது. கலானஸ் மித வெப்பக் கடலிலும், குளிர் கடலிலும் மிகுதியாக வாழ்கிறது. ஆனால் வெப்பமண்டலக் கடல்களில் மிகவும் குறை வாகவே காணப்படுகிறது. குளிர் பகுதிக் கலானஸ் நிறமற்றும், வெப்ப மண்டலக் கலாவஸ் அழகிய நிறத்துடனும் காணப்படும். வால் என நான்கு கலானஸ் தனித்து வாழும் மிதவை உ உயிரியாகும் அது ஏறத்தாழ 1-3 மி.மீ. நீளம் உடையது. அதன் உடல், தலை, மார்பு, வயிறு, பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி ரோஸ்ட்ரம் (rostrum) முன்னோக்கி அமைந்துள்ள ஓட்டால் உருவாகியுள்ளது. மார்புப் பகுதியில் ஐந்து பெரிய கண்டங்கள் உள்ளன. ஐந்து இணை நீந்தும் கால்கள் உண்டு. முதல் இணைக் கால்கள் மற்றைய நான்கு இணைக் கால்களைவிட வேறுபட்டும் இடுக்கி போன்றும் அமைந்துள்ளன. முதல் இணைக் கால்கள் உணவைப் பிடித்து உண்ண உதவுகின்றன. இணைக் கால்கள் துடுப்புப் ஏனைய போன்று கண்டங் நான்கு அமைந்து நீந்த உதவுகின்றன. வயிற்றுப் பகுதி மிகவும் குறுகியதாகவும் நான்கு சிறிய களாகவும் அமைந்துள்ளது. வேறு துணை உறுப்புகள் இல்லை. வால் பகுதி இறுதி வயிற்றுக் கண்டத்தி விருந்து பிளவுபட்டு விசிறி போன்ற நான்கு அமைப்பைக் கொண்டுள்ளது. தலைப்பகுதி பெரிய தாக, இரண்டு ணை உணர் கொம்புகள் அமையப் பெற்றுள்ளது. உணர் முதல் இணை உணர் கொம்புகள் உடல் பகுதி யளவு நீண்ட அமைப்புக் கொண்டவை. மற்றோர் இணை மிகவும் சிறியதாகவும், அமைப்பில் மார்புப் பகுதிக்கு இடைப்பட்டும், மயிரிழை போன்ற அமைப்பிலும் இருக்கும். தலையில் உள்ள கொம்புகள் உணவுப் பொருள்களின் தன்மையைக் கண்டறிவதற்கும் முதல் இணை மார்புக் கால்கள் உணவைப் பிடிப்பதற்கும், துடுப்புக்கால்கள் நீரை வேகமாகச் சுழற்றி நீர்ச்சுழற்சியை ஏற்படுத்துவதற் கும் பயன்படுகின்றன. தன்னைச் சுற்றியுள்ள நீர்ச் சுழற்சியால் மேலும் கீழும் நீந்தி, தாவர மிதவை உயிரிகளை உணவாக்கிக் கொள்ளத் தன்பால் ஈர்க் கிறது. நீரில் வேகமாக நீந்த முடியாததால் கடலின் மேல்பரப்பில் ஏறத்தாழப் பத்து வரை மேலும் சீழும் நகர்ந்து செய்கிறது. மீட்டர் ஆழம் டப்பெயர்ச்சி கவானஸ் வட அட்லாண்டிக் கடல் பகுதியில் ஒரு சில பருவக் காலங்களில் மிகவும் செழித்து வளர்ந்து கடலின் மேல்பரப்பு முழுதும் பரவிச் சிவப்பு நிறத்தைக் கொடுக்கும். மீனவர்கள் இதைச் சிவப்பு உணவு எனக் கூறுவர்.இவ்வாறு தோன்றும் சிவப்பு நிறத்திற்குப் பின்னர் சில நாள் மீன்பிடிப்பு அப்பகுதியில் நன்கு நடைபெறும். எனவே கலானஸ் வட அட்லாண்டிக் கடலின் மீன் வளத்தை அள விடும் ஒரு முக்கிய காரணியாகும். இதுவே இதன் பொருளாதாரச் சிறப்பாகும். இவ்வுலகில் வாழும் மிதவை உயிரிகளின் எண்ணிக்கையில் மிகுதியாகத் தோன்றும் ஒரே உயிரினம் கலானஸ் ஆகும். கலிஃபோர்னியம் வரிசை ந.வே. கருப்பண்ணன் தனிம அட்டவணையில் ஆக்ட்டினைடு வரிசையில் பெர்க்லியத்திற்கு அடுத்து அமைந்திருக் கும் தனிமம் கலிஃபோர்னியம் (californium) ஆகும். இதன் குறியீடு, cf; அணு எண் 98; அணு எடை 251. இதன் கண்டுபிடிப்பும் தயாரிப்பும் குறைந்த அணு எண்ணைக் கொண்ட வேதித் தனிமங்களின் செயற்கை அணுக்கருத் தனிமமாற்றத்தால்நிகழ்த்தப் படும். இதன் அனைத்து ஐசோடோப்புகளும் கதிரி யக்கத் தன்மை வாய்ந்தவை. இவற்றின் அரை ஆயுள் காலம் ஒரு மணித்துளியிலிருந்து ஆயிரம் ஆண்டுகள் வரை வேறுபடும். கலிஃபோர்னியம் இயற்கையில் புவியின் மேல்தோட்டில் கிடைப்பதில்லை. 1975ஆம் ஆண்டில் உலகில் இருந்த கலிஃபோர்னியத்தின் அளவு ஒரு கிராம் தான். இத்தனிமத்தை 1950 இல் கண்டுபிடித்தோர் எஸ்.ஜி. தாம்ஸ்சன். கே. கியோர்சோ, ஸ்ட்ரீட், ஏ. ஜி.ட்டி. சீபோர்க் என்போராவர். இத்தனிமத்தைப் சுவிஃபோர்னியா பல்கலைக்க பற்றிய ஆய்வுகள் கத்தின் கதிரியக்க ஆய்வுக் கூடத்தில் நடைபெற்றன. எனவே கண்டுபிடிக்கப்பட்ட புதுத்தனிமத்திற்கு கழ அந்த மாநிலப் பல்கலைக்கழகத்தின் பெயரே சூட்டப் பட்டது. சைக்குளோட்ரான் கருவியில் ஒரு கிராமில் பத்து இலட்சத்தில் ஒரு பங்கு கியூரியம்-242 ஐசோடோப்பை ஹீலியம் அயனிகள் தாக்கும்போது ஹீலியம் அணுக்கரு கியூரியம் (242) அணுக்கருவுடன் சேர்ந்து ஒரு நியூட்ரான் வெளியேற்றப்பட்டு அணு நிறை, அணு எண் 98 ஐயும், 245 ஐயும், கொண்ட ஐசோடோப் உண்டானது.