808 கலிலியோவின் மாற்றங்கள்
808 கலிலியோவின் மாற்றங்கள் பல்கலைக்கழகத்தில் அவர் பயிலும் துறையில் கணிதம் பாடமாக அமையவில்லை. ஒருசமயம் கணித விரிவுரையாற்றிக் வல்லுநர் ஒருவர் அருமையாக கொண்டிருந்ததைத் தற்செயலாகக் கேட்டதிலிருந்து கணிதம் அவரை ஈர்த்தது. பலநாள் அவர் கணித விரிவுரையாளரின் அறையில் மறைந்துகொண்டு கணிதப் பாடங்களின் விரிவுரையில் தம்மை மறந்து நிற்பார். கணிதத்தில் நாட்டம் கொண்டு பல வெற்றிகரமான ஆய்வுகளை வெளியிட்டதால் பைசா நகரப் பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராக 25 ஆம் வயதில் அவர் அமர்த்தப்பட்டார். பளுவான பொருள், பளுவற்ற பொருளைவிட வேகமாகப் புவியை நோக்கி விழுகிறது என்னும் அரிஸ்டாடிலின் கொள்கை தவறு என்பதைப் பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் உச்சியிலிருந்து எடை சமமற்ற பொருள் களைக் கீழே தள்ள, அவை ஒரேவேகத்துடன் புவியை அடைந்ததன் மூலம் மெய்ப்பித்துக் காட்டினார். " 1592 இல் அவர் பதுவா நகரத்துப் பல்கலைக் கழகத்தில் கணித விரிவுரையாளராகச் சேர்ந்தார். பல்கலைக் கழகத்தில் கணிதத்திலும் வானியலிலும் விரிவுரையாற்றி விட்டு வீட்டில் தனியாக நிலை இயக்கவியலிலும், பொறி இயலிலும் ஆய்வுகள் நிகழ்த்திக் கொண்டிருந்தார். இராணுவப் பொறி யாளரும் துப்பாக்கி வீரர்களும் எளிதாகக் கணக்கிட ஒரு கணிதக் கருவியைத் தம் பட்டறையிலே புதிதாக உருவாக்கினார். காற்று வெப்ப அளவியையும் முதன் முதலாக அவர் உருவாக்கினார். 1609 இல் கண்ணொளி இயல் கொள்கை களின் உதவியைக் கொண்டு தாலைநோக்கியைக் கலிலியோ அமைத்ததோடு அதன்மூலம் வானியலை அறியவும் இவரே காரணமாயிருந்தார். மங்கலான மிகப் பல விண்மீன்களின் கூட்ட அமைப்பே மண்ட லம் (galaxy) என்றும். சந்திரன் ஒரு மென்மையான உருளை என்று வழக்கிலிருந்த நம்பிக்கையைத் தவறு என்றும், மாறாக அது கரடுமுரடான உயர்ந்த மலை களையும் மிகத்தாழ்வான பள்ளத்தாக்குகளையும் உடையதென்றும், வியாழன் கோளை நான்கு சார்புக் கோள்கள் சுற்றுகின்றன என்றும், சூரியனில் கரும் புள்ளிகள் உள்ளன என்றும், தொலைநோக்கியின் உதவியால் கலிலியோ கண்டுபிடித்தார். சூரியனைச் சுற்றியே புவி நகர்கிறது என்னும் கோபர்னிகஸ் கொள்கையைக் சுலிலியோ தொலை நோக்கி வழிப் பதித்த வானக் காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தினார். ஆனால் அன்றைய ரோமன் கத்தோலிக்க மதகுருமார்கள் புவியைச் சூரியன் சுற்றுகிறது என்பதே சரி என்றும் அக்கொள்கைக்குப் புறம்பான கோபர்னிகசின் கொள்கை தவறு என்றும். அதனால் கலிலியோ, கோபர்னிகஸ் கூற்றை உறுதிப் படுத்தியது குற்றம் என்றும். கலிலியோ தம் கொள்கையை விலக்கிக் கொள்ள வேண்டுமென்றும் வற்புறுத்தினர். 1616 இல் அவர் தம் பிடிவாதத்தால் வீட்டுக் கைதியாக்கப்பட்டார். 1638 இல் மங்கிய கண்பார்வை பெரிதும் நிலையில் 'இரு நவீன அறிவியலைச் சார்ந்த உரை யாடல்' என்னும் தலைப்பில் மிகச்சிறந்த நூலை எழுதி வெளியிட்டார். அந்நூலின் முதல்பாதி, ஓர் உத்திரத்தின் உறுதி அதன் நீளம், அகலம், திண்மை ஆகியவற்றுக்கு நேர்விகிதத்தில் இருப்பதை விளக்கு கிறது. அதன் மறுபாதி நகரும் பொருள்களின் இயக்க முறையைத் தெளிவுபடுத்துகிறது. ஓய்விலிருந்து விழும் பொருள்களின் முடுக்கம் சீரானது என்றும் எறிபொருளின் பாதை ஒரு பரவளையம் என்றும் கண்டுபிடித்தார். 1632 இல் அவர் 'இரண்டு முறைகளைப் பற்றிய உரையாடல் என்னும் நூலை வெளியிட்டார். அந்நூல் கூறும் உண்மைகளை அடிப் படையாகக் கொண்டு நியூட்டன் தம்முடைய கொள்கைகளை உருவாக்கினார். கலிலியோவின் மாற்றங்கள் மேலே உலக எ.எஸ் குமாரசாமி எறியப்படும் பொருள்களின் (projectiles) இயக்கங்களை ஆராய்ந்த கலிலியோ தரையிலிருந்து ஏதாவது ஒரு கோணத்தில் எறியப்பட்ட பொருளின் இயக்கத்தைச் செங்குத்தாக மேல்நோக்கி எறியப் பட்ட பொருளின் இயக்கத்தின் மூலம்கணக்கிட்டு விட லாம் என்று கண்டுபிடித்தார். ஒருசீரான வேகத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் வண்டியிலிருந்து ஒரு பொரு ளைச் செங்குத்தாக மேல் நோக்கி வீசினால், வண்டியி மேலேபோய் லிருப்பவருக்கு அது செங்குத்தாக மீண்டு வருவது போலவே தெரியும். ஆனால்தரையில் நின்று அதைப் பார்ப்பவருக்கு அது சாய்வாகச் சென்று, புறப்பட்ட இடத்திலிருந்து விலகி விழுவ தாகத் தெரியும். வண்டியின் இயக்கத்தை எறிபொரு ளான இயக்கத்தின் மேற்பொருத்தினால் (super-