பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/831

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலீனா 811

கலீனா 8/1 இயற்பியல் பண்புகள். இக்கனிமம் செஞ்சமச் சதுரப் படிகத் தொகுதியில் (isometric crystal system) படிகமாகியுள்ளது. படிகங்கள் எண்முகப் பட்டா வடிவிலும், அறுமுகப் பட்டக வடிவிலும்இயற்கையில் நெருங்கி, துகளாகப்பட்ட மணிகளாகப் பாறை களில் காணப்படுகின்றன. இது தெளிவான 001, 100, 010 கன சதுரப்பட்டகக் கனிமப் பிளவைக் கொண்டது. இது காரீயக் கருமை நிறமுடையதாகக் கருஞ் சாம்பல்நிற உராய்வுத் தூளைக் கொடுக்கும். திண்மை யான உலோக மிளிர்வையும், எளிதில் நொறுங்கும் தன்மையையும், சீரான முறிவையும் கொண்டது. இதன் கடினத் தன்மை 2.5; அடர்த்தி 7.5 ஆகும். இதன் உருகுவெப்பம் 1115°C. எளிதில் அடர் கந்தக அமிலத்தில் கரையும். பிற கனிமங்களுடன் ஒப்பிடும் போது இதன் பிளவுத் தன்மையையும், இதன் நிறத்தையும் கொண்டு இதை வேறுபடுத்திக் லாம். காண ஒளிப்பண்பு. இது ஒளி ஊடுருவாத் தன்மை உடை யது. எதிர்பலிப்பு நுண்ணோக்கியில் இதன் மெரு கூட்டப்பட்ட கனிமத்தைக் காணும்போது வெள்ளை நிறமாகவும், முக்கோண வடிவம் கொண்டதாகவும் காணலாம். இக்கனிமம் எளிதாக செருசைட், ஆங்கிளி சைட், வைரோமார்பைட், மிமிட்டைட், ஃபனைட்,வினரைட் ஆகக்குறைந்த அளவு மாற்றம் அடையும். உல் தோற்றம். உலோகக் கந்தகப் படிவுகளில் இக் கனிமம் பரவலாகக் காணப்படுகிறது. வெள்ளி, ஆன்ட்டிமனி,ஆர்செனிக், செம்பு, துத்தநாகப் படிவு களுடன் இணைந்து காணப்படும். பெரும்பாலும், ஸ்பாகலரைட்டுடன் இணைந்து இயற்கையில் கிடைக் கிறது. இக்கனிமம் பிற கனிமங்களுடன், குறைந்த இடை நிலை மற்றும் உயர் வெப்ப நீர்ம வெப்பப் படிவுகளாகக் காணப்படுகிறது. பாறை வளாகங்களில் காணப்படும் திறந்த குழிகளிலும், சுண்ணாம்புப் பாறை வளாகங்களில் உள்ள பிளவுகளிலும் காணப் படுகிறது. குவார்ட்ஸ் பாறைகளில் நரம்பிழைகளாகப் பிற கனிமங்களுடன் இணைந்து கிடைக்கிறது.படிவுப் பாறைகளில் பரவி அமைந்துள்ள துகள்களாக உள்ளது.இக்கனிமம் தொடுகை உருமாற்றப் பாறை வளாகங்களிலும் (contact metamorphism) வெந்நீர் ஊற்றுப் படிவுகளிலும் மிக அரிதாகக் காணப்படு கிறது. பரவல். இது பெரும்பாலும் ஆஸ்திரேலியாவின் உடைந்த மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. அமெரிக்காவில், மிசோரி, கானால் ஒக்கலாகாமா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இந்தியாவில் இராஜஸ்தானில் ஜாவார்சுரங்கத்தில் ஸ்பாக்லரைட்டு டன், டோலமைட் மற்றும் சுண்ணாம்புப் பாறை வளாகத்தில் பெருமளவு கிடைக்கிறது. ஆந்திரத்தில் அக்கினி குண்டலா, தமிழகத்தில் தருமபுரி, செங்கல் பட்டு மாவட்டத்தில் மாமண்டூர் ஆகிய இடங்களில் பைரைட், மாலிபிடனைட், சால்கோ பைரைட்டுடன் L a + படம் 1. கலீனாவின் களிமத் தோற்றம் a .