பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/834

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

814 கலோரி

8/4 கலோரி மெர்க்குரஸ் குளோரைடு, தூய பாதரசம், பொட்டா சியம் குளோரைடு ஆகியவற்றாலான பசையால் மூடப்படுகிறது, பின்னர் மெர்க்குரஸ் குளோரைடால், தெவிட்டப்பட்ட பொட்டாசியம் குளோரைடு கரைச் லால் கருவி முழுதும் படத்தில் காட்டியவாறு நிரப்பப் படுகிறது. பொட்டாசியம் கு ளோரைடு கரைசலின் அடர்வு டெசிநார்மல், நார்மல், தெவிட்டியது எனப்படும் மூவகைகளில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். கண்ணாடிக் குழாயினுள் வைத்து மூடப் பட்ட பிளாட்டினக் கம்பி பாதரசத்துடன் மின் இணைப்பை ஏற்படுத்துகிறது. மின்கலத்தின் மற் றொரு மின்முனையுடன் தொடர்பை உண்டாக்க கலோமல் மின்முனையின் பக்கக் குழாயில் நிரப்பப் பட்டுள்ள (ஒத்த திறனுடைய) குளோரைடு கரைசல் பயன்படுகிறது. பொட்டாசியம் மின் அழுத்த அளவுகள். வெவ்வேறு கலோமல் மின்முனைகளின் மின் அழுத்தங்கள் ஹைட்ரஜன் மின்முனை அளவீட்டு அடிப்படையில் 298C இல் பின்வருமாறு அமையும். 0.1 NKCI Hg,(l,(F) Hg 0.3338 - 0.00007 (t-298) வோல்ட் 1.0 N.KC1 Hg, Cl,< F)/Hg 0.28000 00024 (t - 298) நிறைவற்றKCI [g,Cl2(F)/Hg 0.2415 0.00076 (1 - 298) இதர மின்முனைகளின் ஆக்சிஜனேற்ற மின்னழுத் தங்களை அளவிட, கலோமல் மின்முனைகள் ஒப் பீட்டு மின்முனைகளாகப் பயன்படுத்தப்படுவதால் அவை ஒடுக்க மின்முனைகளாக உள்ளன. ஒப் ஹைட்ரஜன் மின்முனைகள் முதல்நிலை பீட்டு மின்முனைகளாக இருப்பினும் அவற்றைப் பயன்படுத்துவதில் சில இடையூறுகள் உள்ளன. தூய்மை, ஒரு வளிமண்டல அழுத்தத்தில் அளவீடு செய்தல், கரைசலில் ஹைட்ரஜன் அயனிகளின் செறிவை ஓர் அலகாக நிலைநிறுத்தல் ஆகியவை ஹைட்ரஜன் மின்முனையைப் பயன்படுத்து வதில் தடையாக உள்ளன. ஆனால் கலோமல் மின் முனைகள் சிறந்தவையாகவும் எளிதில் பயன்படுத்தக் கூடியவையாகவும் உள்ளன. பி. சோமசுந்தரம் நூலோதி. Samuel H. Maron and Carl F. Prutton, Principles of Physical Chemistry. Amerind Publishing Co., Pvt. Ltd., NewYork கலோரி (இயற்பியல்) இது வெப்பத்தை அளக்கப் பயன்படும் ஓர் அலகாகும். வெப்பம் ஒருவகை ஆற்றல். எனவே, அனைத்து வகை ஆற்றல்களையும் அளக்கப் பயன்படும் ஜூல் எனும் அலகே வெப்பத்தின் அலகாக இன்று பயன் படுத்தப்படுகிறது. மிக அண்மைக் காலம் வரை கலோரி எனும் அலகு பயன்படுத்தப்பட்டு வந்தது. அஃது பின்வருமாறு விளக்கப்பட்டது. ஒரு பொருளுக்கு வெப்பம் அளிக்கப்பட்டால் அதன் வெப்பநிலை உயருமென்பதும் பொருளில் இருந்து வெப்பம் வெளியேறினால் அதன் வெப்பநிலை உண்மையாகும். அவ்வாறு குறையுமென்பதும் பொருளின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தைத் தரும் வாய்பாடு பின்வருமாறு: Q=ms இதில் im என்பது பொருளின் நிறையையும்,s என்பது அதன் வெப்ப ஏற்புத்திறனையும், i என்பது வெப்ப ஆற்றலை அளிப்பதால் பொருளில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தையும் குறிக்கும். இவ்வாய்பாட்டைப் பயன்படுத்தியே கலோரி வரையறுக்கப்படுகிறது. இதற்கென, நீரின் வெப்ப ஏற்புத் திறனின் மதிப்பு, ஒன்று எனக் கொள்ளப் படுகிறது. (இது செண்ட்டிமீட்டர், கிராம். நொடி. அலகுத் திட்டத்தில் ஆகும்) இவ்வடிப்படையில் m = 1 கிராம், 8 1°C ஆனால் Q - ms = 1 x 1 x 1 1கலோரி = எனவே, ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை I°C உயர்த்துவதற்குத் தேவையான வெப்பம் கலோரி என வரையறுக்கலாம். டர் கலோரியை இவ்வாறு வரையறுப்பதில் ஓர் உள்ளது. ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை I°C உயர்த்தத் தேவையான வெப்பத்தின் அளவு அதன் தாடக்க வெப்பநிலையைப் பொறுத்து மாறுபடு கிறது. அதாவது, வெவ்வேறு வெப்பநிலைகளில்இதன் மதிப்பு ஒன்றுக்கொன்று சற்றே வேறுபட்டுள்ளது. இதனால், பின்வரும் இரு கலோரிகளை வரை யறுப்பது வழக்கம். சராசரி கலோரி. ஒரு கிராம் நீரை 0°C இலிருந்து 100°C க்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்பத் தில் நூறில் ஒரு பங்கு சராசரி கலோரி எனப்படும். 15'கலோரி. ஒரு கிராம் நீரை 14.5°C இலிருந்து 15, 5°C க்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்பம் 15 கலோரி எனப்படும். கலோரி என்பது மிகச் சிறிய அலகானதால் தொழில் முறைப் பயன்களுக்கென, கிலோ கலோரி