பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/838

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

818 கலோரிக்‌ கொள்கை

8/8 கலோரிக் கொள்கை கலோரி முழுதும் நீர்மக்காற்று அல்லது நீர்ம ஹைட்ரஜனின் வெப்பநிலையை அடையும். இப் போது பிளாட்டினக் கம்பி வழியாக மின்சாரத்தைப் பாய்ச்சப் பொருளின் வெப்பநிலை உயரும். பிளாட்டினச் சுருளையே பிளாட்டினத் தடை வெப்ப நிலை அளவியாகப் பயன்படுத்தி வெப்பநிலை உயர்வைக் கண்டுகொள்ளலாம். கம்பியின் வழியாக V வோல்ட் மின்னழுத்தத்தில் 1 ஆம்பியர் மின்னோட்டம் t நொடிகள் பாய்ந்தால். நொடிகளில் உண்டான வெப்பம் VIt ஜூல்கள் ஆகும். பொருளின் நிறை கிலோகிராம்; அதன் வெப்ப ஏற்புத் திறன் S ஜுல்/கிலோகிராம்/ செல்வின் எனவும் அளந்து கண்ட வெப்பநிலை உயர்வு do கெல்வின் எனவும் கொண்டால் பொருள் பெற்ற வெப்பம் msdå ஜூல்கள் ஆகும். எனவே VIt = msd e இதிலிருந்து Sஐக் கணக்கிடலாம். கடத்தாப் பொருள்களுக்கான கணக்கீட்டில் பொருள் மட்டுமன்றி வெள்ளிக் கலோரி அளவியும் வெப்பத்தை ஏற்றது. கடத்தாப் பொருள்களுக்கான நென்ஸ்ட் கலோரி அளவியை நீர்மங்களுக்கும் வளிமங் களுக்கும் பயன்படுத்தலாம். புன்சன் கலோரி அளவி. பனிக்கட்டி உருகுவதற்கு வெப்பம் தேவை. வெப்பத்தை ஏற்றுப் பனிக்கட்டி உருகி நீராகும்போது அதன் பருமன் குறைகிறது. இவ்வாறு ஏற்படும் பருமன் குறைவு பனிக்கட்டி ஏற்ற வெப்பத்தின் அளவைப் பொறுத்தது. எனவே, இட் பருமன் குறைவை அளந்து வெப்பத்தைக் கணக்கி லாம். இந்த அடிப்படையில் அமைந்தது புன்சன் கலோரி அளவியாகும். மிகக்குறைந்த அளவில் இருக்கும் அரிய உலோகங்களின் வெப்ப ஏற்புத் திறனைக் கண்டுபிடிக்கப் பயன்படுவது இக் கலோரி அளவியின் சிறப்பாகும். ஜாலி நீராவிக் கலோரி அளவி. வளிமங்களின் வெப்ப ஏற்புத் திறனை (மாறாப் பருமனில்) அளப் பதற்குப் பயன்படுவது ஜாலி கலோரி அளவியாகும். புன்சன் கலோரி அளவி போன்று இதுவும் ஓர் உள்ளுறை வெப்பக் கலோரி அளவியாகும். நீராவி நீராக நிலைமாறும்போது வெப்பத்தை வெளிவிடும். வளிமம் நிரம்பிய கோளத்தின் மீது நீராவி படும் போது எவ்வளவு நீராவி நீராக மாறுகிறது என்பதைக் கொண்டு வளிமம் எடுத்துக்கொண்ட வெப்பத்தையும் அதன் வெப்ப ஏற்புத் திறனையும் கணக்கிடலாம். வெடி கலோரி அளவி. 3000°C எனுமளவு உயர்ந்த வெப்பநிலைகளில் வளிமங்களின் வெப்ப ஏற்புத் திறணைக் கணக்கிட வெடிப்பு முறைகளைப் பயன்படுத்தலாம். வளிமத்துடன் ஒரு வெடிக்கும் கலவையையும் சேர்த்து ஓர் எஃகு கோளத்துள் வைத்து ஒரு மின்பொறியால் வெடிபொருளை வெடிக்கச் செய்து அதனால் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்களை அளந்து வளிமத்தின் வெப்ப ஏற்புத் திறனைக் கணக்கிடலாம். கரி, பெட்ரோலியம் போன்ற எரிபொருள்கள் தரக்கூடிய வெப்பத்தின் அளவைக் கணக்கிட வெடி கலோரி அளவிகள் பயன் படும். கலோரிக் கொள்கை ச.சம்பத் கொள்கைப்படி வெப்பம் கலோரிக் எனும் ஒரு பாய்மமாகக் கருதப்பட்டது. கலோரிக் அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது. அழிக்கவோ, உருவாக் சுவோ முடியாதது; காணமுடியாதது: சிறந்த மீட்சித் தன்மையுடையது எனும் கருதுகோள்கள் கொண்டு பல்வேறு வெப்பவியல் நிகழ்வுகளுக்கு விளக்கம் அளிக் கப்பட்டது. கலோரிக் ஒரு பொருளோடு சேர்க்கப் படும்போது அப்பொருளின் வெப்பநிலை உயர்வ தாகவும், ஒரு பொருளில் இருந்து நீங்கும்போது அதன் வெப்பநிலை குறைவதாகவும் கருதப்பட்டது. லெப்பமூட்டப்பட்ட பொருளின் எடை உயர்வ தில்லை எனும் உண்மை,கலோரிக் எடையற்றது எனும் கருத்தைக் கொண்டு விளக்கப்பட்டது. வெப்பத்தால் பொருள்கள் விரிவடைவது; கலோரிக் கின் மீட்சித்தன்மை கொண்டு விளக்கப்பட்டது. நீர் உயர்ந்த இடத்திலிருந்து தாழ்ந்த இடத்திற்குப் பாய்வதுபோல் கலோரிக் உயர் வெப்பநிலையில் உள்ள பொருளிலிருந்து தாழ்வெப்ப நிலையில் உள்ள பொருளுக்குப் பாய்கிறது என்றும், நனைந்த பஞ்சை அழுத்தினால் நீர் வெளியேறுவதுபோல் உராய்தலால் கலோரிக் அப்பொருளிலிருந்து வெளிவருவதால் வெப்பம் ஏற்படுகிறது என்றும் விளக்கம் அளிக்கப் பட்டது. கலோரிக் காண முடியாததாகவும் எங்கும் பரவி யுள்ளதாகவும் கருதப்பட்டாலும் அது ஒரு பொருள் துகள் (material particle) என்றே கருதப்பட்டது. கலோரிக் துகள்கள் ஒன்றை ஒன்று எதிர்க்கின்றன: ஆனால் பிற பொருள் துகள்கள் இவற்றை ஈர்க்கும் தன்மையுள்ளன எனும் கருதுகோள் கொண்டு பொருள்களின் மாறுபட்ட வெப்பங்கொள் தன்மை (thermal capacity), வெப்பங்கடத்துந் தன்மை (thermal conductivity) ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கலோரிக் சில பொருள்களின் மூலகங்களோடு சேரும்போது ஒரு சேர்மம் உண்டா கிறது. வேதிச் சேர்மங்களில் அவற்றில் உள்ள தனி மூலகங்களின் பண்புகளை இழப்பதுபோல், கலோ ரிக்கும் தன் தனிப் பண்பை இழக்கிறது எனும்