பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/839

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவ்விகள்‌ 819

கவ்விகள் 8/9 கொள்கையால் உள்ளுறை வெப்பம் (latent heat) விளக்கப்பட்டது இவ்வாறு பல வெப்பவியல் நிகழ்வுகளுக்குக் கலோரிக் கொள்கை விளக்கம் அளித்தாலும், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பல நிகழ்வுகளுக்கு அதனால் விளக்கம் அளிக்க முடியவில்லை. சான்றாக, ஜுல் விளைவில் மின்தடை வெப்பமடைவது மின் மூலத்திலிருந்து பெறப்படும் கலோரிக்கால் கருதினால் கலோரிக்கை இழக்கும் மின் மூலத்தின் வெப்பநிலை குறைய வேண்டும். ஆனால் அவ்வாறு எந்நிகழ்வும் கண்டுபிடிக்கப்படவில்லை. க = எனக் 1840இல் ஜூல் பல ஆய்வுகள் மூலம் செய்யப் படும் வேலையே (W) வெப்பமாக (H) மாற்றமடை கிற கிறது என்றும், அவற்றின் தகவு ஒரு மாறா எண் J. (J ணாக இருக்கும் என்றும் கண்டார். W/H : என்பது வெப்பத்தின் இயக்கவியல் சம எண்). இது வெப்ப இயங்கியலின் முதல் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் கலோரிக் கொள்கை கைவிடப்பட்டது. வெ. ஜோசப் கவ்விகள் கடலின் தரைப்பகுதிகளைத் தோண்டி ஆய்வுக்குட் படுத்தக் கவ்விகள் (grabs) பெரிதும் பயன்படு கின்றன, பல்வேறுபட்ட தரைப்பகுதிகளைத் தோண்டி, மாதிரிப்பொருளைத் தொகுத்து ஆய்வதன் மூலம் இப்பகுதியில் உலர்ந்தும், புதைந்தும் துளைத்தும் செல்லக்கூடியனவும் திருக்கை, நாக்குமீன் போன்ற எண்ணற்ற அடிமட்ட மீன்களுக்கு உணவாக அமைந்து இவற்றின் வளத்தை அளவிடக் கூடியவையு மான பாக்டீரியாக்கள், புழுக்கள், கணுக்காலிகள். மெல்லுடலிகள், நட்சத்திர மீன்கள் போன்ற பல் வேறு உயிரினங்களின் உற்பத்தி பற்றியும் வணிகச் சிறப்பு வாய்ந்த எரிவாயு, எரிஎண்ணெய், மாங்கனீசு துண்டுகள் போன்றவை இருக்குமாயின் அவற்றின் அளவுபற்றியும் அறியமுடியும். கவ்விகள் இவ்வாறு மனிதனின் வாழ்க்கைக்கு மறைமுகமாகத் துணை புரிவதால் இவற்றைப் பற்றி அறிவது இன்றியமை யாதது. கவ்விகளைத் தோண்டிகள் (digger) என்றும் 3 2 1 படம் 1. விடுவிப்புக் கொக்கி இருக்கையில் இருத்தலும் திறந்த நிலையில் தரைக்கு மேல் வாளிகள் இருத்தலும் 2. விடுவிப்புக் கொக்கி நழுவுதலும், வாளிகள் மண்பகுதியைத் தோண்டுதலும் 3. மாதிரிப் பொருள்கள் எடுத்தபின் வானிகள் மூடிய நிலையில் உள்ளன.