கவட்டாணி 827
கவட்டாணி 827 காந்த நிலைமக் கவசம் கவசமிடப்பட வேண்டிய இடத்தைச் சுற்றியுள்ள காந்தப் பாயத்தைத் தாழ்ந்த தடுப்புப் பாதையால் பக்கவாட்டில் திருப்பி விடுவதன் மூலம் வெளிப்புற மற்றும் பொதுவாசு நிலையான காந்தப்புலத்திலிருந்து குறிப்பிட்ட அளவு முழுமை யான கவசமிடலைப் பெறமுடியும். அதாவது கவசத்தில் சூழப்பட்ட நிலையான காந்தப்புலம் கவசத்திற்கு வெளியே உள்ள மண்டலத்தை அடை யாமல் பெரும்பான்மையாகத் தடுக்கப்படுகிறது எனலாம். கவசம் காந்தப் பாயத்திற்கு முழுமையான காந்தப் பாதையாக அமைய வேண்டும். மிகு புரைமை (permeability) கொண்ட காந்த இரும்புப் பொருளால் சுவசமிடப்பட வேண்டிய இடம் சூழப்பட வேண்டும். கவசத்தின் தடிமனையும், புரைமையையும் அதிகரிப்பதன் மூலமும் பல கூடுகள் கொண்ட கவசங் களைப் பயன்படுத்துவதன் மூலமும் கவசக் காரணியைக் குறைக்கலாம். தடிமனான ஒற்றை அடுக்குக் கவசங்கள் மலிவானவை அல்ல. மின் காந்தக் கவசமிடல். முன்னர் விளக்கப்பட்ட காந்த நிலைமைக் கவசமிடல் காந்தப்புலம் காலத் தால் மாறுபடும்போதும் பயனளிக்கும். ஒரு கம்பிச் சுருள் இத்தகைய கவசத்தால் சூழப்பட்டிருக்கலாம். இத்தகைய கவசம் சுருளின் தூண்டத்தை (impulse) அதிகரிக்கும். நன்றாகக் கவசமிடல் புலங்களை மாற்றுகிறது என்பதை துகாட்டுகிறது. நிலை யான அல்லது மெதுவாக மாறும் புலங்களுக்கு தகைய காந்தக் கவசமிடல் தேவை. மாறுபட்ட ஆனால் மிகவும் பயன் தரக்கூடிய மின் காந்தக் கவசமிடல் மின் நிலைமக் கவசத்தின் மூலம் பெறப்படும். கேட்பு எல்லையின் மேல் மட்டத் திற்கும் மேல் உள்ள அலைவெண்களில் 10-1 வரை உள்ள கவசக் காரணிகளை எளிதில் அடைய முடியும். மிக அருகில் பொருத்தப்பட்ட மின் அலைவடிப்பான் (electric wave filter) தக்க எடுத்துக்காட்டாகும்.1/68 தடிமனுள்ள செம்பால் ஆன மூடிய பெட்டியே கவச மாகும். செம்பின் மேல் படும் காந்தப்புலம் சுழல் மின்னோட்டங்களை உருவாக்குகிறது. அவை பாயம் (flux) உட்புகுதலை எதிர்க்கின்றன. சுழல் மின்னோட்டப் பாதைகளின் கடத்துமம் (conduction) மிகுதியானால் கவசச் செயல்பாடு மேம் படுகிறது. காந்த நிலைமக் கவசம் போலல்லாது இக்கவசம், கவசமிடப்பட்ட கருளின் தூண்டத்தைக் குறைக்கிறது. கவசத்தால் நிரப்பப்படும் இடம் குறை வாக இருக்க வேண்டுமெனில், தாழ்ந்த தடுப்பும் பொருள்கள் அடுத் உயர் கடத்துமமும் கொண்ட கொண்ட குறுந்தகட்டுக் தடுத்த நிலைமக் கவசம் பயன்படுத்தப்படும். அடுக்குகளாகக் மின் வடிவு கவசத்தை காந்தத் தன்மையற்றதாகவும், சுழி மின்னோட்டப் பாதைகளைத் தடுக்கும் கொண்டதாகவும் அமைப்பதன் மூலம் குறிப்பிடத் தக்க காந்தக் கவசமிடல் இல்லாத மிகு அளவு மின் நிலைமக் கவசமிடலைப் பெற முடியும். கவசமிடப்பட்ட கம்பிகளும் முழுக் கம்பிகளும். பல் வேறு தகவல் தொடர்பு பாதைகளைத் தன்னுள் அடக் கிய தொலைபேசி மூடு கம்பியின் உறை, மின்காந்தக் கவசமிடலின் சிறந்த எடுத்துக்காட்டாகும். இவ்வுறை அதன் தளத்தில் ஒன்று அல்லது மேற்பட்ட இடங் களில் நில இணைப்புச் (earthing) செய்யப்பட்டுள்ளது. உயர் தடை நிலை ணைப்புகளில்கூட மூடு கம்பிக் கடத்திகள் வெளிப்புலங்களிலிருந்து கவசமிடப்பட் டுள்ளன. உயர்ந்த சுமப்பு அலைவெண்களில் கவச மிடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கடத்தி ஓசை, தடை ஓசையைவிடக் குறிப்பிடும்படி மிகுதி யாக இருப்பதில்லை. சாதாரணமாக உயர்ந்த அலைவெண்களில் ஓர் அச்சுக் கம்பி கவசமிடப்பட்ட கம்பிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். குறைந்த அலைவெண்களில் சுவசமிடல் மிகக் குறைவேயாகும். இந்தக் காரணத் தால், பார்வை அலைவெண்களில் தொலைக் காட்சிக் குறிப்புகளை அனுப்புவதற்கு முறுக்கிய கவசமிடப் பட்ட கம்பிகள் முதன்மை பெறுகின்றன. குறைந்த அலைவெண்களில் காந்தமற்ற கவசம் செயலற் றிருக்கும்போது தறுவாய் நிலை மாற்றல், ஓசைக் குறுக்கீடு மற்றும் தேவையற்ற ஒளிபரப்பலை கட்டுப் படுத்த உதவுகிறது. கவட்டாணி எஸ்.சுந்தரசீனிவாசன் இரு தண்டுகளை இணைப்பதற்கு ஓர் இணைப் பான் தேவைப்படுகிறது. இவ்விணைப்பில் ரு தண்டு களும் இழுவிசை (tension) அல்லது அழுத்துவிசை யில் (compression) இயங்கக்கூடும். இவ்விணைப்பு கட்டுறுதியானதன்று இரு இணைத் தண்டுகளும் அதன் அச்சியல்களாக வெவ்வேறு கோணங்களில் மாறுபடக் கவட்டாணி (clevis pin) உதவுகிறது. பொதுவாக முன்பின் நகர்வைச் சுழற்சியாக மாற்ற வும், சுழற்சியை முன்பின் நகர்வாக மாற்றி அமைக்க வும் இக்கவட்டாணி பயன்படுகிறது. எ.கா: உட்கனற்பொறி, நீராவிப்பொறியில் உள்ள உந்து இணைப்பு ஆகும். ஒற்றைக்கண் அமைப்புக் கொண்டுள்ள யைக் கொண்ட ஒரு தண்டு, முனை இரட்டைக்கண் கொண்டு நுகத்தடி போன்ற அல்லது கவட்டு முனை கொண்ட மற்றொரு தண்டில் பொருத்தப்படும். இரு இணைப்பு முனைகளையும் ஒருங்கே கொண்டு வர அவற்றின் துளைகள் வழியே படத்தில் காட்டிய படியே கவட்டாணி செருகப்படுகிறது. கவட்டாணி