பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/849

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவுதாரி 829

சுவரிமா எருதுவகையைச் சார்ந்த கவரிமா (yak) இந்தியாவி லும் திபேத்திலும் 15000-20000 அடி உயர மலைப் பகுதிகளில் வாழ்கிறது. இது மிகக் குளிர்ந்த நிலை யிலும் வசதியாக வாழும் விலங்குகளில் ஒன்று. இந்தியாவில் லடாக் பகுதியில் சங்க சென்மோ பள்ளத்தாக்கில் காணும் சுவரிமாவில் வீட்டுக்கவரிமா காட்டுக் கவரிமா என இருவகையுண்டு, காட்டுக் கவரிமா, மங்கோலிய மாடு னக்கலப்பால் வீட்டுக் கவரிமா உண்டாகிறது. இது திபேத்தியர் களுக்கு மிகவும் பயன்படும் விலங்காகும். எடை மிகுந்த பொருள்களையும் சுமக்கவல்ல இவை ஒன்றுக்கு 30 கி. மீ தொலைவு மலைப் பகுதிகளில் செல்லும். மனிதர்கள் பயணம் செய்யவும், கடிதங்கள் எடுத்துச் செல்லவும் வண்டி இழுக்கவும் இது பயன் படுகிறது. இதன் முரட்டு மயிர் கம்பளி நெய்யவும், மென்மயிர் ஆடை நெய்யவும் பயன்படும். கவரிமாவின் பால் சத்து மிகுந்த உணவாகும். இறைச்சி சுவையா யிருப்பதால் மக்கள் விரும்பியுண்கின்றனர். இதன் தோலைக் கொண்டு தொப்பி. காலணி, சட்டை முதலியன உருவாக்கப்படுகின்றன. நாள் காட்டுக் கவரிமா மிகவும் முரட்டுத்தனமான பெரிய விலங்காகும். பொதுவாக ஆறடி உயரமும் எழுநூறு கிலோ எடையும் கொண்டது. இருப்பினும் விரைவாக நடக்கக் கூடியது. வலிமையான கொம்பு 60-80 செ.மீ. நீளமுடையது. உயர்ந்த திமிலும், கவுதாரி 829 நேரான முதுகும் உடையது. கால்கள் தடித்தும் குட்டையாகவும் உள்ளன. உடல் முழுவதும் நீண்ட, அடர்த்தியான கறுப்பு அல்லது கரும்பழுப்பு நிற முரட்டு மயிர் மூடியிருக்கும். வயிற்றுப் பக்கம், விலா இடை, வால் முதலியவற்றிலுள்ள மயிர் மிக நீள மாகவும்,பட்டுப் போல் மென்மையாகவும் இருக்கும். முரட்டுத்தனம், கூரிய கொம்புகள், பருத்த உடல் இவற்றைக் கொண்டுள்ளமையால் வேட்டையாடு வதும் பழக்குவதும் எளிதல்ல. வயிறார உண்ட பின் நீரோடைகளில் புரளும் இது கூரிய மோப்ப ஆற்றல் கொண்டது. பொதுவாக து ஏப்ரல் மாதத்தில் குட்டி ஈனும். கவுதாரி கு.சம்பத் உள் பறவை வகுப்பைச் சேர்ந்த நியார்னித்திஸ் வகுப்பில் நியோநேத்தே மேல் வரிசையில் அடங்கும் ஒரு வரிசைக்குக் காலிஃபார்மிஸ் என்று பெயர். இந்த வரிசையில் காடைகள், மயில்கள், கவுதாரிகள், காட்டுக்கோழிகள், சுண்டாங்கோழிகள் ஆகிய பறவைகள் அடங்கும். காலிஃபார்மிஸ் வரிசையைச் சேர்ந்த பறவைகள் யாவும் தரையில் வாழ்பவை, இவை ஷிசோநேத்தஸ் அண்ண அமைப்புப் பெற் றுள்ளன. மார்பு எலும்பின் பின் விளிம்பில் அடிக் கலத் தட்டின் (keel) இருமருங்கிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு ஆழமான பிளவுகள் உள்ளன. அலகு பொதுவாகத் தடித்துக் கட்டையாக இருக்கும். கால்கள் நடப்பதற்கும் ஓடுவதற்கும் ஏற்ப அமைந்துள்ளன. கால்களின் கட்டைவிரல் பின்பக்கம் நீட்டிக் கொண்டிருக்கும். ஏனைய மூன்று விரல் களும் முன்பக்கம் நீட்டிக் கொண்டிருக்கும். விரல்களில் கெட்டியான கூர்நகங்கள் உள்ளன. வை தரையைத் தோண்டிக் கிளறி உணவு தேடு வதற்குப் பயன்படுகின்றன. பழம் தானியம், பூச்சி, புழு ஆகியவற்றை இப்பறவைகள் விரும்பி உண்ணு கின்றன. இறகுகள் குறுகிய வட்ட வடிவில் இருக்கும். ஆண் பறவைகளில் குதிமுள் (spur) காணப்படுகிறது. குரல்வளை எளிய அமைப்புடையது. பொதுவாக இப்பறவைகளின் தலையில் கொண்டை அல்லது கொம்பு போன்ற அமைப்புகள் இருக்கும். கால் கவுதாரிகள். இவை வேட்டைக்காரர்களால் விரும்பி வேட்டையாடப்படுகின்றன. இவை சிறு காடுகளிலும், புதர்களிலும், புல்வெளிகளிலும் மறைந்து தரையோடு தரையாக ஓடும். அறுவடைக் காலங்களில் தானியங்களை உண்ணுவதற்காக விளை நிலங்களில் கூடுகின்றன. விதைகளையும் தானியங்களையும் உணவாகக் கொள்ளும் இப்பறவை கள் சிறிதளவு பொடிக்கற்களையும் பெருமணல் சிறு