பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டமைப்புக்‌ கூறுபாடுகள்‌ 65

பெயர்ச்சிப் பிளவுகள். பாறைப் படிவம் வேறு பட்ட இயக்க ஆற்றலின் தாக்கத்தால் ஒரு தளத்தில் உடைந்து அத்தளச் சரிவின் திசையில் நழுவி இரு பகுதிகளாக இடம் பெயரும் உருவ அமைப்பைப் பெயர்ச்சிப் பிளவுகள் எனலாம். சில பெயர்ச்சிப் மிகக் குறைவாகவும் பிளவுகளின் தளப்பெயர்ச்சி வேறுசில பலநூறு மீட்டர் மிகுதியாகவும் இருக்க லாம். நிலக்கட்டமைப்பு இயலில் படிவுகளின் அமிழ் கோணமும் செவ்வமிழ்திசையும் (strike) அளந்து கணக்கிடப்படுவது போன்று, பெயர்ச்சிப் பிளவுக் கட்டமைப்புகளிலும் கணக்கிடலாம். பெயர்ச்சிப் பிளவுத் தளத்திற்கும், கிடைத்தளத்திற்கும் இடை யேயுள்ள கோண அளவு அமிழ்கோணம் எனப்படும். பெயர்ச்சிப் பிளவுத் தளத்திற்கும், பெயர்ச்சிப் பிள வுக்கு இணையான செங்குத்துத் தளத்திற்கும் இடை யேயுள்ள கோண அளவு மறுதலை அமிழ்கோணம் கட்டமைப்புக் கூறுபாடுகள் 65 (hade) எனப்படும். பெயர்ச்சிப் பிளவின் இரு பகுதி களில் பெயர்ச்சிப் பிளவுக்கு மேலுள்ள பகுதி தொங் கும் சுவர் என்றும், கீழுள்ள பகுதி தாங்கும் என்றும் குறிப்பிடப்படும். சுவர் பலவிடங்களில் பல் பெயர்ச்சிப் பிளவின் தளம் தனித்த ஒரு தளமாக அமைகின்றது. பிறவிடங்களில் பலநூறு மீட்டர் அகலத்திற்குப் பரவி நிற்கவும் செய்கின்றது. அவற்றைப் பெயர்ச்சிப் பிளவுப்பகுதி (fault zone) என்பர். இப்பகுதி நுண்ணிய பெயர்ச்சிப் பிளவுகளையோ, நொறுங்கிய கற் களையோ, மைலோனைட் படிவுகளையோ கொண் டிருக்கலாம். பெயர்ச்சிப் பிளவு தரைத் தளத்தைத் தொடும் கோட்டைப் பெயர்ச்சிப் பிளவுக்கோடு, பெயர்ச்சிப் பிளவுக் காட்சி, பெயர்ச்சிப்பிளவு வெளிப் பாடு (fault outcrop) என்பர். பெரும்பாலும் தரைத் (I) (2) அ அ இ 每 障 ஆ 杯 அ இ அ அ. க. 7- 5 படம் 13 1. செந்தன நகர்வுடையள 2. அச்சுச்சுழற்சி நகர்வுடையன