கழலை (மருத்துவம்) 833
களைச் சுரக்கும் தன்மை கொண்டவை. இதனால் இந்தக் கட்டிகள் தோன்றுகின்றன. கருப்பையை முழுவதுமாக நீக்குவதே சிறந்ததாகும். கருப்பையில் அடினோகார்சினோமா. இவை சுருப் பையின் சுரப்புத் தன்மையுள்ள புறப்டைத்திசுவி லிருந்து தோன்றுகின்றன. இவை கருப்பையின் நுனிப் பகுதியான கழுத்தில் (cervix) காணப்படுகின் றன. இது பத்து வயதுக்கு மேற்பட்ட நாய்களில் காணப் படுகிறது. தொடர்ந்து கெடு நாற்றமுள்ள கசிவு காணப்படும் அறிகுறியிலிருந்து இந்தக் கழலைக் கட்டிகள் உண்டாகியிருப்பதை அறியலாம். முன்ன தாகவே கண்டுபிடித்துக் கருப்பையை நீக்குவதே சிறந்த வழியாகும். கழலைக்கட்டிகளைக் கண்டுபிடிக்கும் முறைகள் இந்நோயை அறிகுறிகள், எக்ஸ்கதிர் ஆய்வு ஆகிய வற்றால் அறியலாம். மேலும் திசுக்களில் ஊடுருவும் தன்மை, கட்டிகளைச் சார்ந்த திசுக்களை அழிக்கும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்துத் தீவிரத்தைக் கணிக்க இயலும். கழலைக் கட்டிகளை நோய் குறியி யல் ஆய்வுகள் மூலமாக அவற்றின் தன்மை பற்றி ஆராய இயலும். இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை கள், நிணநீர், திசுக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து து கண்டுபிடிக்க இயலும். மருத்துவம். அறுவை மருத்துவம், வேதி மருத் துவம் ஆகிய மருத்துவ முறைகள் உள்ளன. கட்டி களை முழுவதுமாக அறுவை செய்து நீக்குவது மிகச் சிறந்ததாகும். சில சமயங்களில் பாப்பிலோமா போன்ற கட்டிகள் எவ்வித தானாகவே மறைந்துவிடுகின்றன. மருத்துவமின்றி பீட்டா கதிர்வீச்சு மருத்துவம். இம்மருத்துவம் உயிருக்கு ஆபத்தான, அறுவை மூலம் நீக்க முடியாத கட்டி களை நீக்கப் பயன்படுகிறது. மாடு, குதிரைகளின் கண்களில் நீக்கப் பயன்படுகிறது. கதிர்வீச்சு உள்ள கட்டிகளை வேதி மருத்துவம் (chemotherapy). இம்மருத்துவம் உயிருக்குக் கேடான கட்டிகளை நீக்க மனித மருத்து வத்தில் பயன்படுகிறது. இத்தகைய வேதி பொருள் கள் சில குறிப்பிட்ட நிலைகளில் செல்களைப் பிளவு படுத்தி வேலை செய்து அவற்றை மேலும் பெருகாமல் செய்கின்றன. பியூரின், பைரிடிமின் ஆகியன பயன் படுகின்றன. ஸ்டீராயிடு மருந்துகள், புரோட்டின் உருவாதலைத் தடுப்பதன் மூலம் செல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்குமாறு செய்கின்றன. இவ்வகை செல்களை சுட்டிகள் உள்ள மருந்துகள் கழலைக் மட்டுமல்லாது சாதாரண செல்களையும் அழிக்கும் திறன் கொண்டவை. ஆகவே இவற்றைக்கவனமாகப் பயன்படுத்த வேண்டும். எஸ். ரத்தினசாமி கழலை (மருத்துவம்) கழலை (மருத்துவம்) 833 இது உடலில் எந்த உறுப்பிலும், திசுவிலும் எழும் ஒரு வகை வீக்கம். இதில் உள்ள செல்கள், வீக்கம் உள்ள உறுப்பின் செல்களை ஒத்திருக்கும். எடுத்துக் காட்டாக, தோலில் உண்டாகும் கழலையின் செல்கள் தோல் செல்களை ஒத்திருக்கும். இது கழலையின் முக்கிய பண்புகளில் ஒன்றாகும். ஒரு வீக்கம் கழலையா இல்லையா என்பதை உறுப்பின் செல்கள் ஒத்திருப்பதைக் கொண்டு அறியலாம். கழலையில் உள்ள செல்கள் விரைவாகப் பல்கிப் பெருகும் தன்மையுள்ளவை. கழலையால் உடலுக்கு நலமில்லாவிட்டாலும் உடல் வளர்ச்சிக்குரிய ஊட்ட சத்தை உட்சுவர்ந்தே வளர்கிறது. தகுந்த மருத்துவம் உடனடியாகச் செய்யாவிடில் சூழலை வளர்ந்து கொண்டே இருக்கும். இதுவும் கழலையின் பண்பு களில் ஒன்று. கழலைச் செல்கள் பல்கிப் பெருகு வதற்கு இரத்தக்குழாய்களும், நிணநீர் நாளங்களும், உணர்ச்சி நரம்புகளும் உதவுகின்றன. நாட்பட்ட கழலையில் அழற்சியும் புண்ணும் ஏற்படும். கழலை மனிதர்களிடம் மட்டுமன்றிப் பிற முதுகெலும்புள்ள விலங்குகளிலும் தாவரங்களிலும் உண்டாகும். கழலை யால் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் விளைவு களையும் பொறுத்து அது தீங்கற்ற கழலை (benign. tumour) தீங்குறு கழலை (malignant tumour) என இரு வகையாகப் பிரிக்கப்படும். பொதுவாக, தீங்கற்ற கழலையே பெரும்பாலும் உண்டாகும். நாட்பட்ட தீங்குறு கழலைதான் புற்று (cancer) எனப்படுவது. பொதுவாக இது மிகச்சிறிய பயறு போலவோ, உருண்டையாகவோ இருக்கும். இயல்புக்கு மீறிய சில கழலை 15 கிலோ எடை உடையதாகவும் இருக்கும். சிறிய கழலை ஓரளவு வளர்ந்ததும் பின்பு வளராமல் நின்றுவிடும். இதன் முக்கிய இயல்புகளாவன: இக்கழலை, உண்டான உறுப்பு அல்லது திசுவைவிட்டு வேறு உறுப்புக்கோ திசுவுக்கோ அரித்துச் செல்லாது; இக்கழலையால் பொதுவாக உயிருக்கு ஆபத்து இல்லை; இக்கழலை வெவ்வேறு உறுப்புகளில் தனித்தனியாக உண்டாகும். விருந்து வேறொரு கழலை ஒரு கழலையிலி தில்லை. இது அறுவை செய்தபின் மீண்டும் உண்டாவ தில்லை. தற்கான அறுவை மருத்துவமும் எளிது. தீங்கற்ற கழலை. உண்டாவ தீங்குறு கழலை. நாட்பட்ட தீங்குறு கழலை புற்று எனப்படும். இதன் முக்கிய இயல்புகளாவன: து விரைவில் வளரும். நோயாளி மரணமடையும் வரை வளர்ந்து கொண்டேயிருக்கும். கழலை உண்டான உறுப்பிலிருந்து பிற உறுப்புகளையும் துளைத்துக் கொண்டு சென்று பரவித் தீங்கு செய்யும். சான்றாக, கருப்பையிலுண்டாகும் தீங்குறு கழலை தகுந்த மருத்துவம் செய்யாவிடில் குதம் வரை துளைத்துச் சென்று அங்கும் புற்று