பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/854

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

834 கழலை (மருத்துவம்‌)

834 கழலை (மருத்துவம்) உண்டாக்கும். இக்கழலைச் செல்கள் இரத்தக்குழாய் நிணநீர் நாளம் வழியாக வேறு உறுப்புகளுக்குச் சென்று அங்கே கழலை உண்டாக்கும். தீங்குறு கழலையென்று அறிந்தவுடன் அறுவை மூலம் கழலையை அகற்றாவிடில் மரணம் நேரிடும். ஒருசில தீங்கற்ற கழலை தோன்றியவுடனேயே தகுந்த மருத்துவம் செய்யாவிடில் பல ஆண்டு களுக்குப்பின் திடீரெனத் தீங்குறு கழலையாக மாறி விடலாம். எ.கா: காதடிச் சுரப்பிக் கழலை. காரணம். கழலை உண்டாவதற்குரிய மூலக் காரணம் இதுவரை முழுமையாக விளங்காவிடினும், பல் கருத்துக்கள் கூறப்படுகின்றன. கோஹன்ஹீம் என்பாரின் கூற்றுப்படி தாயின் கருப்பையில் கரு உண்டாகும் காலத்தில் சில வேளைகளில் தேவைக்கு மேல் உண்டாகும் சில செல்கள் பிற்காலத்தில் திடீ ரெனப் பெருகிக் கழலை உண்டாக்கலாம். ரெபார்ட் என்பாரின் கருத்துப்படி நோயற்ற நல்ல திசுக்களி லுள்ள செல்கள் சில வேலைகளில் காயமுறுவ தாலோ அழற்சியாலோ பிற செல்களினின்றும் பிரிந்து பின்னர் விரைவாகப் பெருகிக் கழலையை உண்டாக்குகின்றன. அண்மைக்கால ஆராய்ச்சியின் படி உடற்செயலில் ஏற்படும் கோளாறுகளின் விளை வாக இயற்கையான வளர்ச்சிக்குத் தடை ஏற்படுவ தால் கழலையுண்டாகிறது என்று தெரிகிறது. வகைகள், கழலைகளில் ஏற்படும் திசுக்களைப் பொறுத்து இது இணைப்புத்திசுக்கழலை, புறப்படலக் கழலை, அகப்படலக்கழலை மூவகைப்படும். இணைப் புத்திசுக்கழலையில் தீங்கு விளைவிப்பது சார்க்கோமா எனப்படும். தீங்கற்ற கழலை பல் வகைப்படும். நார்த்திசுக்கள் நிறைந்த நார்க்கழலை (fibroma), வழ வழப்பான திசு நிறைந்த மிக்சோமா நிணத்திசு நிறைந்த நிணக்கழலை (lipoma) எலும்புத்திசு நிறைந்த எலும்புக்கழலை (ostcoma), குருத் தெலும்புத் திசு நிறைந்த குருத்தெலும்புக்கழலை (chonrioma), கருப்பையிலும் இரைப்பை குடல், சிறு நீர்ப்பை ஆகியவற்றில் தோன்றும் தசைத் திசுக் கழலை, இயக்கு நரம்புகளில் தோன்றும் நரம்புக் கழலை, இரத்தக்குழாய் நிணநீர் நாளம் ஆகியவற்றில் தோன்றும் இரத்தக்கழலை (angioma) ஆகியவை. புறப்படைக் கழலையில் தீங்கு விளைவிப்பதற்குப் புற்று எனப் பெயர். தீங்கற்றவை பாப்பில்லோமா. அடினோமா ஆகும். உடலில் உண்டாகும் மருவிற்குப்