கழற்சி 835
பாப்பில்லோமா எனப்பெயர். சுரப்பிகளில் உண்டால தற்கு அடினோமா என்று பெயர். அகப்படலத் தீங்குறு கழலை புளூராவிலும், தீங்கற்ற கழலை தடிச் சுரப்பியிலும் உண்டாகின்றன. கழற்சி கா கு.சம்பத் காய் இதன் வேறு பெயர்கள், கழற்சி,குபேரசி, கொடிக் கழரசி, வஜ்ரபீஜம் என்பன ஆகும். இதன் சுழற்சிக்காய், கழற்காய், கெச்சைக்காய், கெச்சக்காயி, கழற்சிக்கொட்டை, களிச்சிக்காய் என்று குறிப்பிடப் படும். இதன் தாவரவியல் பெயர் சீசல்பினியா பாண்டுக் (Chesalpinia bandic) ஆகும். சி, சிரிஸ்டோ (C. crista) சி.பாண்டுசெல்லா (C.banducella) என்பவை பழைய பெயர்களாகும் இக்கொடி இந்தியா, பர்மா, ஸ்ரீலங்கா முதலிய நாடுகளில் குறிப்பாக வெப்பப் பகுதிகளிலும் கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலும் வளர்ந்திருப்பதைக் காணலாம். மலைப் பகுதிகளில் 750 மீட்டர் உயரம் வரை இக்கொடி வளரும். சிறிய பெரிய மரங்களின் மீதும் வேலிகளிலும் படர்ந்து வளர்ந்திருக்கும். கொடி. இது அகன்று படரும் கிளைகளுடைய பெரிய முட்கொடியாகும். இதன் கிளைகளின் மீதும் இலைக்காம்புகளிலும் நேராகவோ கொக்கிபோல் வளைந்தோ உள்ள கடினத்தன்மை வாய்ந்த மஞ்சள் நிற முள்களைக் காணலாம். காய்களின் மீது கம்பி போன்ற முள்கள் தோன்றியிருக்கும். 30-60 செ.மீ. நீளத்தில் இருக்கும். இரட்டைக் கூட்டிலை (bipinnate) சேர்ந்தவை. லைகள் லைகள் வகையைச் வை 1.5-3.5 செ.மீ × 1-2 செ.மீ. அளவில் இருக்கும். இலையின் அடிப்பரப்பில் சிறுசிறு மயிர் வளர்ந்திருக்கும். சிற்றிலையின் அடிப்பகுதி மழுங்கியதாகவும் (iruncate) வட்டமாகவும் ஓரம் முழுமையாகவும் இலைக்காம்பு 6.5 செ.மீ. நீளமாகவுமிருக்கும். இலையடிச் செதில்கள் இலைபோன்று பிளந்து இருக்கும். பூக்கள் நீண்ட மஞ்சரித் தண்டில் கதிர் போல் அடர்ந்திருக்கும். மஞ்சரி இலை கக்கத்தில் உண்டாகியிருக்கும். மஞ்சரி 15 செ.மீ. நீளமிருக்கும். மஞ்சரித்தண்டு 5 செ.மீ. நீளத்திலும் சிறு முள்களைப் பெற்றும் இருக்கும். பூக்கள் 1.5 செ.மீ. குறுக்களவில் இருக்கும். பூவடிச்செதில்கள் நீண்ட ஈட்டி வடிவிலும் 1.5-2 செ.மீ. அளவிலும் இருக்கும். பூக்காம்பு 0.5-1.5 செ.மீ. நீளத்திலிருக்கும். புல்லிவட்டம் குழாய் போன்று மணி வடிவத்திலும் 4 மி.மீ அளவிலும் கழற்சி 835 இருக்கும். புல்லி இதழ்கள் 5, சமமற்றவையாக நீண்டசதுர அல்லது தலைகீழ் முட்டைவடிவில் 0.8-1×0-5செ.மீ. அளவில் இருக்கும் அல்லி இதழ்கள் 5, மஞ்சள் நிறத்தில் தலைகீழ் ஈட்டி வடிவில் (oblanceolate) இருக்கும். மகரந்தத் தாள் 10 இருக்கும். மகரந்தத்தாள்கள் குறைவுற்று இருக்கும். இதன் அடிப்பகுதியில் சுரப்பிகள் இருக்கும். மகரந்தந்தாளின் நீளம் 4. 5-7 மி. மீ. இருக்கும். சூலகப்பை (ovary) உருண்டையாக இருக்கும். சூல்கள் இரண்டு இருக்கும். சூலகத்தண்டு சிறியதாக சிறுசிறு மயிரைப் பெற்று 4 மி.மீ. நீளத்தில் இருக்கும். சூலகமுடி தலை வடிவாக இருக்கும். க கனிகள் நீண்ட சதுர, தலைகீழ் முட்டை வடிவில் 8 4.5 செ.மீ. அளவில் இருக்கும். இதன் நுனியிலுள்ள அலகு 1 செ.மீ. நீளத்தில் இருக்கும். ஒவ்வொரு கனியிலும் ஒன்று அல்லது இரண்டு காய்கள் இருக்கும். காய்கள் 1.2.1.8 செ.மீ. விட்டத் தைக் கொண்டு உருண்டையாக இருக்கும். காய்களின் வெளியுறை கருஞ்சாம்பல் அல்லது காரீய நிறத்தில் கடினமாகவும், வழுவழுப்பாகவும், பளபளப்பாகவும் இருக்கும். கழற்சி விதைகளைக் கொண்டு அம்மானை விளையாடுவதுண்டு. மருத்துவப் பண்புகள். கழற்சிக் கொடியின் பட்டை, இலை, கொட்டையின் பருப்பு முதலியவை பலவகை களில் மருந்தாகப் பயனாகின்றன. கழற்சிக்காய்