பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/857

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழிமுக நுண்ணுயிரியல்‌ 837

கழிமுக நுண்ணுயிரியல் 831 வர, பல் இறுகும். பல்நோய் தீரும். விதையை வெண்கருவில் அரைத்துப் பற்றிட விரை வீக்கம் நீங்கும். விதையைத் தூளாக்கி முட்டையுடன் கலந்து, விளக்கெண்ணெய் அல்லது நெய் விட்டு அட்டு செய்து சாப்பிட விரை வீக்கம் நீங்கும். கழற்சிப் பருப்பு, கோழி முட்டைத்தோல், கருஞ்சீரகம் இவற்றைச் சம எடை எடுத்து நொச்சிச்சாறு விட்டரைத்துச் சீலையில் தடவித் திரிபோல் சுருட்டி. உலர்ந்தபின் கொளுத்தி ஆற்றிப் புகை பிடிக்க மேற் கூறிய தலைநோய் யாவும் நலமாகும். கழற்சி இலையுடன் சிறிது மிளகுப் பூண்டும் சேர்த்தரைத்து உண்ணலாம். அல்லது இதில் ஆமணக் கெண்ணெய் விட்டுக் குழப்பிக் குடித்து வரக் கர்ப்ப முண்டாகும். பத்தியமாயிருக்க வேண்டும். கழற்சிக் காய் வேரையரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு கோமயத்தில் கலக்கி முழுகியது முதல் மூன்றுநாளும் உட்கொண்டு வரக் கருதரிக்கும். தரிக்காவிடின் இவ் வாறே மறுமாதம் உட்கொள்ள, கர்ப்பந்தரிக்கும். அப்போது அவன் முகக்குறி பிள்ளைப் பெற்றவள் போலிருக்கும். கருப்புக் கழற்சிக் காயை ஆட்டின் தோலில் முடிந்து இடத் தொடையில் கட்டினால் உடனே பிரசவமாகும். புளியிலையை இடித்து 7.8 லிட்டர் நீரில் போட்டு, அதில் திரிகடுகு, இந்துப்பு, ஓமம், காந்தம், காயம், வெண்காரம், வெள்ளுள்ளி வகைக்கு 3.5 கிராம், வாளம் 35 கிராம். கழற்சிப்பருப்பு 17.5 கிராம் ஆகியவற்றைக் கிழிக்கட்டி வேகவைத்து மருந்துகளைக் கழுவி எருக்கம்பூச் சாற்றிலாட்டி, தேற்றாவிரைப் பிரமாணம் உருண்டை செய்து விளக் கெண்ணையில் ஒரு குளிகையை உரைத்து மூன்று நாள் பத்தியமாகக் கொடுக்கத் தீரும். கழற்சிவேர், சாரணை, கொடிவேலி, நொச்சி, நிலவாகை, கொன்றை, முருங்கை, ஆதண்டை, உகாய் வீழி, செம்முள்ளி இவற்றின் வேர்ப்பட்டை, சிவதை, பூண்டு, இஞ்சி, இந்துப்பு, சீந்தில் தண்டு, மிள ளகு, திப்பிலி வகைக்கு 35 கிராம் ஆகியவற்றை முடக்கொத்தான் சாறு விட்டரைத்து 1.3 லிட்டர் விளக்கெண்ணெயில் இட்டுக் கள்ளிப்பால் 4.4 கிராம் கூடவிட்டுக் காய்ச்சி வேளை ஒன்றிற்கு ஒரு கரண்டி வீதம் உட்கொள்ளத் தீரும். கழற்சி, முருங்கை, சிவன்வேம்பு, மூக்கரைச் சாரணை, கொடிவேலி இவற்றின் வேர்ப்பட்டை, வெள்ளுள்ளி, பெருங்காயம் வகைக்கு 7 மி.கி. 5.2 லிட்டர் நீரில் போட்டு 500 மில்லி லிட்டராக வற்ற வைத்து வேளை ஒன்றிற்கு 250 மி.லி. வீதம் ரண்டு நேரம் கொள்ள வயிற்று வலி தீரும். சே. பிரேமா கழித்தல் இரு மதிப்புகள். கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றின் வேறுபாட்டைக் காண்பது கழித்தல் விதியாகும். இரு மாணவர்கள் ஒரு பாடத்தில் 75,65 எனும் மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், ஒருவர் மற்ற வரை விட எவ்வளவு மிகுதியாகப் பெற்றுள்ளார். என்பதையோ எவ்வளவு குறைவாகப் பெற்றுள்ளார் என்பதையோ அறியக் கழித்தல் விதியைப் பயன் படுத்த வேண்டும். வேறுபாடு IO மதிப்பெண்கள் எனும்போது, 75-65=10 என்பதைக் காணக் கழித்தல் விதி பயன்படுகிறது. a, b என்பவை மிகை எண்களாயினும், -a,-b எனக் குறையெண்களாயி னும், கழித்தல் விதியை அவற்றிற்குப் பயன்படுத்த a-b என்றும் ( -ā)-( -b) என்றும் மதிப்பேற்கின்றன. கூட்டல் விதியைப் போன்றே இது, அறிவியல், கலைத் துறைகளில் பெருமளவில் பயன்படுகிறது. எம். அரவாண்டி கழிமுக நுண்ணுயிரியல் கழிமுகத்தில் வெதுவெதுப்பான வெப்பநிலை, குறை வான அலை, உப்புத்தன்மையுள்ள நீர், வளமான மண், சேறு சூழ்ந்த கலங்கல் நீர் ஆகியவை இருக்கும். அச்சூழ்நிலைக்கு ஏற்றவாறு நுண்ணுயிர் களும் வேறுபடும். காற்று மண்டலத்தில் காணப்படும் நீர்த்திவலைகளிலும், நிலத்திலுள்ள குளம், ஏரி ஆறு போன்ற பல்வேறு நீர்நிலைகளிலும் நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன. வானவெளி நீரில் காணப்படும் நுண்ணுயிர்கள் மழை பெய்யும்போது மழைத்துளி சுளுடன் கலந்து நிலத்தை அடைகின்றன. நிலத்தின் மேல் வழிந்தோடிச் செல்லும் நீர், நுண்ணுயிர்கள் ஓரிடத்திலிருந்து பிற இடங்களுக்குச் செல்ல வழி வகுக்கிறது. இவ்வாறு வழிந்தோடி வரும் நீர் ஆற்றில் சுழிமுகத்தில் கலக்கும்போது நுண்ணுயிர் களின் எண்ணிக்கை மாறுகிறது. கடலின் மிகப்பெரும் பரப்பின் காரணமாக ஆறு களின் மூலம் கடலில் வந்து கலக்கும் நுண்ணுயிர் களின் எண்ணிக்கை மிகக் குறைவாகக் காணப்படு கிறது. கடல்நீர் ஆற்றுநீராகச் சேருகின்ற கழி முகத்தில் உப்பின் அளவு ஆற்றுநீரைவிடக் கூடுவ தாலும் நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான உணவுச் சத்துகள் போதிய அளவில் கிடைக்காமை யாலும் அவை ஓரளவு அழிகின்றன. ஆயினும் இச் சூழ்நிலையிலும் வாழும் திறன் வாய்ந்த பல எண்ணிலடங்காத நுண்ணுயிரிகள் உயிருடன் உள்ளன. அவற்றின் மூலம் இனப்பெருக்கம் ஏற்பட்டு அவை பிற உயிரினங்களுக்கு உணவாகப் பயன்