கழிமுகம் 839
களாலும் கழிமுகத்தின் வளர்ச்சி உருவாகும். அடுத்து, நதி நீர், வேகமான நீரோட்டமும் அலைகளும் கொண்டு கடலுடன் கலக்கும்போது, மண்துகள்- கரை சல்கள் பெரிய பரப்பளவிற்குக் கடலில் பிரிந்து விடு கின்றன. இதனால், கழிமுகம் உருவாவது தடைப் படுகிறது. நதி நீரால் அடித்து வரப்படும் படிவுகள் பெரும் பாலும் கடலுடன் சேரும் இடத்தில் நீரோட்ட வேகம் குறைந்து கடலுடன் கலக்கிறது. நதி நீரின் அடர்த்தி குறைவாக இருக்குமானால், அதன் படிவு கள் கடலுடன் கலக்கும் இடத்திலேயே படிகின்றன. கடலுடன் இணையும் நதி நீரின் அடர்த்தி, கடல் நீரின் அடர்த்தியைவிடக் குறைவாக இருக்குமானால், நதிநீர்ப் படிவுகள் பரவலாக, நீண்ட தொலைவு வரை கரைகளிலேயே படிகின்றன. மாறாக, கடல் நீருடன் இணையும் நதி நீரின் அடர்த்தி, கடல்நீரை விட மிகுதியாக இருக்குமானால், குளிர்ந்த நுண் துகள்களுடன் கூடிய நீர், வெதுவெதுப்பான கடல் நீருடன் இணையும்போது அதன் படிவுகள் கடல் நீரின் அடித்தளத்தில் நன்கு படிகின்றன. சான்றாக லேக் மியாட்டில் படிந்துள்ள படிவுகள் 134 அடி தடிமனானவை. இது 120 கி.மீ தொலைவில் அமைந் துள்ள சுவர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் கொலராடோ நதியால் உருவாகியுள்ளது. . ஏறக்குறைய 1500 கி.மீ. தொலைவிலிருந்து அடித்து வரும் படிவுகளை உடைய அமேசான் நதி. கடலுடன் இணையும் இடத்தில், தான் அரித்து வரும் படிவுகளில் சம அளவை ஒரினாகோ கழிமுகத்தில் படியச் செய்கிறது. தென்கிழக்குக் கரீபியாவின் நீண்ட கடற்கரையின் படிவுகள் கடலலைகளின் வேகத்தா லும் நீரோட்டத்தாலும் உருவானவையாகும். வகை கழிமுகத்தின் உருவ அமைப்பை மூன்று யாகப் பிரிக்கலாம். அவற்றை மேற்படுகை (top set), இடைப்படுகை (fore set), அடிப்படுகை (bottom set) எனலாம். இவ்வகைப்படுத்தலை முதன்முதலாகக் கில்பர்ட் என்பார் கண்டறிந்தார். இது கழிமுகப் பகுதிக்கும், ஏரிநிலைப் பகுதிக்கும் பொருந்தும், கழிமுகத்தின் அமைப்பும், அதன் வளர்ச்சியும் அமைய, காலமும், ஏற்ற சூழ்நிலையும் இன்றியமை யாதவையாகும். தொடக்க கால வளர்ச்சியில், கழி முகத்தில் அதன் படிவுகள் அடுக்கடுக்காக, படுகை களாகக் கடலின் மேல்தளத்தில் படிந்து ஒரு சமமான சீரான சரிவை (slope) ருவாக்குகின்ற றன. கடலின் அடிமட்டத்தை நோக்கியவாறு இருக்கும் து கடலின் அடிப்படுகையாகக் கருதப்படுகிறது. படுகையை அடிப்படையாக வைத்தே கழிமுகம் உரு வாகிறது. பிற்கால வளர்ச்சியில். நதியால் அடித்து வரப்படும் படிவுகள், களிமண் துகள்கள் போன்றவை அடிப்படுகையின் மேல் படிகின்றன. அடிப்படுகையின் சாய்தளத்தைப் போலில்லாமல், செங்குத்தான இ கழிமுகம் 839 சரிவுடன் அமைந்திருக்கும் இப்படிவுகள் இடைப் படுகை எனப்படும். கழிமுகத்தின் வளர்ச்சி மேன் மேலும் உருப்பெறும்போது, நதி நீரில் ஏற்படும் பெரு வெள்ளத்தால் படிவுகள் மையப்படுகையில் படியும். அவை சீரான சாய்தளத்தை உருவாக்கும்போது மேற்படுகை எனப்படும் மேற்படுகை மெல்லிய தடிம னாக அமைந்திருக்கும். இதற்குச் சிறந்த சான்றாகக் சுங்கை நதியின் கழிமுகத்தைக் குறிப்பிடலாம். கழிமுகத்தின் நீரோட்டப் பள்ளத்தாக்குகள், கழிமுகத்தின் தோற்றம்,நதி நீரோட்டத்தின் இரு பக்கக் கரைகளில் அமைந்துள்ள மணற் பொதிகள் (sand levees) போன்றவற்றால் கழிமுகத்தின் உருவ அமைப்புகளை விளக்கலாம். இவை கடலுடன் இணைந்துள்ள பரந்த நிலப்பரப்பில் காணப்படும், மணல் மேடுகள் ஆகும். அடுத்து, படிவுகளில் காணப் படும் நுண்துகள்கள். களிமண் பகுதிகள். துணுக்குகள் ஆகியவை உள்ளன. அடுத்தது கரை உகலோட்டப் (littoral drift) பகுதியாகும். இது நதி நீரின் வேகத் தால் கடலில் உருவாகும் கரைப்பகுதி. நுண்துகள் கள். கடலலைகளின் நீரோட்டம், காற்றின் மாறு பாடு இவற்றைப் பொறுத்ததாகும். ஆற்றுநீர் கடல்நீருடன் கலப்பதால், உப்புத் தன்மையின் அளவு அடிக்கடி மாறுகிறது. கழிமுகங் களின் உப்புத்தன்மையைக் கொண்டு அவற்றை இரு வகையாகப் பிரிக்கலாம். நேர்முகக் கழிமுகங்கள். இவ்வகைக் கழிமுகங் களில், ஆறுகளின் மூலமும் மழையின் மூலமும் பெறப்படும் நன்னீரின் அளவு மிகுதி. ஆகையால் நீரின் மேல்மட்ட உப்புத்தன்மை கடல்நீரின் உப்புத் தன்மையைவிடக் குறைவாக இருக்கும். எதிர்முகக் கழிமுகங்கள். ஆறு, மழை இவற்றால் கடல், பெறும் நீரைவிட ஆவியாகும் நீரின் அளவு மிகுதியாவதால், நீர் மிகு உப்புத்தன்மையைப் பெறுகிறது. எ.கா: டெக்சாஸில் உள்ள மாட்ரே கழிமுகம். நன்னீரும் உப்புநீரும் இணைவதால், நீரில் சுழற்சி ஏற்பட்டு, இரண்டும் நன்கு கலக்கின்றன. இந்த நீர்க்கலப்பு, இருவகை நீரின் அடர்த்தியைப் பொறுத்தது. கடல்நீரின் அடர்த்தி. அதன் உப்புத் தன்மை, வெப்பம் ஆகியவற்றைப் பொறுத்து அமை கிறது. ஆனால் கழிமுகங்களில் உப்புத்தன்மை எப்போதும் மாறுதல் அடைந்து கொண்டும், வெப்பம் பெரிதும் மாறாமலும் இருக்கும். இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் கோடைக்காலத்தில் கடலில் கலக் கும் ஆறுகளில் நீர் மிகவும் குறைவாகவே உள்ளது. அப்போது மேல்மட்ட நீர் வெப்பமாக இருப்பதால் கறிமுசு நீரின் அடர்த்தியும் கடல்நீரின் அடர்த்தியும் மிகவும் மாறுபட்டுள்ளன. இரவில் வெப்பம் குறையும் போது இந்நிலை மாறுகிறது. குளிர்நாடுகளில் குளிர் காலத்தில் ஆற்றுநீர் பனிக்கட்டியாகி விடுவதால் கடலில் கலப்பதில்லை. நீரின் மேல்மட்டத்தில் உள்ள