பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/863

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழிமுகம்‌ 843

ஓரினாகோ படம் 5. ஒரினாகோ படிவுகள் 1 உயர்ந்த மேடுகள்; வண்டல் சமவெளி, மணற்பொதி வெளிப் கள், கால்வாய்; இ சதுப்பு நிலம், ஓதச்சமவெளி: இ கடற்கரை மணல் சமவெளி; தி கடற்கரைகள்; கழிமுகத்தளம்; புற மேற்படுகைகள் இ.அடிப்படுகைகள்; 9 முன்னர் இருந்த கடற் தளம். மிகப்பெரிய இவை ஆழமற்ற பகுதியில் அமைந்துள்ளன. மிசிசிபி நதியால் உருவாக்கப்பட்ட படிவுகள் 850 அடி (260 மீ.) தடிமனானவை. வை கடலின் ஆழமான பகுதியில் அமைந்துள்ளன. தடிமனாக உருவான படிவுகள், கீழ் உள்ள மென்மை யான படிவுகளை அவை அழுத்தும்போது, தாங்காமல் வளைய ஆழமான பகுதி தோன்றும். ரு சுமை இந்தியாவிலுள்ள கழிமுகங்களும் அவற்றின் மின் வளமும். இந்தியாவின் இரு கடற்கரையோரங்களிலும் பல கழிமுகங்கள் உள்ளன. இவற்றின் பரப்பளவு ஏழாயிரம் சதுர கிலோமீட்டர் ஆகும். இவை அனைத்தும் தடைச்சுவர்க் கழிமுகங்களாகும். தென் மேற்குப் பருவ மழையின்போது பெருமளவு நன்னீர் கடலுடன் கலப்பதால் அனைத்துக் கழிமுகங்களிலும் அச்சமயம் உப்புத்தன்மை குறைகிறது. மழை இல்லாத காலங்களில், உப்புத்தன்மை கடல்நீர் அளவிற்கு உயர்கிறது. எ.கா: ஹுக்னி-மாட்லா கழிமுகம். கங்கையின் முக்கிய கிளை நதியான ஹுக்ளி - கடலுடன் இணையுமிடமே இக்கழிமுகம். ஏறத்தாழ 2,340 கி.மீ. பரப்பளவுள்ள இது மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனச் சதுப்பு நிலக்காடு களிடையே உள்ளது. கழிமுகம் கடலுடன் இணையுமிடத்தில் உப்புத் தன்மை 32% ஆகவும் மறுமுனையில் 0.2% ஆகவும் காணப்படும். பல நுண்மிதவை உயிரிகளும் அவற்றை

கழிமுகம் 843 உணவாகக் கொண்டுள்ள மடவை, காவா சுத் தாழை. கொடுவா, கெழுத்தி போன்ற 172 வகை மீனினங்களும் இங்கு வாழ்கின்றன. கடல்மீன்கள் இடம் பெயர்ந்து ஆற்றில் முட்டையிடுவதற்கும் ஆற்று மீன்கள் கடலில் முட்டையிடுவதற்கும் இக் கழிமுகத்தையே பாதையாகப் பயன்படுத்துகின்றன. ஒரிசாவிலுள்ள மஹாநதிக் கழிமுகத்தில் கடல் பெருக்கு நீர்க் கழிமுகம் 42 கி.மீ. வரை பரவி யுள்ளது. இக்கழிமுகத்தில் மடவை, கொடுவா, கிழங்கான், காரை போன்ற மீன்கள் மிகுதியாக உள்ளன. சில்கா ஏரி. ஒரிசாவில், கடலுடன் தொடர்பு கொண்டுள்ள மிகபெரிய ஏரி சில்கா ஏரியாகும். கோடையில் இதன் பரப்பளவு 906 ச.கி.மீ, மழைக் காலத்தில் 1.165 ச.கி.மீ. ஆகும். இது ஒரு பெரிய வாய்க்காலாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. ஆண்டிற்கு 2,000-3,000 டன் மீன் ங்கு கிடைக் கிறது. கோதாவரிக் கழிமுகம். ஆந்திராவில் உள்ள கோதாவரிக் கழிமுகத்தின் பரப்பளவு 310ச.கி.மீ. தென்மேற்குப் பருவமழையின்போது இக்கழிமுக நீர் நன்னீராக மாறிவிடுகிறது. இங்கு ஆண்டிற்கு 5,000 டன் இறாலும், 185 டன் மீன்களும் கிடைக்கின்றன. பழவேற்காட்டுக் கழிமுகம். தென் ஆந்திராவிலும், வட தமிழ்நாட்டிலும் உள்ள பழவேற்காட்டுக் கழி முகத்தின் பரப்பளவு 777ச. கி.மீ. கடல்நீர்ப் பெருக்கம் குறைவாகவேயுள்ள இந்த ஏரியும் வங்காள விரிகுடா வில் கலக்கிறது. 65மீனினங்கள் உள்ள இக்கழிமுகத் தில் ஆ ஆண்டிற்கு ஏறக்குறைய 2,750 டன் மீன் கிடைக்கிறது. காவேரிக் கழிமுகம். தமிழகத்தில் கடலுடன் இணையும் காவேரியின் கழிமுகங்களில் கழுவேலி. பெண்ணையாறு, கெடிலம், வெள்ளாறு, கிள்ளை. கொள்ளிடம் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றுள் வெள்ளாறு கழிமுகத்தைப் பற்றிப் பெரு மளவில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.இறால், மடவை, காரை, கருத்தாழை, கெழுத்தி போன்ற மீன்களும் ஆண்டிற்கு ஏறக்குறைய முப்பது கிடைக்கும். இவை தவிர அடையாறு, போன்ற இடங்களிலுள்ள கழிமுகங்களும் தமிழகத்தி லுள்ள குறிப்பிடத்தக்க கழிமுகங்களாகும். டன் எண்ணூர் கேரளக் கழிமுகம். கேரளத்தில் சிறு ஆறுகள். ஏரிகள், காயல்கள் பல இடங்களில் ஒன்று சேர்ந்து அரபிக் கடலில் கலக்கின்றன. அவற்றின் மொத்தப் பரப்பு 500 ச. கி.மீ. இவற்றிலிருந்து ஆண்டிற்கு 15, 000 டன் மீன்களும், இறால்களும் பிடிக்கப் படுகின்றன. இவற்றுள் 60-70% இறாலும், 11% மடவையும் 9 % கெழுத்தியும் ஆகும். கேரளாவின் கழிமுகங்களுள் 256 ச. கி. மீ. பரப்