844 கழிமுள்ளி
844 கழிமுள்ளி பளவுள்ள வேம்பாடு ஏரி மிகவும் பெரியது. இதன் வடபகுதியைக் கொச்சிக் கழிமுகம் என்றும், தென் பகுதியை வேம்பநாடு என்றும் கூறுகின்றனர். கொச்சி யில் இந்த ஏரி 450 மீட்டர் அகலமுடன் உள்ளது. அது கடலில் கலக்குமிடத்தில் 15 மீட்டர் ஆழத்துடன் உள்ளது. மண்டோனி, இவை தவிர சுவாரிக் கழிமுகங்கள் கோவாக் சுடற்கரையிலும் நர்மதா, தபதிக் கழிமுகங்கள் குஜராத்திலும் அரேபியக் கடலில் கலக்கின்றன. கழிமுகத்தின் விளைவுகள். கல்கத்தா, வெனிஸ், சான்ங்கி, அலெக்ஸாண்டிட்ரியா, நியூஆர்வின்ஸ் போன்றவை கழிமுகங்களில் அமைந்துள்ள பெரிய நகரங்களாகும். கழிமுகத்தில் காணப்படும் பல நீர் வழிகள் நகரம் உருவாவதற்கு மிக இடையூறாக இருக்கும். மணற்பொதிகளில் உயர்ந்த கட்டடங் களைக் கட்ட முடியாத சூழ்நிலைகள் உருவாகின்றன. கழிமுகத்தில் உருவாகும் படிவுகள் நன்கு கெட்டியாக மாற, அதாலது 5 அடிப்படிவுகள் திண்மையாக மாறு வதற்கு ஒரு நூற்றாண்டுக் காலம் வரை தேவைப்படு கிறது. கழிமுகத்தில் வடிகால் வசதி குறைவு. மேலும் கழிமுகத்தில் எப்போதும் பெருவெள்ளத்தை எதிர் பார்க்கும் சூழ்நிலை உருவாகிறது. புயலாலோ, கடற் சூறாவளியாலோ சூழ்நிலையை உருவாக்கும் கழிமுகத் தில் அமைந்துள்ள மைய, பெரிய நீர்வழியைக் கப்பல் போக்குவரத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் இம்மைய நீர்வழி, நதியில் ஏற்படும் பெரு வெள்ளத்தால், நீர்வழிப் பாதையும் மாறலாம். கழிமுகத்தின் பயன்கள். இந்தியாவில் கழிமுகங் களிலிருந்தும், மீன் வளர்ப்பின் மூலமும் ஆண்டிற்கு 75. 000 டன் மீன் கிடைக்கிறது. இது தற்போதைய மொத்த மீன் உற்பத்தியில் 25% ஆகும். கழிமுகம் நீர் மிகு ஆக்க வளம் கொண்டுள்ளதால், அதைத் தகுந்த முறையில் பயன்படுத்தி மீன் உற்பத்தியைப் பெருக்க வாய்ப்புள்ளது.பல கடல்மீன்களும், ஆற்று மீன்களும், உணவு தேடவும், முட்டையிட்டு இனத்தைப் பெருக் கவும் கழிமுகங்களை நாடி வருகின்றன. கழிமுகங்கள், துறைமுகங்கள் அமைவதற்கு ஏற்றவாறு இருப்பதால் அவற்றைச் சுற்றி வணிகமும், தொழிற்சாலைகளும் பெருகி வருகின்றன. அதனால் அவற்றின் இயற்கை அமைப்பும், வளமும் குன்றிச் சுற்றுப்புறத் தூய்மைக் கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. கழிமுள்ளி எஸ்.சுதர்சன் வி. விவேகானந்தன் இதன் வேறுபெயர் தாழை (pondanus odoratissimus) என்பதாகும். இதன் அடிமாம் வளைவாகக் காணப் உண்டு. படும். கடற்கரை, குளம், நீரோடைகளின் ஓரங்களில் வளர்வதால் முட்டுவேர் (sticet roots) கீழே விழாமல் மரத்தைக் காக்கிறது. நீண்ட இலையின் ஓரத்தில் கூரிய முன்னோக்கி வளைந்த முள்களும் நடு நரம்பில் பின்னோக்கி வளைந்த முள்களும் உள்ளன. தாழையின் பூ. பல பூக்கள் சேர்ந்த பூங்கொத்தாகும். ஆண் பூ, பெண் பூ என்று தனித்தனியாக அளவற்ற மகரந்தத் தூள்கள் ஆண் பூவில் தோன்றுவ தால் காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெற ஏதுவாகிறது. பூவின் கவர்ச்சிமிக்க பூவடிச் செதில் களும், பூச்சிகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடக்க உதவுகின்றன. தாழையின் கனி அன்னாசிப்பழம் போன்ற திரள் கனியாகும். தாழையின் பூ, இலை, வேர் இவற்றைப் பல நோய்களை நீக்கப்பயன்படுத்து கின்றனர். தாழம்பூவிலிருந்து நறுமணமிக்க தைலம் தயாரிக்கப்படுகிறது. . ஆண்பூ. முட்டுவேர் பெண்பூ தாழை அந்தமான் கடற்கரையில் மிகுந்தும் குளம் நீரோடைகளின் ஓரங்களில் குறைந்தும் காணப்படு கிறது. அலைகள் மோதுவதால் மணல் பறிக்கப்படும். அப்போது முட்டுவேர்களே மரத்தைத் தாங்குகின்றன. கட்டிகளைப் போக்குவதற்கும் குட்டத்தை நீக்கு வதற்கும் உடம்பின் வெப்பத்தைக் குறைப்பதற்கும் தாழை இலை பயன்படும். பூவிலிருந்து நறுமணத் தைலம் தயாரிக்கலாம். சிறுநீரக நோயைப் போக்கப் பழம் பயன்படுகிறது. தலைவலி, வெண்குட்டம் இவற்றைப் போக்க மகரந்தத்தூள் பயன்படும். பூவிலிருந்தும் வேரிலிருந்தும் எண்ணெய் தயாரிக்கப்