கழிவு நீக்கம், கதிரியக்க 845
படுகிறது. தாழையின் இலை பயன்படுகிறது. குடை தயாரிக்கப் மு. ராசாங்கம் கழிவு உறுப்புகள் உடலில் ஏற்படும் பல்வேறு வேதி மாற்றங்களாலும். செரிமான மண்டலத்தாலும் பல கழிவுப் பொருள்கள் உண்டாகின்றன. இவை வெளியேற்றப்படாவிடில் பல்வேறு நோய்கள் உண்டாகும். மூச்சு விடுவதால் இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு நுரையீரல் வழியே வெளியேற்றப்படுகிறது. சுரப்பிகள், தோலின் வழியே வியர்வையை வெளியேற்றி உடலைக் குளிரச் செய்வதோடு தேவையற்ற நீரையும் வெளியேற்று கின்றன. இரத்தத்தில் உள்ள பல்வேறு கழிவுப் பொருள் மற்றும் மிகுதியான நீர் ஆகியவை உடலின் முக்கிய உறுப்பாகிய சிறுநீரகத்தின் வழியே வெளி யேற்றப்படும். இதனால் இரத்தத்தின் வேதித் தன்மை மாறாமல் உள்ளது. சிறுநீரகத்தின் முக்கிய பணிகளில் ஒன்றான சிறு நீரைப் பிரித்தெடுப்பது கிளோமருலஸ் என்னும் பகுதி யில் நடைபெறுகிறது. நாளொன்றுக்கு ஏறக்குறைய 14 லிட்டர் சிறுநீர் பிரித்தெடுக்கப்படுகிறது. அடுத்து நாளப்பகுதியில் பிரித்தெடுத்த சிறுநீரில் ஒரு பகுதி நீரையும், குறிப்பிட்ட அயனிகளையும் மீண்டும் உள்ளேற்கிறது. நாளச்செல் இரத்தத்தின் கார, அமிலத் தன்மையைப் பொறுத்து ஹைட்-ரஜன் மற்றும் அம்மோனியாவைச் சிறுநீரில் சுரக்கிறது. இறுதியாக நாளும் 1.5 லிட்டர் சிறுநீர், சிறுநீர்ப் பையை அடைகிறது. இது பிட்டியூட்டரி சுரப்பியின் சுரப்பாகிய ஆன்ட்டிடையூரடிக் ஹார்மோனின் (ADH) கட்டுப்பாட்டில் உள்ளது. இதன்மூலம் குளிர் காலத்தில் மிகுதியான சிறுநீரும், வெயில் காலத்தில் அளவு குறைந்த - அடர்த்தி மிகுந்த சிறுநீரும் வெளி யேற்றப்படுகின்றன. காண்க: சிறுநீரகம், தோல், நுரையீரல் -மா.ஜெ. ஃபிரெடரிக் ஜோசப் கழிவு நீக்கம், கதிரியக்க அணு ஆற்றல் ஆற்றல் கழிவுகளை அழிப்பது எளிதன்று. கதிரியக்க கழிவுநீக்கச் செயல்முறையில் பல ஆய்வு கள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் துவரை முழுமையான பயன் கிட்டவில்லை. அணு ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்துவதில் கதிரியக்கக் கழிவு ல் கழிவு நீக்கம், கதிரியக்க 845 நீக்கம் முக்கிய காரணியாக உள்ளது. வெயின்பர்க், ஹேமாண்ட் என்போர்தம் கூற்றுப்படி கதிரியக்கத் தால் அளவற்ற ஆற்றல் பெறப்பட்டாலும் இப்பெரும் ஆற்றல் உற்பத்தி, சூழ்நிலைக் கேடு ஏற்படவும் காரணமாகும். அணு ஆற்றலை ஆக்க வேலை களுக்குப் பயன்படுத்தினாலும் அதனால் உண்டாகும் கழிவுப் பொருள்களும் அதை அழிக்க எடுக்கும் முயற்சிகளும் சூழ்நிலையை மாசுறச் செய்கின்றன. கதிரியக்கக் கழிவுகள் மூன்று வகைப்படும். உயர் மட்டக் கழிவுகள், திண்ம, நீர்ம கதிரியக்கக் கழிவுகளைப் பாதுகாப்புடன் வைக்க வேண்டும். உயிர் மண்டலத்தில் (biosphere) இவை வெளிவிடப் பட்டால் மிக ஆபத்தான விளைவுகள் ஏற்படும். ஒரு டன் அணு எரிபொருளிலிருந்து 100 காலன் உயர்மட்டக்கழிவு (high level waste) உண்டாகிறது. இக்கழிவுகள் நிலத்தடித் தொட்டிகளில் தேக்கி வைக்கப்படுகின்றன. இவற்றின்சேமிப்பு தற்காலத்தில் பல மடங்கு பெருகியுள்ளது. இதற்கு அணு ஆற்றல் உற்பத்தி மிகுதியானதே காரணமாகும். மிகையான கழிவுகளைத் தேக்கி வைப்பதைவிட அவற்றை மந்தத் திண்மங்களாக மாற்றி ஆழ்பள்ளங்களில் புதைத்து விடுவதாலும், திரவ திண்ம நிலைக் கழிவு களை ஆழ்மட்ட உப்புச் சுரங்கங்களில் ட்டு மூடி விடுவதாலும் கதிரியக்கக் கழிவால் விளையும் தீமையைத் தவிர்க்கலாம். உயர்மட்டக் கழிவுகளி லிருந்து வெளிவரும் வெப்பம் மிகவும் தீங்கானது. வேளைகளில் உப்புச் சுரங்கங்களில் சுவரை உருகச் செய்யும் அளவுக்கு வெப்பம் வெளிவரும். புளிப்பிளவுகளில் இக்கழிவுகளைச் செலுத்தினால் நில அதிர்வும் உண்டாகும். சில தாழ்மட்டக் கழிவுகள். குறைந்த கதிரியக்கம் உள்ள திண்ம,நீர்ம, வாயுக்கழிவுகளும் நன்றாக மூடி வைக்கப்பட வேண்டும். உயிர் மண்டலத்தில் வாழும் பல்வேறு உயிரினங்களிடையே ஏற்படும் உணவுத் தொடர் சீர்நிலை கெடாமல் இருக்க இக்கழிவுகள் சிறிது சிறிதாக வெளியேற்றப்பட வேண்டும். இடைமட்டக் கழிவுகள். இவை தேக்கி வைத் துள்ள இடத்தைப் பாழ்படுத்தக்கூடிய அளவுக்கு உயர் கதிரியக்கத்தைக் கொண்டனவாகவும் ஆனால் உயர்மட்டக் கழிவுகளிலிருந்து தனிப்படுத்தி இடை மட்டக் கழிவுகளாக வெளியே றுமாறும் உள்ளன. அணு ஆற்றல் உற்பத்தியில் பயன்படும் யுரேனியம் எரிபொருள் சுழற்சியில் பல படிகள் உள்ளன. அவை: சுனிமம் வெட்டியெடுத்தல், பிரித்தெடுத்தல், தூய் மைப்படுத்தல், யுரேனியம்-235 இன் அளவைச் செறி வூட்டல், அணு எரிபொருள் மூலக்கூறை உண்டாக்கு தல், அணு உலையில் அணு எரிபொருளை எரித்தல். பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மீளப் பயன்படுத் தல், கழிவுகளைப் புதைத்தல் ஆகியன. இவற்றில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள்களிலிருந்து பிளவு