848 கழிவுநீர் அகற்றல்
848 கழிவுநீர் அகற்றல் முறை தேவைப்படுகிறது. தனியான ஈரமான கிணறு களில் கழிவுநீரும், உலர்ந்த கிணறுகளில் கழிவுநீர் இறைப்பான்களும் நிறுவப்படுகின்றன. தனித் சிறிய கழிவு நீரேற்று நிலையங்கள். தொகுதியாக இயங்குகின்றன. மேலும் இது தன்னி யக்க முறையில் இயங்குகிறது. காப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட வேண்டும் பெரிய நிலையங் களில் மைய விலக்குக் கழிவுநீர் இறைப்பான்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. சிறிய நிலை யங்களில் வளி வெளியேற்றுத் தொகுதிகள் நிறுவப் படுகின்றன. கழிவுநீரை ஆய்தல். கழிவுநீர் என்பது குறைந்த அளவு கழிவுகளைக் கொண்ட நீராகும். இக்கழிவு களின் விளைவுகளை அறிந்து கொள்வதற்கு ஆய்வு முறைகள் தேவைப்படுகின்றன. கழிவு நீரின் தன்மை கள், உட்கூறு, நிலை ஆகியவற்றைக் கண்டறி வதற்குப் பலவகை ஆய்வுகள் பயன்படுகின்றன. உள்ளட க்கம் சான்றாகப் புறநிலை ஆய்வு, திண்ம கண்டறிதல். கரிமப் பொருளின் ஆக்சிஜன் தேவையை ஆய்வுகள் மூலம் கண்டறிதல், வேதி மற்றும் நுண்ணு யிர் ஆய்வுகள், நுண்ணோக்கியால் ஆய்தல் ஆகிய வற்றைக் குறிப்பிடலாம். நாற்றம்,நிறம், வெப்பநிலை மற்றும் கலங்கல் (turbidity) ஆகியவற்றை அறிவதற்குப் புறநிலை ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இயல்பான புதிய கழிவுநீர் சாம்பல் நிறத்திலும், சிறிது நாற்ற முடனும், ஒளி ஊடுருவாத் தன்மை பெற்றும், நீரை விடச் சிறிது உயர் வெப்பநிலை பெற்றும் கரிமப் பொருள்களின் வேதிப்பிரிகையால், கழிவுநீர் கறுத்து அழுகி நாற்றமடிக்கும். எச்சம் வகை, உள்ளது. கழிவு வடிகட்டப் அல்லது திண்மப்பொருள்களுக்கான ஆய்வுகள், திண்மப் பொருள்களின் நீரின் வலிமை, திண்மப் பொருள்களின் புறநிலை (physical state) ஆகியவற்றை அறிவதற்கு உதவு கின்றன. மொத்தத் திண்மத்தைக் கண்டறியும்போது மிதக்கும் திண்மங்கள் (suspended solids), கரைந்த பொருள்கள் (dissolved solids) ஆகியவையும் அறியப் படுகின்றன. கழிவுநீரின் ஒரு பகுதி படுகிறது. வடிகட்டும்போது தங்கும் பொருள்களைக் காய வைத்து, மிதக்கும் தூள்களின் அளவு கிடப்படுகிறது. வடிகட்டிய நீரை நீராவியாக்குவதன் மூலம் கரைந்த பொருள்களின் அளவைக் காணலாம். திண்மங்களின் எச்சத்தைக் கரிமப் பொருள்கள் காற்றாகும் வரை சூடுபடுத்துவதால், நிலையான திண்மத்திலிருந்து ஆவியாகும் திண்மப் பொருள்கள் (volatile solids) பிரிகின்றன. எரிப்பதால் ஏற்படும் இழப்பு ஆவியாகும் திண்மப் பொருள்கள் அல்லது கரிமப் பொருளின் அளவைக் குறிக்கும். கணக் உயர் எடையுடைய மிதக்கும் தூள்களின் ஒரு ச பகுதி இம்ஃகாப் கூம்பில் (imhoff cone) அளக்கப் படுகிறது. கரிமப் பொருள்களுக்கான ஆய்வுகள், சுழிவுநீரின் ஆக்சிஜன் தேவை, வேதி ஆக்சிஜன் தேவை (chemical oxygen demand). ஆக்சிஜன் நுகர்வு ஆய்வு, சார்பு நிலைப்பு ஆய்வு ஆகியவை கரிமப் பொருள்களுக்கான ஆய்வுகளில் அடங்கும். கழிவு நீரில் உள்ள நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. நிலையான வெப்பநிலையில் குறிப் பிட்ட நேரத்தில், கரிமப் பொருளில் ஏற்படும் வேதிப் பிரிகையில் கரைந்த ஆக்சிஜனின் தேவை அளவை உயிர்வேதி ஆக்சிஜன் (BOD) தேவை ஆய்வு கணக்கிடு கிறது. 20° C இல் ஐந்து நாளுக்குக் குறிப்பிட்ட அளவு கள் அளக்கப்படுகின்றன. இது கழிவுநீரின் வலிமையை (sewage strength) அறிவதற்குச் சிறந்த முறையாகும். கழிவுநீரில், பொட்டாசியம் டைக்குரோமேட் போன்ற ஆக்சிஜனேற்றியின் முன்னிலையில் சூடேற்றப்படு கிறது. ஆக்சிஜனின் தேவையால். வேதிச் செரிமானம் ஏற்பட்டு அனைத்துக் கிருமிகளும் அழிகின்றன. இந்த ஆய்வுகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. ஆக்சிஜன்நுகர்வு ஆய்வு பொட்டாசியம் டை டைக்குரோ மைட்டை ஆக்சிஜனேற்றியாகப் பயன்படுத்துகிறது. நுண்ணுயிர் ஆய்வுகள், கழிவுநீரில் நுண்ணுயிர் கள் உள்ளனவா என்று அறிவதற்கு மேற்கொள்ளப் படுகின்றன. வெப்ப இரத்த விலங்குகளின் குடலில் இந்த நுண்ணுயிர்கள் உள்ளன. மாசு நீர், கழிவுநீர் ஆகியவற்றில் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களைக் கண்டறிவதற்குச் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன. நுண்ணோக்கி ஆய்வுகள் மூலக் கழிவுநீரில் செய்யப்படுவதில்லை. ஆல்கே. முன்னுயிரி (protozoa), பாக்டீரியா, பூஞ்சை,புழுக்கள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகள் தேவைப்பட்டால் நடத்தப்படுகின்றன. கள் கழிவுநீர் அகற்றல் ஈ. சரசவாணி வீடு. தொழிலகம், அலுவலகம் போன்றவற்றில் அன்றாடம் மனிதனின் இயல்பான வாழ்க்கையால் தோன்றும் நீர்மநிலைக் கழிவுகளை அப்புறப்படுத்தும் முறையே கழிவுநீர் அகற்றம் (sewage diposal) எனப் படும். நாகரிக வளர்ச்சியாலும், மக்கள் தொகைப் பெருக்கத்தாலும் கழிவுநீரின் அளவு ஒவ்வோர் ஆண்டும் பெருகி வருகிறது. இந்நீர்மநிலைக் கழிவு களை முறையாக அகற்றாவிடில், நீரால் பரப்பப்படும் நோய்கள் உண்டாகும். கழிவுநீர் அகற்ற முறைகள்