கழிவுநீர் அகற்றல் 849
பெரும்பாலும் மூன்று முறைகளில் அடங்கு கின்றன. அருகாமையில் உள்ள நீர்நிலையில் கலத்தல், அழுகுத்தொட்டி (septic tank), காயல் (lagoon) ஆகிய அமைப்புகளைப் பயன்படுத்தித் திருத்துதல், விளைநிலத்திற்கு உரமாக மறுசுழற்சி (recycling) செய்தல். கழிவு நீரை அகற்றுவதற்கும், மாசகற்றம் செய்வ தற்கும் முன்பாக அதன் பண்புகளை அறிதல் வேண்டும். கழிவுநீரில் 99.9% நீரேயாயினும், மீதமுள்ள பொருள்கள் பொதுநலத்திற்கு ஊ றுவிளைவிக்கக் கூடியவையாகும். ஹைட்ரஜன் சல்ஃபைடின் நெடி யும் கறுப்பு நிறமும் கொண்ட பல நாள்கள் தேங்கிய கழிவுநீர் அருவருப்புத் தருகிறது. கழிவுநீரின் இயைபு (composition) பின்வருமாறு இருக்கும்: (மி.கி./லி) கரைந்த ஆக்சிஜன் மிகி.லி. Lo X தெவிட்ட நிலை கரைந்த ஆக்சிஜன் படம் 1. நீரோடைகளில் ஆக்சிஜன் குறைவு மற்றும் உயிர் - வேதி ஆக்சிஜன் தேவையை நீக்குதல். மொத்த சிதறிய திண்மங்கள் = 100-350 எளிதில் ஆவியாகும் திண்மங்கள் = 75-250 (biochemical உயிர்வேதி ஆக்சிஜன் தேவை oxygen demand or BOD) = 100-400. வேதி ஆக்சிஜன் தேவை (chemical oxygen demand or COD) = 175-600 மொத்த கரிம வகைக் கார்பன் (TOC) =100-400. அமோனியாவகை - நைட்ரஜன் = 5-20 கரியவகை - நைட்ரஜன் = 8-40 பாஸ்பேட் வகை = 7-20 இவை தவிர ஒரு மி.லி. இல் 500.000-5,000,000 வரை நுண்ணுயிர்கள் இடம் பெற்றுள்ளன. சூழலியல் பொறியியலார் பாக்டீரியாக்களைக் கணக்கிடுவ தில்லை. ஆனால் நீரில் சிதறிய திண்மப் பொருளை எடையிலிருந்து கணக்கிடுகின்றனர். VOL7 கழிவுநீர் அகற்றல் 849 ஒரு நீர்நிலை, கழிவுநீரால் எந்த அளவுக்குப் பாதிப்பு அடைந்துள்ளது என அறிவதற்கு உயிர் வேதி ஆக்சிஜன் தேவை என்னும் துணையலகே சிறந்ததாகும். உயிர்வேதி ஆக்சிஜன் தேவை அல்லது உ.ஆ தே. என்பது நீரில் கரைந்து, மிதந்து சிதறி யுள்ள கரிமப் பொருள்களும், பாக்டீரியாக்களும் முறையே ஆக்சிஜனேற்றத்திற்கும் வளர்சிதை மாற்றத் திற்கும் வேண்டும் ஆக்சிஜன் அளவு; இந்த அளவு கூடக்கூட, நீர்நிலைகளில் வாழும் மீன்போன்ற உயிரினங்களுக்கு ஆக்சிஜன் போதுமான அளவு கிடைக்காமல் இறக்கக்கூடும். எனவே, கழிவு நீரில்உ.ஆ.தே. ஐக் குறைப்பதே கழிவுநீர் திருத்த முறைகளின் முதன்மையான நோக்கமாகும். நீர் நிலைகளில் கலத்தல். ஆறு போன்று ஓடும் நீரில் கழிவுகளைக் கலத்தல் உலகெங்கும் பின்பற்றப் படும் தவறான வழிமுறையாகும். ஆற்றில் கலக்கப் பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும்போது. ஆற்று ஓட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் நீர் மீண்டும் தூய்மையாக இருப்பதைக் காணலாம். இவ்வியக்கத்திற்கு ஆற்றின் தன் தூய்மையாதல் (self purification) எனப் பெயர். தன் தூய்மையாதலின் காரணிகளாவன: கூடுத விளாவல். கரைந்த நிலை ஆக்சிஜனைக் லாகப் பெற்ற நீரை நிறைந்த அளவில் சேர்த்தல். நீரோட்டம், கழிவு நீரை ஆற்று நீருடன் நன்கு கலக்க உதவி, ஓரிடத்திலும் செறிவு கூடுதலாகாமல் பாதுகாக்கிறது. ஆற்று நீரோட்டத்தின் விரைவு: கழிவு நீரில் காற்றூட்டத்தை (aeration) மேம்படுத்து கிறது: பழைய நிலைக்கு (தூய நிலைக்கு) மீட்சியை விரைவில் அடையச் செய்கிறது. ஆனால் அதே நேரத்தில், நீண்ட தொலைவுக்கு ஆற்றில் கழிவு தங்கும் நிலை ஏற்படுகிறது. சுழல்களும், காயல்களும் கழிவு நீரில் சிதறிய திண்மங்களைப் படியச்செய்து கரைகளில் கசடு (sludge) தேங்கும் நிலையை உருவாக்கலாம். நாள டைவில் இது தாங்கொணா நெடி வீசும். விளா வலுக்கு முன், விளாவலின் அளவுக்குத் தகுந்தாற் போல் கழிவு நீரைத் திருத்த வேண்டும். 500 மடங் குக்கு மேல் விளாவுவதாக இருந்தால், கழிவை நேரடியாக நீர்நிலையில் கலக்கலாம். 300-500 அளவை 150 150-300 என்னும் வரம்பில் விளாவுவதாக இருந்தால்,படி வித்தல் செய்து சிதறிய திண்ம மி.கி./லி.க்கு கொண்டுவர வேண்டும். என்னும் வரம்பில் வேதி வீழ்படிதல் தேவை. 150க் கும் குறைவாக விளாவல் காரணி இருப்பின், கழிவு நீரில் உ.ஆ.தே. 20க்கு மேல் இருத்தல் கூடாது. கழிவகற்றம் செவ்வனே செய்யப்பட வேண்டும். படிவித்தல் (sedimentation). சிதறிய திண்மங்கள் படிதல், நீரோட்டத்தில் அக்கட்டத்திற்கு அப்பால் நீரின் மாசு குறைய உதவும். இவ்வாறு வீழ்படியும்