850 கழிவுநீர் அகற்றல்
850 கழிவுநீர் அகற்றல் கழிவு மீண்டும் நீரோட்டத்தில் கலந்தாலோ, அவை சிதைவுற்று, அவற்றின் சிதைவு விளைபொருள்கள் நீரோட்டத்தில் கலந்தாலோ நீரின் தூய்மை கெட் லாம். சூரிய ஒளி. இதிலுள்ள 5% புறஊதாக்கதிர்கள் தொற்று நீக்கம் செய்யவல்லன; ஆல்கா (Algae) போன்ற பாசிகளை வளரச் செய்யவல்லன. ஆல் காக்கள் பகல் நேரத்தில் ஆக்கிஜனை (ஒளிச்சேர்க்கை வாயிலாக) வெளிவிடுகின்றன. இரவு நேரத்தில் ஆக்சிஜனைப் பயன்படுத்துகின்றன. எனவே ஆல்கா நிறைந்த நீரில் (கரைந்த) ஆக்சிஜன் பகலில் நிறைந் தும், இரவில் குறைந்தும் காணப்படும். மொத்தத் தில் சூரிய ஒளி நீரின்மீது படுவது நன்மையே தரும். கரைதிறனை வெப்பநிலை, நீரில் ஆக்சிஜனின் வெப்பநிலை பாதிக்கிறது. மேலும் உயர் வெப்ப நிலைகளில் சில பாக்டீரியாக்களின் செயல்திற கூடலாம் அல்லது குறையலாம். காற்றூட்ட விரை வும் (airflow velocity) வெப்பநிலையைப் பொறுத்த தாகும். கடலில் கலத்தல், அலை நீரில் கழிவுகளைக் கலப்பது கடற்கரை ஓரங்களில் அமைந்த நகரங்களில் தொழிற்சாலைகள் பின்பற்றிவரும் வழிமுறையாகும். தூய நீரைவிட உப்புநீருக்கு அடர்த்தி கூடுத லாகையில் கழிவு, உப்புநீரின் மேற்பரப்பில் பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் உப்புநீரில் கரைந்த ஆக்சிஜனின் செறிவும் மிகக்குறைவு. இதனால் கழிவு கலந்த கட ல்நீரின் உ.ஆ. தே. உயரக்கூடும். கரைக்கு மிகத்தொலைவில் கடலின் ஆழமான பகுதியில் இரும்பு அல்லது சிமெண்ட் காங்கீரிட் குழாய்களின் மூலம் எடுத்துச்செல்லப்படும் கழிவுநீர் பல துளைகள் வழியே பீச்சி அடிக்கப்படுகிறது. இதற்குச் செலவு கூடுதலாகும். விளைநிலத்தில் இடுதல். நீர்ப்பாசனத்திற்குக் கழிவு நீரைப் பயன்படுத்துவதற்கு முன்பாகத் துணை நிலை திருத்த முறைகளைக் (secondary treatment) கையாளுதல் இன்றியமையாத் தேவையாகும். இம் முறையைச் செயல்படுத்துவதற்கு மூன்று முறைகள் அவை, தெளிபாசனம் (spray irrigation), விரைவு உட்பரத்தல் (rapid infiltration), நிலத்தின் மீது பாயவிடல் (overland run off) ஆகும். முதல் இரு முறைகளும் மண்ணின் உள்ளூறல் (percolation ) ரு உள்ளன. படம் 2. மையப் பாசன முறை