கழிவுநீர் அகற்றல் 853
☐ WORTHINGTOM| படம் 6. பொடியாக்கி படியவைப்புத் தொட்டிகளைக் கழிவு நீரை நேரடி யாகத் சகதி தூய்மைப்படுத்துவதற்கும், கிளர்வுபெற்ற முறையில் (activated sludge process) தூய்மையாக்கப்பட்ட நீரையோ, சொட்டும் வடிகட்டி (trickling filters) முறையில் தூய்மையாக்கப்பட்ட நீரையோ தெளியவைப்பதற்கும் பயன்படுத்தலாம். இத்தொட்டியிலுள்ள நீரில் மிதக்கும் ஏடு வடிவிலான கசடைக் கரண்டிகளால் அப்புறப்படுத்தலாம். அழுகு தொட்டி (septic tank) இத்தொட்டியில், மேல் பகுதியில் கழிவு நீரிலிருந்து படியவைத்தலும், அடிப்பகுதியில் காற்றில்லா வழிச் சிதைவும் (anaerobic decomposition) நிகழ்கின்றன. சகதி செரிப்பு நிகழ் பரப்பில் கையில் வளிமங்கள் வெளியாகி, நீரின் அழுக்கு நுரை தோன்றுகிறது. தொட்டியின் வெளி வாய்க்கு முன்பாக பொருத்தப்பட்டிருக்கும் தடை யமைப்பு (baffle) இந்நுரையைத் தொட்டியிலேயே நிறுத்திவைக்கிறது. தொட்டியின் உள் வழியில் (inlet) உள்ள மற்றொரு தடையமைப்பு உட்புகும் கழிவு நீரின் செறிவு, தொட்டி முழுதும் சீராக இருக்க வெளியேறும் உதவுகிறது. அழுக்கு நுரை, சகதி கழிவுநீர் அகற்றல் 853 படம் 7. நெகிழி சொட்டும் வடி கட்டி